ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார். (மத்தேயு 12:37)
வார்த்தைகள் உருவாக்கும் வல்லமையை
(சக்தியை) தன்னகத்தே கொண்டுள்ளது. வார்த்தைகள் பொருளும் தோற்றமுமுள்ளவைகளும் (words are things) நிஜமானதும் ஒருபொழுதும் அழியாததுமாயிருக்கிறது. இயேசு கிறிஸ்து வார்த்தைகளை எப்படிப்பேசவேண்டும் என்று எங்களுக்கு காண்பித்திருக்கிறார். ஒவ்வொரு அற்புதங்களையும் அவர் செய்யும் பொழுதும், ஒவ்வொரு ஆசீர்வாத்தையும் வழங்கும் பொழுதும் அவர் வார்த்தைகளை உபயோகித்தார். எவற்றை அவர் பேசினாலும் அது உருவாகி தோற்றம் பெற்றது. வாழ்க்கையிலே மிகவும் வல்லமையான சக்தி என்னவென்றால் அது வார்த்தைகளின் வல்லமையே. மற்றும் வெறுமையான, தகுதியில்லாத வார்த்தைகளை பேசுவதை குறித்து அவர் எச்சரிக்கிறார். மத்தேயு 12:36 இல் 36. “மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்”. என்று எழுதியிருக்கிறது.
யோவான் 6:63இல் இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார் “……. நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது”. இது நீங்கள் பேசும் வார்த்தைகளுக்கும் பொருத்தமானது. உங்கள் வார்த்தைகளும் நித்தியமானது.
ரோமர் 10:9 இல் மீட்பைக்குறித்து வார்த்தையின் வல்லமையை உங்கள் கண்ணூடாக காணுங்கள். “என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்”.
ஒரு மனுஷன் நரகத்திற்கும் பரலோகத்திற்கும் போவதற்கும் மேலே உள்ள வசனமே அடிப்படையாக இருக்கிறது. தேவன் என்ன வார்த்தையை எங்கள் வாயினாலே அறிக்கை பண்ணவேண்டும் என்று கட்டளையிட்டாரோ அந்த வார்த்தையே எங்களை மீட்டு பரலோகவாசியாக எங்களை மாற்றுகிறது அவர் கேட்டுக்கொண்டதின்படி நாங்கள் பேசவில்லையென்றால் அவன் நரகத்தின் வாசியாக மாறுகிறான். இது மிகவும் தெளிவாக தெரிகிறது.
சொல்லிமுடியாத ஆசீர்வாதங்கள் மறுபடியும் பிறந்த (Born again) கிறிஸ்தவனுக்கு கண்ணெதிரே காணப்படுகிறது. ஆனால் அவற்றை அனுபவிக்கவேண்டுமானால் இந்த சத்தியத்தை அறிந்து அதை ஏற்றுக்கொண்டு பேச வேண்டும். 1 பேதுரு 3:10 சொல்கிறது. ஒருவன் தன் வாழ் நாளை குதுகலத்தோடு களிக்க வேண்டுமானால், நன்மையான நாட்களை காணவேண்டுமானால் நிறைவான வார்த்தைகளை பேசவேண்டும். நீங்கள் இப்பொழுது உங்கள் வாழ்க்கைப்பயணத்திலே எங்கே இருக்கிறீர்களோ அது உங்கள் வாழ் நாள் முழுவதும் இதுவரை நீங்கள் பேசி வந்த உங்கள் வாயின் வார்த்தைகளின் பிரதிபலிப்பாகும்.
ஆனபடியால் உங்கள் வாழ்க்கையை சரியான வார்த்தைகளைக்கொண்டு கட்டி எழுப்புங்கள். நீங்கள் பேசும் வார்த்தைகள் நீதியின் மகிமைபொருந்திய வாழ்வும், சமாதானமுள்ளதும், சுகமுள்ளதும், செழிப்பும் மற்றும் களிப்பும், கிறிஸ்துவுக்குள் நீங்கள் ஏற்கனவே பெற்றுக்கொண்ட நிஜத்தை உறுதிப்படுத்துவதாக அமையட்டும்.
ஜெபம்
அன்பின் பரம பிதாவே! உமது நீதியினால் எனக்குத் தந்த மேன்மையான வாழ்வுக்காகவும், சமாதானம், வெற்றி மற்றும் ஆழுகைக்காகவும் உமக்கு நன்றி சொல்கிறேன். நான் அழிக்கப்பட முடியாதவனும் உம்முடைய ஜீவனையும், மகிமையையும் எனக்குள்ளே கொண்டிருந்து எல்லையற்ற வலையத்திற்குள் (Ageless zone) வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இன்று நான் செய்யும் எல்லா காரியங்களிலும் உம்முடைய கிருபைகளும், ஞானமும், நீதியும் எனக்குள்ளே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வெளிப்படுவதற்காக உமக்கு நன்றி. ஆமேன்!
மேலதிக வாசிப்பு:
யாக்கோபு 3:5-6; மாற்கு 11:23; 1 பேதுரு 3:10