பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்;
ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். (1 யோவான் 4:4)
கிறிஸ்தவன் ஒரு தேவ மனிதன். அவனுக்குள் கிறிஸ்துவானவர் மெய்யாக (நிஜமாகவும்) வாசம்பண்ணுகிறார். இதை அறிந்தபடியினால் தேவன் உங்களுக்குள் இருக்கிறார் என்கின்ற சிந்தையும், மிகவும் பெரியவர் உங்களுக்குள் நிரந்தரமாக வாசம்பண்ணுகிறார் என்ற அறிவும் இருப்பதினால் உங்கள் வாழ்வில் எதைக்குறித்தும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. இதுவே அப்போஸ்தலர் யோவான் அவர்களுடைய மனநிலையாக இருந்தது. இதுவே உங்கள் சிந்தையாகவும் இருக்கக்கடவது. 1 யோவான் 5:4 இல் அவர் சொல்லியிருக்கிறார் “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்”.
உலகத்திலே என்ன பிரச்சனையோ, எந்த நெருக்கடியோ இருந்தாலும் அவை ஒரு பொருட்டல்ல. நீங்கள் அவையெல்லாவற்றிலும் வெற்றி சிறந்து விட்டீர்கள். ஏனெனில் நீங்கள் தேவனால் பிறந்திருக்கிறீர்கள். அத்தோடு கிறிஸ்து உங்களுக்குள் வாசம்பண்ணுகிறார். நீங்கள் எல்லா வல்லமையையும் எல்லா பலத்தையும், உங்களுக்கு எதிராக இருக்கிற எல்லாவற்றையும் மேற்கொண்டு விட்டீர்கள்.
யோவான் 16:33 இல் இயேசு கிறிஸ்து சொல்கிறார் “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்”. தேவனுடைய வார்த்தை ஆவிக்குரிய நியதியாய் (law) இருக்கிறது.
அவர், “நீங்கள் உலகத்தை ஜெயித்தீர்கள்” என்று சொன்னபடியால், உலகத்தின் பிரச்சனைகள், தோல்விகள் மற்றும் இருளின் காரியங்கள் எல்லாவற்றையும் ஏற்கனவே வென்றுவிட்டீர்கள்.
இதை அறிந்து ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவுக்குள் உங்களுக்கு உண்டான இந்த தெய்வீக-நிஜமான வாழ்வுக்குள் நடைபோடுங்கள். கிறிஸ்துவே உங்களை உருவாக்கி வெற்றியின் பாதையில் நீங்கள் பயணிப்பதற்கு உங்களை நெறிப்படுத்துகிறார். உங்கள் சூழ்நிலைகளை கட்டுப்படுத்தி ஆளுகை செய்யுங்கள். கிறிஸ்துவுக்குள் உங்களுக்கு உண்டான மேன்மையான வாழ்க்கைக்கு ஒத்து வராத எதனையும் மறுதலித்து தூக்கியெறிந்து விடுங்கள்.
கிறிஸ்து உங்களுக்குள் வாழ்கிறார் என்பது உங்கள் தரமான வாழ்வுக்கூடாக வெளிப்படுவதாக. உங்கள் வாழ்வே உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு சாட்சியாகவும், கிறிஸ்துவுக்குள் ஒரு மேன்மையான வாழ்க்கை உண்டென்றும், நீங்கள் அந்த வாழ்வை நன்கு சந்தோசத்தோடு அனுபவித்து வாழ்கிறீர்கள் என்றும் மற்றவர்கள் காணவேண்டும். ஆல்லேலூயா!
அறிக்கை
அன்பின் தகப்பனே கிறிஸ்து இயேசுவுக்குள் அழிக்கப்பட முடியாததும் மேற்கொள்ள முடியாததுமான வாழ்வை எமக்கு தந்ததற்காக மிக்க நன்றி. என்னைக்குறித்த எல்லாமே கிறிஸ்துவின் ஜீவனை வெளிப்படுத்துகிறது. எனக்குள்ளே பெரியவர் வாசம்பண்ணுவதால் நான் கிறிஸ்துவுக்குள் மேன்மையான வாழ்க்கையை வாழ்கின்றேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே. ஆமேன்! ஆல்லேலூயா!
மேலதிக வாசிப்பு:
ரோமர் 8:35-37; கொலோசெயர் 1:27; பிலேமோன் 1:6