Ps John

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
(மாற்கு 16:17-18)

உங்கள் வாழ்க்கையிலே இயேசு கிறிஸ்துவின் நாமத்தை
எப்படி பயன்படுத்துவது என்று கற்றுக்கொள்வீர்களானால்
ஒவ்வொரு நாளும் நினைத்துப்பார்க்க முடியாத ஆசீர்வாதங்களும், வெற்றிகளையும் பெற்றுக்கொள்வீர்கள். அவருடைய நாமம் ஒரு ஆயுதமாக இருக்கிறது. இதுவே புதிய உடன்படிக்கையில் உள்ள மிகப்பெரிய ஆசீர்வாதமாக இர்க்கிறது. கொலோசெயர் 3:17 இல் வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
அவருடைய நாமத்தினாலே நீங்கள் இயங்கும்போது நீங்கள் ஒருபொழுதும் தோற்றுப்போவதோ அல்லதோ இழந்துபோவதோ இல்லை. அவருடைய நாமம் எல்லா கதவுகளையும் திறக்கும் திறவுகோலாய் இருக்கிறது. பெரும்பாலனவர்கள் இந்த நாமத்தின்மேல் உள்ள வல்லமையை, அதிகாரத்தையும் அறியாதவரகளாக இருக்கிறார்கள். ஆனால் தேவனுக்கே நன்றிகள்! திருச்சபைகள் வரவர முன்னேற்றமடைந்தும், இந்த அறிவிலே வர வர விருத்தியடைகிறார்கள். பெரும்பாலன கிறிஸ்தவர்கள் இப்பொழுது கிறிஸ்துவுக்குள் தாங்கள் யார் என்பதை கற்றறிந்து வருகிறார்கள். மகிமையிலே தாங்கள் வந்திருப்பதையும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஆளுகையும் செய்கிறார்கள்.
பிலிப்பியர் 2:9-11. ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

அவர் எல்லா அதிகாரத்தையும் கிறிஸ்துவின் நாமத்திற்குள் வைத்து இந்த நியதியை பரலோகம், பூமி, பாதாளம் எல்லாவற்றிற்கும் சட்டபூர்வமாக்கினார். யோவான் 14:14 இல் அவருடைய நாமத்தினாலே வற்புறுத்தும்பொழுது அதை நிறைவேறுவதற்கு இயேசு கிறிஸ்துவே உத்தரவாதமாக இருக்கிறார். உங்கள் குடும்பத்தில் யாராவது சுகயீனமாக இருந்தால் உடனே வைத்தியரையே, அல்லது மாத்திரைகளையோ நாடாதீர்கள். அந்த சூழ்நிலைகளை கட்டுப்பாட்டுக்குள் எடுத்து “இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இந்த வலியை, நோயை கடிந்து அப்புறப்படுத்துகிறேன்” என்று கட்டளை இடுங்கள். எந்த வியாதியோ அந்த வியாதியின் பெயரைச் சொல்லி “வெளியே போ” என்று இயேசுவின் நாமத்தினாலே கட்டளையிடுங்கள். “வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்குங்கள்” என்று அவர் சொல்லியிருக்கிறாரே. ஆனபடியினால் அவருடைய நாமத்தினாலே குணமாக்குவது எங்களுடைய கடமையாக இருக்கிறது. அவருடைய நாமம் ஒருபொழுதும் தோற்ருப்போவது இல்லை.

இப்பொழுதும்கூட வியாதிகளை கடிந்து அப்புறப்படுத்துங்கள். உங்கள் குடும்பத்தில், வேலைஸ்தலத்தில், பாடசாலையில், உங்கள் சூழ்நிலையில் தோன்றும் எல்லா குளப்பங்களையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவாருங்கள். நீங்கள் நிறைவாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதையும். நேர்த்தியான இடங்களிலே உங்கள் ஆசீர்வாத பங்கு அடிக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று அறிக்கைபண்ணுங்கள். அவருடைய நாமத்தை பயன்படுத்தி உங்களுக்கு வேண்டிய விருப்பங்களையும், ஆசீர்வாதங்களையும் உங்களுக்காகவும், பிறருக்காகவும் நிறைவேற்றிக்கொள்ளுங்கள்.

ஜெபம்
அன்பின் தகப்பனே! இயேசு கிறிஸ்து என்னும் மேலான நாமத்தை எங்களுக்கு மிகப்பெரிய இலவசமான, வரமாக தந்ததற்காக உமக்கு மிக்க நன்றிகள். இந்த உலகத்தில் தோன்றியிருக்கிற, தோன்றப்போகிற எல்லாம் இயேசுவின் நாமத்திற்கு கீழ்ப்படிந்திருக்கிறது. இதைக்கொண்டு என் சூழ்நிலைகளை மாற்றி உம்முடைய சித்தத்தை இந்த பூமியிலே நிறைவேறுவேன். நான் வெற்றிகரமாக வாழ்ந்து இயேசுவின் நாமத்தினாலே சூழ் நிலைகளை மாற்றி ஆளுகை செய்வேன். ஆமேன்!

மேலதிக வாசிப்பு
பிலிப்பியர் 2:9-11; யோவான் 16:23-24; கொலோசெயர் 3:17

By Ps John

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *