Sis Jecintha – 11. அவருடைய சத்தத்திற்கு சரியாக பதிலளிக்கவும்
“இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே.” (எபிரெயர் 3:15).
தேவன் தம்முடைய வார்த்தையின் மூலமாகவும், தம்முடைய ஆவியின் மூலமாகவும் நம்மிடம் பேசுகிறார், ஆனால் எல்லோரும் அவருடைய சத்தத்திற்கு சரியாக பதிலளிப்பதில்லை. நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்கும்போது, அவர் உங்களிடம் அதற்கான பதிலை எதிர்பார்க்கிறார். உங்கள் பதில் அவருடைய வல்லமையைச் நடத்துவிக்கிறது. மற்றும் உங்கள் சூழ்நிலையில் அவருடைய வார்த்தை ஜீவனை கொண்டுவருகிறது. சாமுவேலின் நாட்களில், தேவன் அவரை மீண்டும் மீண்டும் அழைத்தார், ஆனால் “கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் ” (1 சாமுவேல் 3:9) என்று ஏலி அவனுக்குக் கற்றுக் கொடுக்கும் வரை சாமுவேலுக்கு எப்படிப் பதிலளிப்பது என்று தெரியவில்லை.
சாமுவேல் சரியாக பதிலளித்தவுடன், தேவன் அவனிடம் பேசத் தொடங்கினார். அதேபோல், நீங்கள் விசுவாசத்தில் கர்த்தருக்குப் பதிலளிக்கும்போது, அவருடைய குரல் தெளிவாகிறது, மேலும் அவருடைய பிரசன்னம் உங்கள் வாழ்க்கையில் மிகவும் வலுவாக வெளிப்படுகிறது. கர்த்தருடைய வார்த்தையை ஒருபோதும் இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஒவ்வொரு அறிவுறுத்தலுக்கும், திருத்தத்திற்கும் அல்லது ஆவியின் தூண்டுதலுக்கும் விசுவாசம் நிறைந்த பதில் தேவைப்படுகிறது. எனவே, கர்த்தருடைய ஒவ்வொரு வார்த்தைக்கும், நீங்கள், “ஆம், ஆண்டவரே” என்று கூறி, அதற்கேற்ப செயல்படுங்கள்.
கர்த்தருடைய வார்த்தைக்கு நீங்கள் விரைவாக பதிலளிக்காதது அவரிடமிருந்து உங்களின் கேட்கும் திறனை மௌனமாக்கலாம் அல்லது பலவீனப்படுத்தலாம். ஆனால் வார்த்தையின்படி உடனடியாகச் செயல்பட உங்கள் ஆவியைப் பயிற்றுவிக்கும்போது, கர்த்தருடைய ஆவி உங்கள் இருதயத்தை ஒளியால், வழிநடத்துதலால் மற்றும் கிருபையால் நிரப்புகிறார். எனவே, உங்கள் தனிப்பட்ட தியானத்தின் போதும், ஜெபத்தின் போதும் அல்லது ஒரு தீர்க்கதரிசனத்தை கேட்கும்பொழுதும் கர்த்தருடைய வார்த்தையைப் பெறுகிறீர்கள். அந்த நேரங்களில் விசுவாசத்தில் விரைவாக பதிலளிக்கவும். பெரும்பாலும், அவரது குரல் மென்மையாகத் தோன்றலாம், ஆனால் அது தெய்வீக சக்தியைக் கொண்டுள்ளது.
ஜெபம்
அன்புள்ள பிதாவே, உம்முடைய வார்த்தைக்கு விசுவாசத்தாலும் அன்பாலும் நான் பதிலளிக்கும்போது, நான் மிகவும் ஆசீர்வதிக்கப்படுகிறேன்; என் இருதயம் உமது கிருபையாலும் சத்தியத்தாலும் நிரம்பி வழிகிறது, மேலும் பரிசுத்த ஆவியின் வல்லமையால் தொடர்ச்சியான முன்னேற்றத்தையும் அதிகரிப்பையும் நான் அனுபவிக்கிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென்.
மேலும் தியானிக்க: யாக்கோபு 1:22; 1 சாமுவேல் 3:10; யோவான் 14:23
Sis Niro – 24. அவர் உங்கள் செழிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்
அநீதியான உலகப்பொருளைபபற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார்
உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்? (லூக்கா 16:11).
கிறிஸ்துக்குள் செழுமை பற்றிய போதனைகளைக் கேட்கும் போது பரிகாசமான கருத்துக்களைச் சொல்லும் கிறிஸ்தவர்கள் சிலர் உள்ளனர். சில நேரங்களில், போதகர்கள் பணம் மற்றும் செழிப்பு செய்தியில் அதிக கவனம் செலுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். எதிரிடையான நிலைமை என்னவென்றால், அதே நபர்கள் பணத்திற்காக நாள் முழுவதும், வாரம் முழுவதும் அயராது உழைக்கிறார்கள். அவர்களில் சிலர் அதைப் பெறுவதற்கு நேர்மையற்ற வழிகளைக் கூட நாடுகிறார்கள், மேலும் அது குறைவாக இருக்கும் போது அடிக்கடி வருத்தப்படுவார்கள்.
நிதிச் செழுமையைப் பற்றி அறிய தேவனுடைய வார்த்தையை விட சிறந்த இடம் எதுவுமில்லை. உங்கள் செழிப்பில் கர்த்தர் மகிழ்ச்சியடைகிறார். வேதம் 3 யோவான் 1:2இல் கூறுகிறது, “பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.
மகிமை
இது சங்கீதம் 35:27இல் உள்ள தாவீதின் வார்த்தைகளை நினைவுபடுத்துகிறது; அவர், “…தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு உண்டாவதாக…’ ஆகவே உங்கள் செழிப்பில் ஆண்டவர் மகிழ்ச்சியடைகிறார். வறுமை, பற்றாக்குறை மற்றும் தேவை ஆகியவற்றில் நீங்கள் வாழ்வது தேவனின் விருப்பம் அல்ல என்பதை இது உங்களுக்குத் தெரிவிக்கும்.
2 கொரிந்தியர் 9:8ல் (ஆங்கில AMPC பதிப்பு) கூறுகிறது, “மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் (எல்லா சூழ்நிலைகளிலும் மற்றும் தேவை எதுவாக சம்பூரணமுடையவர்களாயும், இருந்தாலும்) சகலவித நற்கிரியைகளிலும் (எந்த உதவியும் தேவைப்படாத அளவிற்கு போதுமானதாயும் எந்த நற்கிரியைக்கும் தானதர்மத்திற்கும்
நீங்கள் உபரியாக,(தேவைக்கு மேல் கிடைப்பது) எப்போதும் செழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே அவருடைய சித்தம். அல்லேலூயா! சங்கீதம் 1:1-3ஐப் படியுங்கள்; அது கூறுகிறது, “…கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.”
கிறிஸ்துவில், நீங்கள் தன்னிறைவு பெற்றவர்; உங்களுக்கு தேவையான அனைத்தையும் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். தேவனுக்கு
ஏராளமாக தோத்திரம்!
ஜெபம்
அன்பான பிதாவே, எனக்குள் கிரியை செய்யும் உங்கள் கிருபையினால் நான் உபரியாக எப்போதும் செழிப்புடன் வாழ்கிறதற்கு நன்றி. இதனால் எல்லா நற்கிரியைக்கும் தானதர்மத்திற்கும் பகிர்ந்தளிக்கத்தக்கதாக ஏராளமாக நான் பெற்றிருக்கிறேன். அதற்காக நன்றி. நீர் என் செழிப்பில், மகிழ்வதற்காக நன்றி. இயேசுவின் நாமத்தில், ஆமென்.
மேலும் தியானிக்க: 1 நாளாகமம் 29:12; சங்கீதம் 23:1; யோசுவா 1:8
Sis Mathy – 22, தைரியமும் தேவனிடத்தில் சேருவதும்
தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே…. அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில்
சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது (எபேசியர் 3:9-12).
சில வேத பதிப்புகளில் இந்த வசனங்களை வாசிக்கும் போது, பவுல் எளிமையாக ஒரு ஆழ்ந்த கருத்தை கூறியதை அவர்கள் சரியாக மொழிபெயர்க்க தவறியதை காண்கிறோம். அவர்கள் நாம் தேவனின் பிரசன்னத்திற்குள் சேருவதற்கு தைரியம் இருப்பதாக மொழிபெயர்த்தார்கள். ஆனால், பரிசுத்த ஆவியானவரால் கிறிஸ்து இயேசுவில் இதை ஏற்க்கெனவே பெற்றுள்ளோம். ஆதலால் பவுல் இங்கு எதை குறிப்பிடுகிறார்?
முதலாவதாக, இந்தச் சூழலில் தைரியம் என்பது நாம் சுதந்திரத்துடன் வெளிப்படையாக இருப்பதை குறிக்கிறது, நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்களோ அதைச் சொல்ல முடிவதாகும். உலக அமைப்புகள் வரைமுறைகளுடன் சுதந்திரத்தை வழங்குகின்றன, மாறாக கிறிஸ்து இயேசுவில், நமக்கு முழுமையான பேச்சு சுதந்திரம் உள்ளது.
பிதாவானவரின் பிரசனத்திலும் தேவ தூதர்கள் மற்றும் பிசாசுகள் முன்னிலையிலும் தைரியமாக பேசுவதற்கும், எங்கும் சுதந்திரமாக வெளிப்படையாக பேசுவதற்கும் நமக்கு சுதந்திரம் உள்ளது. இந்த தைரியம் வெறும் வார்த்தைகளை உச்சரிப்பதற்கு அப்பால் உள்ளது; இல்லாத காரியங்களை உண்டாக்குவதற்கும் நமக்கு அதிகாரம் அளிக்கிறது.
இரண்டாவதாக, நமக்கு “சேரும் சிலாக்கியம்” உள்ளது; அதாவது நாம் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எந்த தேசமும் உங்களுக்கு அதன் கதவுகளை மூட முடியாது; ஒவ்வொரு நாட்டிற்கும், எல்லா செல்வ வளத்திற்கும் மற்றும் அனைத்து ஆஸ்திக்கும் செல்ல உங்களுக்கு வழி உண்டு. எபேசியர் 3:12 ஆங்கில MSG . பதிப்பு அதை அழகாக படம்பிடிக்கிறது; அது அது கூறுகிறது, “நாம் அவரை நம்பும்போது, நாம் எதை வேண்டுமானாலும் சொல்ல சுதந்திரமாக இருக்கிறோம், நாம் எங்கு செல்ல வேண்டுமோ அங்கெல்லாம் தைரியமாகச் செல்ல முடியும்.”
மேலும் “சேருவது” என்ற வார்த்தை வரையறுக்கப்பட்ட புரிதலைதான் கொண்டுள்ளது. உங்களுக்குத் தேவையான இடத்திற்குச் செல்வதற்கு மட்டுமல்ல; நீங்கள் ஆவிக்குரிய மற்றும் உலக பிரகாரமானப் பொருட்களுக்கும், எல்லாம் வல்ல தேவனின் ஞானத்தையும் பெற வழி உண்டு. கிறிஸ்துவின் முடிவற்ற, எல்லையற்ற, ஆழமற்ற, கணக்கிட முடியாத மற்றும் குறைந்து போகாத செல்வங்களை நீங்கள் பெற முடியும்.
கிறிஸ்துவில் உள்ள உங்கள் திறன் மற்றும் பரந்த செல்வத்தின் ஆழத்தை நீங்கள் புரிந்து கொள்ளும்போது, நற்செய்தியின்
பரவுதலுக்கு தாராளமாக உதவி செய்வதும் ஒரு வாழ்க்கைமுறையாக மாறும், ஏனென்றால் முடிவில்லாமல் வழங்குவதற்குரிய பாதையை நீங்கள் அறிவீர்கள். அல்லேலூயா!
ஜெபம்
அன்புள்ள பிதாவே, இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தால் எனக்கு தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் எல்லாவற்றையும் அணுகும் சிலாக்கியத்தை கொடுத்ததற்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். உம்முடைய முன்குறிக்கப்பட்ட தெய்வீக சித்தத்தின்படி நான் ஒரு சுதந்தரத்தைப் பெற்றேன். நான் சூழ்நிலைகளுக்கு மேலாக வாழ்கிறேன், உமது ஞானத்தையும் கிறிஸ்துவின் தீராத செல்வத்தையும் அணுக அதற்குரிய வழியை பெற்றிருக்கிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென்.
மேலும் தியானிக்க: எபிரேயர் 4:16; 1 கொரிந்தியர் 3:21-22; எபேசியர் 3:11-12
Sis Saro – சுகவாழ்வுக்கான விசுவாச அறிக்கை 12
I பேதுரு 2:24. நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
இயேசு கிறிஸ்துவின் நாமத்த்தினாலே தெய்வீக சுகம் என்னுடையது.
என்னிடம் தேவ ரகமான ஜீவன் இருக்கிறது.
அந்த ஜீவனானது என்னுடைய ஒவ்வொரு துளி இரத்தத்திலும் நிரம்பியிருக்கிறது.
ஆகையினால் நான் வியாதிப்படுவதில்லை.
என்னுடைய சுபாவத்தில் வியாதிக்கு எந்த பங்குமில்லை.
தேவன் என்னை பார்த்து என்ன சொல்லுகிறாரோ அதுவே நானாக இருக்கிறேன்.
தேவன் என்னை பார்த்து என்னிடம் என்ன இருக்கிறது என்று சொல்லுகிறாரோ அதையே நான் பெற்றுக்கொண்டு விட்டேன்.
தேவன் என்னை பார்த்து என்னால் என்ன செய்ய முடியும் என்று சொல்லுகிறாரோ அதனை நான் செய்யக்கூடியவனாக இருக்கிறேன்.
தேவனுடைய வார்ததை இப்பொழுதே எனக்குள்ளே வேலை செய்து கொண்டிருக்கிறது.
அந்த வார்த்தை எதை பேசுகிறதோ அதையே சரீரத்திலே பிறப்பித்துக்கொண்டிருக்கிறது.
இயேசு கிறிஸ்துவை மரித்தோரில் இருந்து எழுப்பிய ஆவியானவர் எங்கள் சாவுக்கேதுவான சரீரங்களுக்கு உயிரை கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
நான் யார் என்று அறிந்து கொண்டேன்.
நான் வியாதிக்காரனாக இருந்து கொண்டு சுகத்தை பெற்றுக்கொள்ள முயற்சிப்பவன் அல்ல.
மாறாக நான் ஏற்கனவே சுகமாக்கப்பட்டு இப்பொழுதே தெய்வீக சுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
எந்த வியாதியும் வெற்றிகரமாக என்னுடைய சரீரத்திலே வாழ்ந்து கொண்டிருக்க முடியாது.
அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்து இயேசுவுக்குள் சுகத்தோடு வாழும்படிக்கு தேவ வார்த்தை எனக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.
புதிதாக்கும் வல்லமை உள்ள உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்த்துவுக்குள் இந்த நாள் தொடங்கி நான் வாழுகின்றேன்.
எந்த ரகமான வியாதியோ, நோய்களில் இருந்து நான் விடுதலையாக்கப்பட்டு விட்டேன் ஏனென்றால் தேவனுடைய ஜீவன் எனக்குள் இருக்கின்றது. அல்லேலூயா!
இயேசு கிறிஸ்த்துவின் நாமத்தினாலே ஆமென்!
BRO REX – 21. நிலையான, தொடர்ச்சியான சுத்திகரிப்பு செயல்முறை
“அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (1 யோவான் 1:7).
நான் தேவனுடைய வார்த்தையை நேசிக்கிறேன், ஏனென்றால் அது என்ன சொல்கிறதோ அதன்படி வாழும்போது, வாழ்க்கையின்’ அழுத்தத்தை நீக்குகிறது. இது கிறிஸ்தவத்திலிருந்து போராட்டத்தை எடுத்து போடுகிறது. நம்முடைய ஆரம்ப வசனத்தில் நாம் இப்போது படித்ததைப் பற்றி யோசித்துப் பாருங்கள்; கிறிஸ்துவில் நீங்கள் தொடர்ந்து சுத்திகரிக்கப்படுவதால் நீங்கள் பாவ உணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது இதன் அர்த்தம். அவர் ஒளியில் இருப்பது போல் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒளியிலே நடப்பதுதான். இப்படி செய்தால், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் என்று கூறுகிறார். இது தானாகவே செயல்புரியும் சுத்திகரிப்பு. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உங்களை பாவத்திலிருந்து சுத்தப்படுத்த ஜெபிக்க வேண்டும் என்று அவர் கூறவில்லை என்பதை கவனியுங்கள்.
அவர் கூறுகிறார், “இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்,” அதாவது நீங்கள் கேட்காமலே அது நடக்கும். இது ஒரு தொடர்ச்சியான சுத்திகரிப்பு செயல்முறை.
இது ஏன் அவசியம்? நம்மைச் சுற்றியுள்ள உலகம் பாவத்திலும், இருளிலும் மூழ்கியிருப்பதே இதற்குக் காரணம். இருப்பினும், ஒளியில் நடப்பதன் மூலம், உங்கள் தவறுகள், பிழைகள் மற்றும் நீங்கள் அறியாத தவறான செயல்கள் கூடவும் சுத்திகரிக்கப்படுகின்றன. எனவே நீங்கள் அவருடைய ஒளியில் செயல்படுகிறீர்கள் அல்லது நடக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்;
அவருடைய ஒளி அவருடைய வார்த்தைதான் என்பதை யோவான் 15:3 இல் என்பதை காணலாம் “நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்” என்று இயேசு சொன்னதை நினைவில் வையுங்கள். அவருடைய வார்த்தை கழுவுகிறது; அது சுத்தப்படுத்துகிறது.
நீங்கள் மறுபடியும் பிறந்து, ஒவ்வொரு வாரமும் இரட்சிப்பின் ஜெபத்தை சொல்லிக் கொண்டிருந்தால், அதற்கு காரணம் அது வேரேயொரு வித்தியாசமான ஒளியின் கீழ் உங்களை பார்ப்பக்கிறீர்கள். உங்களில் ஏதோ ஒன்று தவறாக இருக்கிறது என்று அந்த ஒளி உங்களை காட்டுவதினால் தான் ஆகும்.
தேவனின் ஒளியின் கீழ் உங்களைப் பாருங்கள். நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள் என்பதை அவருடைய ஒளி காட்டுகிறது. உங்களை இவ்வாறு வார்த்தையாகிய ஒளியில் உங்களை பார்த்து, அதன்படி நடக்கவும். தேவனின் ஒளி என்பது தேவனின் சத்தியம், மற்றும் தேவனின் சத்தியமானது தேவனுடைய வார்த்தை. எனவே, ஒளியில் நடப்பது என்றால், ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்ய, உங்கள் ஆத்துமாவைச் சுத்திகரித்து, செத்தக் கிரியைகளிலிருந்து உங்கள் மனசாட்சியைத் தூய்மைப்படுத்தும் தேவனுடைய வார்த்தையில் நடப்பதாகும்.
ஜெபம்
அன்புள்ள பிதாவே, என்னில் கிரியை செய்யும் உமது கிருபைக்காகவும், உமது நீதியின் வல்லமைக்காகவும் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்! நான் உமது ஒளியில் நடக்கும்போது, நான் இயேசுவின் இரத்தத்தால் தானாகவே கழுவப்பட்டு, சுத்தப்படுத்தப்படுகிறேன். நான் இயேசு கிறிஸ்துவின் கிருபையால் நியாயப்படுத்தப்பட்டுள்ளேன், பொல்லாங்கனின் குற்றச்சாட்டிலிருந்து விடுபட்டு கிறிஸ்துவின் நீதியில் நடக்கிறேன். உமது நீதி என் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களில் வெளிப்படுபடுகின்றன. இயேசுவின் நாமத்தில், ஆமென்.
மேலும் தியானிக்க: 1 கொரிந்தியர் 6:11; யோவான் 15:3; எபேசியர் 5:25-26