மத்தேயு 5 :44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
தேவனுடைய குணாம்சத்தின் மொத்தமுமே அன்பாக இருக்கிறது ஆகையினால் அன்பில் நடப்பதன் மூலம் அவரை பின்பற்ற முடியும். எபேசியர் 5:2. கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.
1 யேவான் 4:7. பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
8. அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.
எங்கள் விசுவாச பயணத்திலே எப்பொழுதும் எங்களை சிலர் சோதித்து பார்ப்பார்கள்; உங்களோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொருத்தரும் உங்கள் நன்மைக்கே தேவனால் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு உதவி செய்பவர்களாக இருந்தாலும் சரி அல்லது எதிராக இருந்தாலும் சரி வித்தியாசமே இல்லை. தேவன் உங்களை உயர்த்தும் திட்டத்தை ஒன்றுமே தடுத்து நிறுத்த முடியாது. அவர்கள் இரக்கமாகவும் அன்பாகவும் உதவியாகவும் இருந்தால் அதை ஏற்றுக்கொண்டு தேவனுக்கு நன்றி சொல்லுங்கள், இதற்கு மாறாக இருந்தாலும் அவர்கள் மீது அன்பு கூறுங்கள்.
உங்களை தவறாக குற்றம் சாட்டினாலும், உதாரணமாக உங்களுக்கு எதிராக பொய் சொன்னாலும் அதனை நியாயப்படுத்தும் போது நீதிமானுக்குரிய பண்போடு அணுகுங்கள். அன்பிலே நடந்து கொள்ளுங்கள். அன்பு வல்லமையானது. சகல லோகத்திலும் அன்பே மிகப்பெரிய சக்தியாக உள்ளது, எப்பொழுதும் வெற்றி பெறுகிறதாயும் உள்ளது. நாங்கள் அன்பிலே நடந்து கொள்வதே நாம் தேவனில் அன்பாய் இருக்கிறோம் என்பதற்கு ஆதாரமாக உள்ளது. மற்றும் இதுவே நாம் தேவனோடு ஒன்றாக இணைந்துள்ளோம் என்பதையும் அவருடைய சிந்தனையை கொண்டுள்ளோம் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.
ரோமர் 5:5 சொல்கிறது தேவ ஆவியினால் தேவனுடைய அன்பு உங்கள் இருதயத்தில் ஊற்றப்பட்டு இருக்கிறது. இதன் அர்த்தம் அவர் அன்பு கூருவது போல நாமும் அன்பு கூரும் திறனை பெற்றுள்ளோம் என்பதே.
இயேசு கிறிஸ்து சொன்னார், யோவான் 13:35 இல் .” நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்றார்.
எங்களில் உள்ள அன்பே எங்களுக்கும் உலகத்திற்கும் உள்ள வேறுபாட்டை காண்பிக்கும் காரணியாக உள்ளது.
ஜெபம்
அன்பின் தகப்பனே! உம்மைப் போலவே அன்பு கூருவதற்கு என்னை தகுதிப்படுத்தியதற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உம்முடைய விசேஷித்த அன்பின் பரிமாணங்களை புரிந்து கொள்ளும் அறிவை தந்ததற்காக உமக்கு நன்றி; அந்த அன்பு என்னிலிருந்து அதிகமதிகமாய் பிறர்கள் மீது பிரகாசிக்கிறது. உம்முடைய நன்மைகளை பகிர்ந்தளிப்பவனாக என்னை உருவாக்கினதற்காக இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உமக்கு நன்றி. ஆமேன்.
மேலதிக வாசிப்பு .
லுக்கா 6:27-35; எபேசியர் 4:1-3