பரலோக ராஜ்ஜியம் உங்களுக்குள் இருக்கின்றது !
—————-///———-///—

“யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து” (மாற்கு 1:14)
இயேசு கிறிஸ்து தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்க்கிப்பதற்காகவே வந்தார். மேலும் அவர் சொன்னார் “காலம் நிறைவேறிவிட்டது பரலோக ராஜ்யம் சமீபத்தில் இருக்கிறது” என்றார் (மாற்கு 1:15).

தேவனுடைய ராஜ்யம் என்றால் என்ன? அது ஒரு இடத்தை குறிப்பது அல்ல. தேவனுடைய ஆளுகையை குறிக்கிறது.
இங்கே இயேசு கிறிஸ்த்து தேவனாக ஆளுகை செய்து தன்னுடைய மகிமையையும், நன்மைகளையும் வெளிப்படுத்துகின்றார்.
ஆகையினால்தான் பரலோக ராஜ்ஜியத்தின் தவறான போதனைகளை குறித்து கவனமாக இருக்கும் படிக்கு எச்சரிக்கின்றார்.
பரலோக ராஜ்யம் அங்கே இருக்கிறது இங்கே இருக்கிறது என்று சொன்னால் அதை நம்ப வேண்டாம் என்று அவர் எச்சரித்தார். ஏனென்றால் பரலோக ராஜ்ஜியம் உங்கள் மாம்சத்தினால் அறியப்பட்டு அனுமானிக்ககூடாதது. ராஜ்ஜியம் உங்களுக்குள்ளேயே இருக்கின்றது (லூக்கா 17: 20-21).

தேவனுடைய திட்டமானது இந்தக் காலத்திலே அவருடைய ராஜ்ஜியத்தை மனிதர்களுடைய இதயத்தில் ஆவிக்குரிய சாட்சியமாக ஸ்தாபிப்பது ஆகும்.
யோவான் 18:36-37 இல் இயேசு பிலாத்துவிடம் கொண்டுவரப்பட்டதை நினைவுகூருங்கள்; பிலாத்து அவரிடம் சில கேள்விகளைக் கேட்டார், அவர் பதிலளித்தார், “… என் ராஜ்யம் இந்த உலகத்திற்குரியது அல்ல …” (யோவான் 18:36);
தன்னுடைய ராஜ்ஜியம் கண்ணால் காணக்கூடிய கட்டமைப்புகளை கொண்ட ஒரு ராஜ்ஜியம் அல்ல. ஆயினும் இயேசு அந்த ராஜ்ஜியம் வந்தாயிற்று என்றார். உண்மையாகவே தேவராஜ்யசியம் எங்கள் இருதயத்தில் வந்தாயிற்று.

இன்றைய நற்செய்தி என்னவென்றால் தேவனுடைய ராஜ்ஜியம் மனிதர்களுடைய இருதயங்களில் ஸ்தாபிக்க முடியும். “தேவனுடைய ராஜ்ஜியம் ஏற்கனவே வந்தாயிற்று” என்று இயேசு கிறிஸ்து சொன்னார் இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: “ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.” (யோவான் 14:23).

இது பழைய ஏற்பாட்டு காலங்களில் இல்லாமல், ஆபிரகாம், மோசே, எலியா, எலிசா, தாவீது, சாலமோன் மற்றும் பழைய ஏற்பாட்டு தேவ மனிதர்கள் நாட்களில் சாத்தியமாகவில்லை. ஆனால் இப்பொழுதோ நம்முடைய நாட்களில் சாத்தியமாயிற்று.
இயேசு கிறிஸ்து வந்த பிறகு அவரோடே கூட ராஜ்ஜியத்தையும் கொண்டு வந்தார். இப்பொழுது நாம் அவரைப் பெற்றுக் கொண்ட படியால் எங்களுக்குள் தேவ ராஜ்யம் வந்தாயிற்று.

மகிமை, கிருபை, தேவனுடைய ஜீவன் மற்றும் எல்லா தெய்வீகமும் எங்கள் இருதயத்தில் வந்தாயிற்று.
தேவன் தம்முடைய வீடாகிய எங்களுக்குள்
இருக்கிறார்.
எங்கள் பரலோக ராஜ்ஜியத்தின் ஒரு குடிமகனாக மாத்திரமல்ல, நாம் அவரை சுமக்கிறவர்களாய் தெய்வீக குணாம்சங்களை வெளிப்படுத்துகிறவர்களாக இருக்கிறோம். அல்லேலூயா!

ஜெபம்
————-
அன்புள்ள தகப்பனே! எங்கள் இருதயத்தில் இருக்கும் உங்கள் ராஜ்யத்திற்காக நன்றி கூறுகிறேன். உம்முடைய மகிமையும், நீதியும் எனக்குள் இருக்கிறது. அவைகள் என் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. உம்முடைய ராஜ்ஜியம் ஆளுகை செய்கின்றது. இந்த பூமியிலே அது ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. உம்முடைய நற்செய்தியை அறிவிக்கும்பொழுது மனிதர்களுடைய இருதயத்திலே உம்முடைய ராஜ்ஜியம் இப்பொழுதே ஸ்தாபிக்கப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவின் நாமத்த்தினாலே ஆமேன்!

மேலதிக வாசிப்பு: கொலோசெயர் 1:27; 2 கொரிந்தியர் 4: 6-7; லூக்கா 17:21

Thanks 🙏 Pas. Mahen