யோவான் 14: 26 “என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்”

பரிசுத்த ஆவியானவர் அறிவின் ஆவியாக இருக்கிறார்; அவர் சகல அறிவின் சரீரப்பிரகாரமான வெளிப்பாடாக இருக்கிறார்.

இயேசு கிறிஸ்து சொன்ன “ பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” என்பதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டாம்.

ஆனபடியினால் நீங்கள் ஏற்கனவே கற்றுக்கொண்டதை மறந்து போவது என்பது முடியாத காரியமாக இருக்கிறது.

சில காரியங்களை நினைவுபடுத்த முயற்சிக்கும் போது;  சிலவற்றை எங்கே வைத்தீர்கள் என்று யோசிக்கும் வேளையில் பரிசுத்த ஆவியானவர் நினைப்பூட்டுவார்.  அப்படிப்பட்ட சூழ்நிலை “நான் எங்கே வைத்தேன் என்று நினைவில்லை” என்றோ அல்லது “என்னால் எங்கே வைத்தேன் என்று ஞாபகப்படுத்த முடியவில்லை என்றோ சொல்லாதிருங்கள்”.

“நான் மறந்துவிட்டேன் என்று சொல்லாமல் நான் ஞாபகத்துக்கு கொண்டு வருவேன்” என்று சொல்லி உங்கள் சிந்தையை பயிற்றுவியுங்கள்.

ஒரு எண்ணத்தையோ தகவலையோ ஞாபகப்படுத்த முனையும் போது என் நினைவில் வரும் என்று சொல்லுங்கள் ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு நினைப்பூட்டுவார் என்ற சிந்தை உங்களில்  இருக்கட்டும்.

அறிவையும் தகவல்களையும் உங்கள் ஆவியில் தக்க வைப்பதும் தேவையான வேளைகளில் தகவல்களை உங்கள் சிந்தைக்கு கொண்டுவந்து உதவுவதும் அவருடைய ஊழியத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.

அவரோடு இருக்கும்போது நீங்கள் இருளில் தவிக்கவோ, வாழ்வில் எதை குறித்தும் குழப்பமடைய தேவையில்லை.

அவர் அறியாத விடயங்கள் என்று ஒன்றுமே இல்லை. அவர் தேவனைக் குறித்தும் மற்றும் இயற்கையான காரியங்களை குறித்தும்f முற்றிலும் அறிந்திருக்கிறார். தொழில்நுட்பத் தகவல்கள், சட்டம், விஞ்ஞானம், வரலாறு, வியாபாரம், பங்கு சந்தை, வானியல், ஆடையலங்காரம், சமையல் கலை, மற்றும் இணையத்தளம் மற்றும் எவைகளை நீங்கள் கற்பனை பண்ண முடியுமோ அவ்வளவையும் அவர் அறிந்திருக்கிறார்.

உலகத்தில் உள்ள எல்லா பலகலைகளகங்களில் உள்ள மிகப்பெரிய கல்விமான்களை கற்பிப்பதை பார்க்கிலும் அவர் உங்களுக்கு கற்பிப்பார்.

உலகத்திலுள்ள யாவற்றையும் அவர் உண்டாக்கினவர் என்பதை நினைவில் வைத்திருங்கள். நீங்கள் அவருடைய அறிவிலிருந்து கேட்டு பெற்று உங்கள் உலகை மேன்மையானதாக மாற்றமுடியும். அவரை அனுமத்திதால்தான் அறிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள  மிகவும் தயாராக இருக்கிறார். அவருடைய இந்த அற்புதமான தனித்துவமான ஊழியத்தை உங்கள் வாழ்வில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இருள் நிறைந்த இந்த உலகத்தில் நீங்கள் அறிவின் சோலையாகவும் தீர்வுகளின் ஊற்றாகவும் இருக்கிறீர்கள்.

அறிக்கை

பரிசுத்த ஆவி என்னும் சிறந்த ஆசிரியர் எனக்குண்டு.

அவர் எல்லாவற்றையும் கற்று தந்து அவருடைய நேர்த்தியான முழுமையான அறிவின்படி இயங்க என்னை வழி நடத்துகிறார். அல்லேலுயா!