“தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து, (1 தெசலோனிக்கேயர் 1:2)”.
உங்கள் அன்பை மற்றவர்களிடத்தில் வெளிப்படுத்தும்பொழுது அவர்களிடத்தில் இருந்து எதாவது பிரதியுபகாரம் பெற்றுக்கொள்ளலாம் என்பதைப்பற்றியது அல்ல. இது தேவன் மீது நீங்கள் வைத்த அன்பும், அந்த அன்பினால் ஏவப்பட்டு அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதே.
சாத்தியமில்லாத வேளையில்கூட நீங்கள் அன்பிலே நடக்கவேண்டும். மேலும் நீங்கள் அன்பு கூருகிறவர்கள் உங்களை புறம்பே தள்ளினாலும் தொடர்ந்து அன்பு கூருங்கள்.
உங்களுக்கு நீங்களே உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் “என்னதான் நடந்தாலும் நான் அன்பின் பாதையிலே வழிநடப்பேன்.
எபேசியர் 5:2இல் “கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்”. தேவனோடு உடன் பயணிக்கவேண்டுமாயின் அவர் அன்பு கூருவதுபோலவே நீங்களும் அன்பு கூரவேண்டும்.
1யோவான் 4:7-8 பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்”.
நீங்கள் அன்பில் நடப்பதே நீங்கள் தேவனில் அன்பாக இருக்கிறீர்கள் என்பதற்கு அத்தாட்சியாகும். ஆனபடியினால் உங்கள் வாழ்வு தேவ அன்பை பிரகாசமாக ஒளிரும் வாழ்வாக அமையட்டும்.
உங்களைச்சுற்றிலும் இருப்பவர்கள் பெலமாகவும், நல்ல வாழ்வைப்பெறுவதற்கும் உதவியாக இருங்கள்.
இந்த உலகத்திற்கு நீங்களே ஆசீர்வாதமாக இருக்கிறீர்கள்.
உங்களிடம் இருக்கும் தேவனுடைய அன்பை இன்றே வெளிப்படுத்துவதற்கு வகைதேடுங்கள்.
ஜெபம்
—————
அன்பின் தகப்பனே! சகல சம்பூரணமான ஆசீர்வாதத்தினால் என்னை ஆசீர்வதித்து நிறைவான வாழ்வை தந்ததற்காக உமக்கு நன்றிகள். என்னைச்சுற்றிலும் இருப்பவர்களுக்கு உம்முடைய அன்பை வெளிப்படுத்தும் ஊடகமாக என்னைப்
பயன்படுத்தியிருக்கிறீர். என்னுடைய வாழ்வு உம்முடைய அன்பையும், நீதியையும் வெளிப்படுத்துகிறது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே. ஆமேன்!
மேலதிக வாசிப்பு
எபேசியர் 5:1-2;
யோவான் 13:34;
1 தெசலோனிக்கேயர் 3:12-13
Thanks 🙏
Pas. Mahen