எக்காலமும் கனிதரும் வாழ்வு.

(யோவான் 15:5). நானே திராட்ச்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. 

கிறிஸ்தவன் என்பவன் எப்பொழுதும் வெற்றியாகவே இருக்கிறான்.  அதில் எந்த கேள்விக்கும் இடமில்லை. இப்படியாக நீங்கள் உருவாக்கப்பட்டும், கிறிஸ்த்துவுக்குள் சுதந்திரருமாகவும் எக்காலமும் பெருகி கனி கொடுக்கும்படி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறீர்கள்.

நீங்கள் தேவனுடைய பிள்ளையாக இருப்பதினால் எந்த பெரிய இலட்சியத்தை அடையவும் உங்களுக்கு எல்லை இல்லை. அது எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. மறுபடியும் வாசியுங்கள். மேலுள்ள வசனத்தை, பாருங்கள் நீங்கள் எந்த வேலை செய்தாலும், எதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆனாலும், எதில் உங்கள் விருப்பங்கள் இருந்தாலும் , நீங்கள் வெற்றி பெறுவீர்கள்; ஏனென்றால் செடியாகிய இயேசுவுடன்  இணைக்கப்பட்ட கொடியாக இருக்கிறீர்கள்.

உங்கள் வாழ் நாள் முழுவதும் வெற்றி பெற்றவர்களாய் வாழும் படிக்கு நீங்கள் உருவாக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் நீரண்டையில் நடப்பட்ட மரமாய் இருப்பதினால், எல்லா காலமும் இலை பச்சையாய் இருக்கிறதும், கனி கொடுக்கும் மரமாயும் இருக்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய நித்திய அழகின் பரிமாணங்களை வெளிப்படுத்தும் ஊரணியாக (நீரோடை) இருக்கிறீர்கள்.

உங்கள் வாழ்வு தேவனுடைய மகிமைக்கே; நீங்கள் மேன்மையையும் நீதியையும் வெளிப்படுத்தவே வடிவமைக்கப்பட்டவர்கள் . தேவையானது ஒன்றே, வார்த்தையின் மீது உங்கள் கவனத்தை வைத்திருங்கள். தொடர்ச்சியாக வார்த்தையை தியானம் பண்ணுங்கள் உங்கள் வாழ்வின் வெற்றி மறுக்கப்படமுடியாது.

மறுபடியும் வாசியுங்கள். மேலுள்ள வசனத்தை, பாருங்கள் நீங்கள் எந்த வேலை செய்தாலும், எதில் தேர்ச்சி பெற்றவர்களானாலும், எதில் உங்கள் விருப்பங்கள் இருந்தாலும் , நீங்கள் நிட்சயம் வெற்றி பெறுவீர்கள்; ஏனென்றால் செடியாகிய இயேசுவில் உடன் இணைக்கப்பட்ட கொடியாக நீங்கள் இருக்கிறீர்கள்.

யோசுவாவிற்கு  தேவன் சொன்ன வார்த்தையை நினைவு கூருங்கள்; யோசுவா 1:8  “. இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்”

நீங்கள் செய்யும் வேலையோ அல்லது உங்கள் சமுதாய அந்தஸ்தோ , உயர் படிப்பு படித்தவர்களோ அல்லது எந்த நாட்டில் வசிக்கிறீர்களோ என்பது முக்கியம் அல்ல, உங்கள் சிந்தையில் நீங்கள் தெய்வீக வம்சத்திலும் அதன்  பாரம்பரியத்தையும் சேர்த்தவர்கள் என்பதே முக்கியம். நீங்கள் கிறிஸ்துவுடன் இணைந்துள்ளீர்கள்; அது உங்களை உலகத்தின் அதிசயமாக மாற்றும். கிறிஸ்து உங்களுக்குள்ளும் நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிறீர்கள்.

நீங்கள் செய்கின்ற காரியங்களில்  அதீத மேன்மையும், அநேக கனிகளை கொடுப்பவர்களாயும் காணப்படவேண்டும்.  உங்கள் பாரம்பரியம் கிறிஸ்து இயேசுவுக்குள் உள்ளது. அல்லேலூயா ! நீங்கள் ஆத்துமாக்களை இரட்சிப்பதில் தடம்பதியுங்கள். எந்த காரியத்தை செய்தாலும் அதில் மிகையான வெற்றியை ஈட்டுங்கள், ஏனெனில் அதுவே தேவனுடைய சித்தமாய் இருக்கிறது

அறிக்கை

நான் அநேக கனிகளை கொடுக்கும் திராட்ச்சைச்செடியின் கொடி. நான் இயேசுவில் நிலைத்திருந்து  கனிகளை கொடுக்கிறேன், ஏனெனில் தேவனுடைய ஆசீர்வாதம் என் மேலேயும், நான் செய்யும் காரியங்களிலும் இருக்கிறது . என்னுடைய வளர்ச்சி மகிமையின் மேல் மகிமையாக உள்ளது. அல்லேலூயா !