Pastor John
ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர்: நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
( அப்போஸ்தலர் 17:28 )
மறுபடியும் பிறந்த உங்களுக்குள் வல்லமையுள்ள தேவன் வாசம்பண்ணி உலாவுகிறார். 2 கொரிந்தியர் 6:16. தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
இது ஒரு வாக்குத்தத்தமோ அல்லது ஒரு கணிப்போ அல்ல. நீங்கள் இப்பொழுதே ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்கள். அவர் உங்களுக்குள் வாழ்ந்து உலாவிக்கொண்டிருக்கிறார்.
1 கொரிந்தியர் 3:16. நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
இங்கே ஆலயம் என்று குறிப்பிடுவது கிரேக்க மொழியிலே தேவப்பிரசன்னத்தை குறிக்கிறது. அதுவே நீங்களாக, தேவப் பிரசன்னத்தை உடையவரகளாக இருக்கிறீர்கள். நீங்கள் அவருடைய நடமாடும் தலைமைச் செயலகமாக இருக்கிறீர்கள். நீங்கள் எங்கே போகிறீர்களோ அங்கே அவரும் வருகிறார். இங்கே தேவன் இருக்கிறாரா என்று யாரும் கேட்டால் “ஆம்” என்று உடனடியாக பதில் சொல்லவேண்டும். ஏனென்றால் அவர் உங்களுக்குள் வாசம் பண்ணுகிறார். ஆல்லேலூயா!
இந்த சிந்தையே உங்கள் வாழ்க்கை மேன்மைய்க்கும் ஆளுகைக்கும், உயர்விற்கும், சுகத்திற்கும் மற்றும் முடிவில்லாத வெற்றிகளுக்கும் உத்தரவாதம் தருகிறது. ஏனென்றால் கொலோசேயர் 1:27 இன் படி கிறிஸ்து உங்களுக்குள் வாசம்பண்ணுகிறார். அவர் உங்களுக்குள் வாசம்பண்ணுவதால் நீங்கள் வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்கிறவர்கள் அல்ல. மாறாக நீங்கள் எல்லாவற்றிலும் முற்றுமுழுதாக வெற்றி பெற்றுள்ளீர்கள்.
1 யோவான் 4:4. பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
பிசாசும் அதன் வீழ்ந்து போன உலகத்தை நீங்கள் கிறிஸ்துவுக்குள் ஏற்கனவே வெற்றி பெற்றீர்கள். உங்களுக்குள் அவர் நிரந்தரமாக வாசம்பண்ணுகிறார் என்பது நீங்கள் எப்பொழுதும் வெற்றி பெற்றதும் மகிமையிலே நடைபோடும் வாழ்வை உறுதிப்படுத்துகிறது.
அறிக்கை
அன்பின் தகப்பனே, பூமியிலே என்னை உம்முடைய நடமாடும் தலைமைச்செயலகமாக மாற்றியதற்காக உமக்கு மிக்க நன்றிகள். உமக்குள் நான் பிழைக்கிறேன், அசைகிறேன், இருக்கிறேன். எந்த வியாதிக்கோ, நோய்களுக்கோ என்னுடைய சரீரத்தில் எந்த இடமும் இல்லை. ஏனென்றால் உம்முடைய பரிபூரணத்தினாலும் நான் நிரப்பப்பட்டு உம்முடைய இராட்சியத்தின் நன்மைகளை இந்த உலகத்திலே பகிர்ந்தளிக்கிறேன். ஆமேன்!
மேலதிக வாசிப்பு
2 கொரிந்தியர் 4:7-9; கொலோசெயர் 1:26-27