உணர்வுபூர்வமாக தேவ வார்த்தையிலே தரித்திருங்கள் !
————-///———///———
“உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். “ (ஏசாயா 26: 3).
உங்கள் வாழ்க்கையில் கிருபையின்மேல் கிருபை பெறவும், விசுவாசத்திலே வல்லவர்களாக வளரவும், தேவ வல்லமையினால் மேம்பட்ட வாழ்க்கையை அனுபவிக்கவும் வேண்டுமா?
நீங்கள் கட்டாயம் சில தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
நீங்கள் உங்களை சுற்றிலும் சரியான, தெளிவான சத்தியத்தினால் உங்களை நிறைத்துக் கொள்ளுங்கள்.
அந்தத் தெளிவான சத்தியம் தேவனுடைய வார்த்தையில் மாத்திரமே நிறைந்திருக்கின்றது.
நீங்கள் தேவ வார்த்தைக்கு இடம் கொடாத பட்சத்தில் நீங்கள் அறிந்தோ அறியாமலோ இந்த உலகத்தின் எதிர்மறையான பொய்களுக்கு உங்களை ஒப்புக்கொடுக்கிறீர்கள். அது உங்களை வெற்றிகரமான வாழ்வை வாழ விடாமல் தடைபண்ணுகிறது.
தேவ வார்த்தையை நன்கு கற்றுக் கொண்டும், அதையே தியானித்துக் கொண்டும் இருப்பேன் என்கின்ற உணர்வு பூர்வமான தீர்மானத்துக்கு வாருங்கள்.
தேவ வார்த்தை ஆனது உங்களுக்குள் நிறைவாகவும், செறிவானதாகவும் நிறைந்திருப்பதாக.
ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக தேவ வசனத்தை கவனித்து கேட்கும் பழக்கத்தை உறுதியாக கைக்கொள்ளுங்கள்.
நீங்கள் சிலசமயம் இப்படியாக கேள்வி எழுப்பலாம். இந்தப் பரபரப்பான உலகத்திலே இடைவிடாமல் இந்த வசனத்தை கற்றுக்கொள்வதற்கும், தியானிப்பதற்கும் நான் எப்படி நேரத்தை ஒதுக்குவது?
நீங்கள் காலை வேளையிலே வேலைக்கு செல்ல ஆயத்தமாகும் பொழுதும், அலுவலகத்திற்கு பயணிக்கும்பொழுதும் உங்கள் கைபேசியில் இருந்து (mobile ) விசுவாசத்தை வளர்த்தெடுக்கும் கிறிஸ்தவ நற்செய்திகளை இடைவிடாமல் கேட்கலாம்.
இவ்வாறாக தேவனுடைய வார்த்தையை தொடர்ச்சியாக நீங்கள் கேட்டுக் கொள்வதன் மூலம் உங்கள் சிந்தையை எல்லா வேளையிலும் தேவ வார்த்தையினால் நிரப்பிக்கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் விசுவாசத்தை தொடர்ச்சியாக வளர்த்துக்கொள்ளலாம். அதன்மூலம் உலகத்தில் தோன்றும் எல்லா சவால்களையும் வெற்றிகரமாக மேற்கொள்ளலாம்.
நீங்கள் தேவவார்த்தைக்குள் இருக்கும் பொழுது உங்கள் விசுவாசம் மிகவும் பலமுள்ளதாக இருக்கும்.
ரோமர் 10:17 கூறுகிறது “ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.” சில சமயம் நீங்கள் பஸ்ஸிலோ, ரயிலிலோ நீண்ட தூரம் பயணிப்பவர்கள் ஆக இருப்பின் அந்த நேரத்தை நல்ல வேத வசனங்களை, செய்திகளை கேட்பதற்காக பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த உலகத்தில் இருந்து உங்களைப் பிரித்துக் கொண்டு தேவ வசனத்திற்குள் வாழ்வதற்கு இது உதவி செய்யும்.
இந்த வேளையிலே உங்களுக்கு வசதியானால் பைபிளையும், விசுவாசத்தை வளர்க்கும் தரமான புத்தகங்களையும் வாசியுங்கள்.
உங்கள் ஆவிக்குரிய காதுகள் கூர்மையாக இருப்பதினால் தொடர்ந்தும் தேவ வார்த்தையை கவனித்துக் கேளுங்கள்.
இந்த உலகத்திலே சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொள்ளும் பொழுது உங்கள் விசுவாசம் அவை எல்லாவற்றையும் தடுத்து நிறுத்த கூடியவையாக இருக்கும்.
நீங்கள் எப்பொழுதும் வெற்றி பெறுவீர்கள். ஆகையினால் தேவ வார்த்தையை இடைவிடாமல் கற்றுக்கொண்டும், தியானித்துக் கொண்டும் இருப்பது வெற்றிகரமான வாழ்க்கையை எப்பொழுதும் வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.
எங்கள் Life Giving Grace International Ministry க்கூடாக உங்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும் விசுவாச அறிக்கைகள், நற்செய்திகள், சாட்சிகள் என்பவற்றை கவனித்துக் கேட்டு தியானித்து உங்கள் ஆவியை தேவ வார்த்தையினால் பலப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா தகவல்களும் https://lifegivinggrace.com/digital-library என்ற முகவரியினூடாக தரவிறக்கம் செய்யுங்கள். இது நிச்சயமாக உங்கள் வாழ்வின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்ற மிகவும் உதவியாக இருக்கும்.
ஜெபம்
————-
அன்பின் பரலோக தகப்பனே! இந்த அருமையான விலைமதிப்பற்ற தேவ வார்த்தையினால் என்னை இன்று ஆசீர்வதித்ததற்காக உமக்கு நன்றிகள். நான் உணர்வு பூர்வமாக உம்முடைய வார்த்தையிலே தரித்திருந்து அதனை கற்றுக்கொண்டும் தியானித்துக்கொண்டும் இருக்கிறேன். என்னுடைய விசுவாசமானது எல்லா சவால்களையும் எதிர்த்து எப்பொழுதும் வெற்றிபெறுகின்றதாக இருக்கின்றது. இயேசு கிறிஸ்துவின் மேலான நாமத்தினாலே.
ஆமென்!
மேலதிக வாசிப்பு:
1 யோவான் 5: 4; 2 கொரிந்தியர் 3:18
Thanks
Pas. Mahen
I’m gone to say to my little brother, that he should also go to see this webpage on regular basis to obtain updated from most recent news update.