தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.(யோவான் 4:24)

ஜெயித்திட பிறந்தவன் நான்

அதனால் என் வாழ்வு செழிப்பானதே –  //

தேடி வந்து ஜீவன் தந்து உயிர்த்தெழுந்தார்

பாவி என்னை நீதிமானாய்  மாற்றிவிட்டார்  – //

(ஜெயித்திட) – /

 

சிலுவையில் இயேசு அன்று பலியானதால்

பரிசுத்த வாழ்வு எனக்கு தந்தார்

பரலோக தகப்பனின் மகனாகவே

மறுபடி என்னை பிறக்க செய்தார் -2

 

ஜீவன் தந்தவரை வாழ்த்தி  பாடிடுவேன் – 2

இயேசுவே வழி என்று நான் பாடுவேன் -2 (ஜெயித்திட)

 

ஒரு நாழும் என்ன விட்டு விலகாமலே

உன்னதத்தின் ஆவியால் நிரப்பி விட்டார்  – //

இயேசுவின் சாட்சியாய் நாம் வாழவே

தூய ஆவி எனக்கு துணையானீரே – 2

 

வாழ்வை மாற்றி விட்டார்

ஜெயமாய் வாழ வைத்தார் = //

சாத்தானை மிதித்து நான் துரத்திடுவேன் (ஜெயித்திட) – /

 

உழையான சேற்றினின்று எனை  தூக்கினார்

உன்னதத்தில் வாழும்படி உயர்த்தி விட்டார்

ஆபிரகாமின் ஆசீர்வாதம் எனக்குள்ளே

அன்பின் இயேசு கிறிஸ்துவால் அடைந்துவிட்டேன் – //

 

புது சிருஷ்டியாக என்னை மாற்றி விட்டார் -2

உலகத்தில் ஒளியாக நான் ஜொலித்திடுவேன் -2  (ஜெயித்திட)

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.