“கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம். (2 கொரிந்தியர் 4:10)”.
கிறிஸ்துவின் நற்செய்திக்கூடாக ஜீவனையும், அழியாமையையும் எங்களுக்குத் தந்து தம்முடைய ஆச்சரியமான வெளிச்சத்திற்கு எங்களை வரவழைத்து அந்த ஜீவன் எங்கள் சரீரத்திலே வெளிப்படவேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
(2 திமெத்தெயு 1:10)”.
இதனை கவனித்து சிந்தித்துப்பாருங்கள்; அவருடை கண்ணுக்குத்தெரியாத ஜீவன் உங்கள் சரீரத்திற்கூடாக வெளீப்படுவதை சிந்தித்துப்பாருங்கள்.
இந்த அறிவே ஒரு கிறிஸ்தவனை ஒரு அசாதாரண, அதீத செயல்திறன்மிக்க தேவ மனிதனாக மாற்றுகிறது.
அப்போஸ்தலர் 28 இல் மெலித்தா என்னும் தீவில் அப்போஸ்தலர் பவுலுக்கு நேர்ந்த அனுபவத்தை கவனித்துப்பாருங்கள்.
அவர் விஷப்பாம்பினால் கடியுண்டபோதிலும் அவருக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
அவர் உதவி கேட்டு கூக்குரலிடவுமில்லை. அல்லது விஷத்தை கடிந்து அப்புறப்படுத்தவுமில்லை. அவர் இதற்காக ஜெபிக்கவுமில்லை. அறிக்கைபண்ணவுமில்லை. மாறாக தொடர்ந்து தேவ நற்செய்தியை அறிவித்துக்கொண்டிருந்தார். அவருக்கு விஷப்பாம்பு தீண்டியதை அவர் பொருட்படுத்தவேயில்லை. அப்பொழுது அவரை சுற்றியிருந்த ஜனங்கள் பவுல் விஷத்தினால் பாதிக்கப்பட்டு சடுதியாக விழுந்து மரித்துப்போவான் என்று எதிர்பார்த்தார்கள்.
ஆனால் அப்படி நடக்கவில்லை.
முடிவில் அந்த ஜனங்கள் பவுலை தேவன் என்று முடிவு செய்தார்கள். (அப்போஸ்தலர் 28:6)”.
பவுல் தனக்குள்ளே அழிக்கப்படமுடியாத கிறிஸ்துவின் ஜீவன் இருப்பதை அறிந்து அதனை தன்னுடைய மாம்ச சரீரத்தில் வெளிப்படுத்தினார்.
இந்த ஜீவன் கிறிஸ்துவின் நற்செய்திக்குள் ஒரு பகுதியாக எமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனபடியினால் உங்கள் வாழ்விலே எதைக்குறித்தும் பயப்படாதீர்கள்.
நீங்கள் எந்தவிதமான விஷத்தினாலும் சேதப்படுத்தமுடியாதவர்க்ளும், அழிக்கப்படமுடியாதவர்களுமாக இப்பொழுது இருக்கிறீர்கள்.
ஏனென்றால் தெய்வீக ஜீவன் உங்களுக்குள்ளே இருக்கிறது.
நீங்கள், “இப்படியான வாழ்க்கையை நான் வாழ வேண்டுமேயானால் என்ன செய்யவேண்டும்”? என்று கேள்வி எழுப்பலாம்.
மனித வாழ்க்கையை வாழ்வதற்கு உங்கள்தரப்பில் இருந்து நீங்கள் எதுவுமே செய்யவில்லை. இயல்பாகவே சுபாவத்தின்படி மனித வாழ்வை வாழ்ந்தீர்கள். அதுபோலவே உங்கள் தரப்பில் இருந்து எதுவும் செய்யாமலே; நீங்கள் மறுபடியும் பிறந்த புதிய மனிதனாக இருப்பீர்களானால் இயல்பாகவே இந்த தேவ வாழ்க்கையை உங்களால் வாழமுடியும். ஏனென்றால் தேவனே உங்களை சிருஷ்டித்திருக்கிறார்.
வேதம் சொல்கிறது தீத்து 3:5 இல் “நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்”.
மேலும் எபேசியர் 2:8-9இல் “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;”..
இந்த தெய்வீக ஜீவனை பெற்றுக்கொள்ளுவதற்கு நீங்கள் எந்த விலையும் கொடுக்கவேண்டியதில்லை. மாறாக கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால் அந்த ஜீவன் ஏற்கனவே உங்களுக்குள் வந்தாயிற்று, என்று 1 யோவான் 5:11-12 இல் வாசிக்கலாம்.
உங்களுக்குத் தேவையானதெல்லாம் இந்த ஜீவனை குறித்த அறிந்து கொள்வதும் அந்த சிந்தையில் தரித்திருப்பதுமேயாகும்.
கிறிஸ்துவுக்குள் நீங்கள் யார் என்கிற அறிவும், அவருடைய அழிக்கப்படமுடியாத ஜீவன் உங்களுக்குள்ளே இருக்கிறது என்கின்ற சிந்தையுமே உங்களுக்கு தேவையானதாகும். அவருடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக.
அறிக்கை
——————-
இயற்கைக்கு அப்பாற்பட்ட அழிக்கப்படமுடியாத, சாவாமையுள்ள கிறிஸ்துவின் ஜீவன் எனக்குள்ளே கிரியை செய்கின்றது. ஆனபடியினால் நான் எந்த நோய்களுக்கோ, வியாதிகளுக்கோ, சாதாரண மனிதனுக்கு நேரிடுகிற எந்த அழிவுகளுக்கோ உட்படாமல் அவற்றை மேற்கொண்டவனாய் மேலான வாழ்வை நான் வாழுகின்றேன். தேவ சுபாவத்தில் பங்குள்ளவனாயும் அவருடைய மகிமையையும் தெய்வீகத்தையும் வெளிக்கொண்டு வருபவனாயும் இருக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே!
ஆமேன்!
மேலதிக வாசிப்பு;
1 யோவான் 5:11-13;
ரோமர் 8:11
Thanks 🙏
Pas. Mahen