கலாத்தியர் 2:20 “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

வேதாகமம் சொல்கிறது, இயேசு கிறிஸ்து சிலுவையிலே அவமானத்தையும்   உத்தரிப்பையும் அனுபவிக்கும்பொழுது, அவர் உயிர்த்தெழும் பொழுது விசுவாசிகளான நாங்கள்  அடையப் போகும் சந்தோசத்தையும் மகிமையையும் எண்ணியிருந்தார். (எபிரேயர் 12:2) 

அவர் கண்ட சந்தோஷமும் மகிமையும் நீங்கள்தான். அதற்காக அவர் குற்றவாளிகளுக்குரிய மரணத்தை ஏற்றுக்கொள்வதற்கு சிறிதளவும்  பொருட்டாக எண்ணவில்லை. நீங்களும் நானும் அவரது அதி உன்னத தியாகத்தினால் பெறப்போகும் மேன்மையான குணாம்சங்களை (நீதிமான்கள், தேவர் ரகமான மனிதர்கள்) தனது சிந்தையிலே கண்டார்.அவர், எங்களைப்பற்றிய  தனது கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக தன்னுடைய ஜீவனை கொடுத்தார். அவர் எங்களைப்பற்றி கண்ட கனவு; நாங்களே தேவனின் மகிமையும் அவருடைய நீதியும், பங்காளர்களாகவும் இருப்பதே. தேவ திட்டத்தின்படி அவர் (Jesus) தன்னுடைய ஜீவனை கொடுத்தார்,  ஏனென்றால் நாங்கள் எல்லோரும் சந்தோஷமான பரிபூரணமான வாழ்வைப் பெற்றுக் கொள்ளும் படிக்கு. நாங்கள் என்றென்றைக்கும் நீதியையும், செழிப்பையும், ஆரோக்கியத்தையும்  ஆளுகையும், வெற்றியையும் என்றென்றைக்கும் மேன்மையையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் தன்னுடைய ஜீவனே கொடுத்தார். அல்லேலூயா! இயேசு எவற்றை எல்லாம் செய்து முடித்தாரோ அவற்றின் மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார். அவர் எம்மீது தன்னுடைய ஜீவனைக்கொண்டு விசுவாசமும் நம்பிக்கையும் வைத்திருந்தார்.   நாம் அவருடைய நற்செய்தியை விசுவாசிப்போம் என்றும், அவரைப் போல மாறுவோம் என்றும், இப்பொழுது அவரை போல இருக்கின்றோம் என்றும் நன்கு அறிந்திருந்தார். (1 John 4:17)  அத்தோடு நாங்கள் அவரோடு ஒன்றிணைந்து (இரண்டறக் கலந்து) இருப்போம் என்றும், தெய்வீகத்தினால் நிறைந்து இருப்போம் என்றும் அவர் அறிந்திருந்தார். மேலும் நாங்கள் தேவரகத்தோடு (God-kind) பங்கு உள்ளவர்களும், பங்கு தேவ ஒழுங்கின்படி தோழர்களுமாக இருப்போம் என்று அவர் அறிந்திருந்தார்.  தேவனுக்கே மகிமை!

அவர் என்ன செய்து முடித்தார் என்பதை விசுவாசியுங்கள்; அவர் யார் என்றும், அவர் உங்களை எப்படி சிருஷ்டித்தார் என்றும் அறியுங்கள். நீங்கள் எப்பொழுதும் களிப்போடும், செழிப்போடும், வெற்றியோடும், எல்லா நேரமும் ஜெயம் பெற்று வாழ்வோம் என்று உறுதியாக முடிவெடுங்கள். அவர் எதற்காக மரித்து உயிர்த்தெழுந்தாரே அந்த நோக்கத்தின் படியே நீங்கள் இருப்பது என்று முடிவெடுங்கள். உங்கள் வாழ்வு மகிமையினாலும், மேன்மையிலும், நிரம்பியிருக்க வேண்டும் என்றும், அவர் உங்கள் மீது அன்பு கொண்டு தம்மைத்தாமே உங்களுக்காக ஒப்புக்கொடுத்த அவரை, அவர் ஒருவரையே, மேன்மைப்படுத்தும் வாழ்வை வாழ்வேன் என்று முடிவெடுங்கள். அவர் உங்கள் மீது வைத்த கனவை வாழுங்கள் அவருக்குள் உங்கள் இலக்கை நிறைவேற்றுங்கள், ஏனென்றால் அவர் உங்கள் மீது விசுவாசம் வைத்திருக்கிறார்.

ஜெபம் 

தேவன் நான் எப்படி இருக்கிறேன் என்று சொன்னாரோ நான் அப்படியே இருக்கிறேன். நான் தேவனுடைய சுதந்திரம் அவருடைய உடன் சுதந்திரம இருக்கிறேன்( நான் இளவரசனும் முடிக்குரிய இளவரசன் இருக்கிறேன்). அவர் என்னைக் குறித்து கண்ட கனவின்படி நான் வாழ்கிறேன் என்னுடைய வாழ்வை பரிபூரணமாக சந்தோஷமாக வாழ்கிறேன். நான் செழிப்பிலும், ஆரோக்கியத்திலும், வல்லமையிலும், வெற்றியிலும், இப்பொழுதும் எப்பொழுதும் இயேசுவின் நாமத்தினாலே வாழ்ந்திருப்பேன். 

மேலதிக வாசிப்பு  2 கொரிந்தியர் 5:15; ரோமர் 8:37-39;  எபிரேயர் 12:2.