கிருபையின் சத்தியத்தை அதீத கிருபை என்றும் செழிப்பின் உபதேசம் என்றும் புறம்பே தள்ளும் போதகர்கள் தமிழ் கிறிஸ்தவ உலகத்திலே பெரும்பான்மையாக உள்ளனர். தேவ வசனம் இவர்களை நியாயபிரமாண போதகர்கள் என்று அழைக்கிறது. நியாயப்பிரமாணம் என்றால் தேவக்கிருபையை புறம்பே தள்ளி தங்கள் சுய கிரியைகளின்மூலம் நீதிமானாக முயற்சிப்பது என்று அர்த்தம்.
நியாயப்பிரமாணம் மோசேயினால் கொடுக்கப்பட்டது கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவினால் உண்டாயிற்று(யோவான் 1:17)
நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படவில்லை.
மறுபடியும் பிறந்த ஒவ்வொரு கிறிஸ்தவனும் நீதிமானாய் பிறந்திருக்கிறான்.
நியாயப்பிரமாண போதகர்களே பக்கவழியாய் வந்த கள்ள சகோதரர்கள்.
வேத வார்த்தையின்படி கள்ள சகோதரர் என்றாலே அவர்கள் இரட்சிக்கப்பட்ட விடுதலையான கிறிஸ்தவர்களை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்குகிறவர்கள். (கலாத்தியர் 2:4.)
எழுத்த்து கொல்லுகிறது (மோசேயின் பிரமாணம்), ஆவியோ ( இயேசுவின் பிரமாணங்கள் ) உயிர்ப்பிக்கிறது.
மோசேயின் பிரமாணம் மரணத்திற்கேதுவான ஊழியத்தையும் ஆக்கினைத்தீர்ப்பையும் கொடுக்கிறது. இயேசுவின் அன்பின் பிரமாணமோ ஜீவனையும் மகிமையையும் கொடுக்கிறது (2 கொரிந்தியர் 3:6-9,18)
நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, நியாயப்பிரமாணமானது பலவீனமாக இருதந்ததின் நிமித்தம் மாற்றப்பட்டது. (எபிரேயர் 7:18,19.)
பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.
நியாயப்பிரமாணத்தை நீங்கள் போதிக்கும்போது நீங்கள் பாவத்தையும் பாவத்தின் பிதாவாகிய பிசானவனையும் பலப்படுத்துகிறீர்கள். இதனையே மரணத்திற்கேதுவான ஊழியம் என்று வேதம் போதிக்கிறது. (1 கொரிந்தியர் 15:56.)
நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள். என்று வேதம் எச்சரிக்கிறது (கலாத்தியர் 5:4.)
ஆவியினால் நடத்தப்படுவீர்களானால் நீங்கள் நியாயப்பிரமாணட்திற்கு கீழ்ப்பட்டவர்கள் அல்லவே (கலாத்தியர் 5:18)
நியாயப்பிரமாணம் பாவசிந்தையை பிறப்பிக்கிறது.
பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியையினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. (ரோமர் 3:20.)
பவுல் சொல்கிறார். “இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்” (நியாயபிரமாண வசனத்திற்கு அல்ல ) அப்போஸ்தலர் 20:32.