கையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.    (மத்தேயு  5:48)

பெரும்பாலான கிறிஸ்தவர்கள் சரியான வார்த்தையை கற்றுக்கொள்ளாததனால் தவறான எண்ணங்களையும், போதனைகளையும் நம்பி அவற்றை பல வருட காலமாக பின்பற்றுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த தவறான போதனைகள் கேட்பதற்கு நன்றாகவும் மதரீதியான சாயல் உள்ளதாய் இருந்தாலும் அவைகள் தேவனுடைய வார்த்தைக்கு முரணாகவே இருக்கிறது. பெரும்பாலானோர் இவ்வாறாக பேசிக்கொள்வார்கள், உதாரணமாக “நாங்கள் இந்த மாம்ச சரீரத்தில் வாழும் வரையில் நாங்கள் பாவம் செய்கிறவர்களாகவும், தவறு இழைப்பவர்களாகவும் இருப்பது இயல்பே”. ஆனால் மேலே சொன்ன கூற்று வேதப்போதனைக்கு முற்றிலும் எதிரானது. 

இப்படியான நம்பிக்கையை கொண்டிருக்கும் பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்த அனுபவங்களுக்கூடாக இந்த முடிவுக்கு வருகிறார்கள். எல்லோரும் எதாவதொரு வகையிலே தவறிழைக்கிறார்கள் என்று இவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால் இவர்கள் தங்கள் வாழ்க்கையிலே தவறிழைப்பதினால் இந்த முடிவுக்கு வருகிறார்கள். எனவே இவர்கள் தாங்களும் பரிபூரணப்படலாம் என்ற சத்தியத்தை நம்ப மறுக்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவுக்குள் பரிபூரணம் என்றால் என்னவென்று அறியாதிருக்கிறார்கள். நீங்கள் தேவ வார்த்தையை முறையாக கற்றுக்கொள்ளும்பொழுது வேதத்தில் எங்குமே பரிபூரணமடைய சாத்தியம் இல்லை என்று சொல்லவில்லை. 

மேலே குறிப்பிட்ட ஆதார வசனத்தில்ன் ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். (மத்தேயு  5:48) 

பூரண சற்குணர்” என்பதின் சரியான மூல மொழிபெயர்ப்பு  (full Grown) முழுமையான வளர்ச்சி. இதன் அர்த்தம் என்னவென்றால் முழுமையும் எந்தக்குறைவும் இல்லாமலும் இருப்பதே. இங்கே தேவன் எங்களுடைய இருதயத்தை தன்னுடைய இருதயத்தோடு ஒப்பிட்டு எங்களை தம்முடைய வார்த்தைக்கூடாக வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார்.

தேவன் விரும்புகிறவிதமாக நீங்கள் பிறர்மீது அன்பு கூர்ந்து அவர்களை மன்னிக்கும்பொழுது நீங்கள் பரம பிதாவின் இருதயத்தை உடையவர்களாகவும், அவர் பரிபூரணராக இருப்பதுபோல நீங்களும் பரிபூரணராக இருக்கிறீர்கள். எம்மால் பரிபூரணராக இருப்பது சாத்தியம் இல்லையென்றால் தேவன் எங்களை பரிபூரணராக இருங்கள் என்று ஒருபோதும் கேட்டுக்கொண்டிருக்கமாட்டார். உங்களை சுற்றிலும் இருப்பவர்கள் மத்தியிலே உங்கள் வாழ்வின் மேன்மையையும், பரிபூரணத்தையும் ஆவியானவருக்கூடாக வெளிப்படுத்துங்கள். வேதம்; 2 பேதுரு 1:3 இல் நாம் பரிபூரணத்தையும், மகிமையையும் பெற்றவர்கள் என்று அழைக்கிறது. இதனுடைய அர்த்தம் என்னவென்றால் தேவன் உங்களை மேன்மையானவர்கள் என்று அழைக்கிறார். ஆனபடியினால் மேன்மையான வாழ்க்கையை வாழ்வது எங்கள் ஆவியின் சுபாவமாயிருக்கிறது.

பரிபூரணத்தை விசுவாசியுங்கள், ஏனென்றால் கிறிஸ்துவுக்குள் அதுவே உங்கள் ஜீவனாகவும் சுபாவமாகவும் இருக்கிறது. வேதம் சொல்கிறது கிறிஸ்து மரித்ததன் நோக்கம் பரமபிதாவுக்கு முன்பாக எங்களை பாவமற்றவர்களாகவும், பரிபூரணமுள்ளவர்களாகவும் நிறுத்தும்படிக்கே. கொலேசெயர் 1:21-22 . முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயுமிருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.

 அறிக்கை

நான் கிறிஸ்துவின் சிந்தையுடையவனாக இருக்கிறேன். ஆனபடியினால் தேவ ஆவியின் பரிபூரணம் எனக்குள்ளே வேலை செய்கிறது. ஏனெனில் மகிமையும், மேன்மையும் அடையும்படிக்கே தேவன் என்னை அழைத்தார். நான் பரிபூரணம் அடைந்தவனும் எந்த குறைவும் இல்லாதவனாக இருக்கிறேன், ஏனெனில் அவர் (இயேசு) இருக்கிறபிரகாரமாய் இந்த உலகத்திலே இப்பொழுதே நான் இருக்கிறேன். நான் குற்றம் சாட்டப்படமுடியாதவனாகவும் கண்டிக்கப்படமுடியாதவனாகவும் கிறிஸ்து இயேசுவுக்குள் முழுமையை அடைந்திருக்கிறேன். என்னுடைய வாழ்வு அவருடைய பரிபூரணத்தையும், மகிமையையும் வெளிப்படுத்துகிறது. அவருடைய நாமத்திற்கே மகிமையும் துதியும் உண்டாவதாக. அல்லேலூயா!

 மேலதிக வாசிப்பு 

2 கொரிந்தியர் 13:11; 1 யோவான் 4:17; மத்தேயு 5:48

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *