வேதம் நீதிமொழிகள் 4:18 இல் , “….. நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.

என்னுடைய வாழ்க்கையிலே நேற்றைய நாளைய விட இன்றைய நாள் மிகவும் நன்மையான நாள் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கட்டளையிடுகிறேன்.

என்னுடைய விசுவாசம் என்னுடைய வாழ்க்கையிலே எனக்கு வேண்டியவற்றை எல்லாம் உருவாக்கிக் கொள்வதினாலே, வர வர முன்னோக்கிய பாதையில் முன்னேறிக்கொண்டு நடை போடுகின்றேன்.

நான் அறிந்து கொண்ட வாழ்வு, மேல் நோக்கியதும் முன்னேற்றம் நிறைந்த வாழ்க்கையுமாக இருக்கின்றது.

என்னுடைய நாளைய நாள் இன்றைய நாளை காட்டிலும் மிகவும் நன்றாக அமைந்திருக்கும் என்று அறிக்கை பண்ணுகிறேன்.

ஒவ்வொரு நாளும் என்னுடைய வாழ்க்கையில் கடந்து போகும் பொழுது, நான் மேலும் பலம் உள்ளவனாகவும் சுகம் உள்ளவனாகவும் இருக்கின்றேன்.

என்னுடைய இளமை கழுகைப் போல நாளுக்கு நாள் புதுப்பிக்கப்படுகிறது, நாளுக்கு நாள் பலத்தின் மேல் பலமடைந்து வளர்ந்து கொண்டிருக்கின்றேன்.

வேதம், ரோமர் 8:2 இல் “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. அல்லேலூயா ! For the law of the Spirit of life in Christ Jesus hath made me free from the law of sin and death”.

உலகத்தாரை போல அல்ல; என்னிடத்தில் ஆவிக்குரிய நியமம் (spiritual law) வேலை செய்கின்றது.
இயேசு கிறிஸ்துவின் ஆவியின் பிரமாணமே எனக்குள்ளே வேலை செய்கின்றது.

என் ஒவ்வொரு ரத்தத் துளிக்குள்ளும், தசை நார்களுக்குள்ளும், எலும்புகளுக்குள்ளும், உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை அந்த ஜீவனின் பிரமாணம் வேலை செய்கின்றது.

நான் சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலும் இயேசு கிறிஸ்துவின் ஜீவனின் பிரமாணம் வேலை செய்கின்றது.
என்னுடைய வாழ்க்கையிலும் சரி, என்னுடைய சரீரத்திலும் சரி, சிந்தையிலும் ஆவியிலும் எந்தத் தடையும், தேக்கமும் இல்லை.

உலகத்தில் உள்ள சாதாரண ஜனங்கள் வியாதிக்கும், நோய்களுக்கும், அழுத்தத்திற்கும் உட்பட்டு இருக்கலாம் ஆனால் என்னுடைய நிலையோ முற்றிலும் வேறுபட்டது.

நான் சாதாரண மனிதர்களைப் போல வெளியிலேயே காணப்பட்டாலும் எனக்குள்ளே உலகத்தில் இருந்து வேறுபட்ட, கிறிஸ்துவின் ஜீவனுள்ள ஆவியின் பிரமாணம் வேலை செய்கின்றது.
அல்லேலூயா !

நான் ஜீவனுள்ள ஆவியின் பிரமாணத்தினால் மறுபடியும் பிறந்து இருக்கின்றேன். அந்தப் பிறப்பில் வியாதிகளுக்கு இடம் இல்லை. இதன் அர்த்தம் என்னவென்றால் வியாதிகளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தேவனுக்கே மகிமை உண்டாவதாக!

நான் யார் என்று அறிந்து கொண்டேன். என்னுடைய வாழ்க்கையிலே தேவனுடைய கிருபை நிறைந்த வார்த்தைகள் நிறைவேறி வருகின்றன.
ஆமென்!

ஜீவனுள்ள ஆவியின் பிரமாணத்தின் கிரியைனால் நான் மறுபடியும் பிறந்துளேன்; வியாதி இல்லாத வாழ்வு என்னுடைய புதிய பிறப்பின் நிஜமாக இருக்கின்றது.

தேவனுக்கே மகிமை உண்டாவதாக !

Amen 🙏
Pas. Mahen