என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. யோவான் 10:27

 

பெரும்பாலன வேளைகளில் ஆண்டவர் பேசுகிறார் என்று சொல்லும் பொழுது, அவர் என்ன மொழியில் பேசுகிறார் என்று சிலர் ஆச்சரியப்படுகின்றனர். அவர்களும்கூட ஆண்டவரின் சத்தத்தை எப்படி கேட்பது என்று அறிந்து கொள்ள விரும்புவார்கள். தேவன் ஆவியாயிருக்கிறார். அவர் உங்களுடைய ஆவியுடன் பேசுகிறார். அவர் உங்கள் இருதயத்தில் (ஆவியில்) எப்படி பேசுகிறார் என்பதையும், எப்படி செவிமடுப்பது என்பதையும் நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.  

நீங்கள் மறுபடியும் பிறந்ததினால் பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனோடும் ஒன்றிணைந்து இருக்கிறீர்கள். அவர் உங்களுக்குள்ளே வாசம் பண்ணும்படி வந்து உங்கள் ஆவியோடு இரண்டற கலந்து இருக்கிறார்.  

 

வேதம் சொல்லுகிறது “ அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்.” (1கொரிந்தியர் 6:17) 

ஆதலால் உங்கள் ஆவியுடன் அவர் பேசும்பொழுது உங்களுக்கு நன்றாகவும் தெளிவாகவும் கேட்கும்.  நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே. உங்களுக்குள் இருந்து வரும் அந்த தேவ சத்தத்தை கவனித்து கேளுங்கள். தேவன் எல்லா மொழிகளையும் அறிந்திருக்கிறார். எந்த மொழிக்கூடாகவும் அவர் உங்களுடன் பேசுவார். 

தேவன் உங்களுடன் பேசுவது மொழிமூலமாக அல்ல. அவர் உங்கள் ஆவிக்குள் தனது வார்த்தையை வைக்கிறார். அவர் உங்களுடன் “ஆவி மொழியிலே பேசுகிறார்”

  ஏனென்றால் அவர் உங்களுடைய ஆவியுடன்  பேசுகின்றார். ஆனால் உங்கள் mind (மனது) மொழியுடன் (interllect)  தொடர்புடையது.  

 

மொழியின் ஒலி எங்கள் அறிவில் புரிந்து கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. தேவன் உங்கள் mindக்கு உட்பட்டவர் அல்ல.  அவர் உங்கள் பகுத்தறிவின் ஆய்விற்கு அமைய உங்களேடு பேசுபவர் அல்ல. அதனால் அவர் தன்னுடைய செய்தியை ஒரு மொழிக்கூடாக உங்கள் அறிவிற்கு தெரியப்படுத்த வேண்டியதில்லை.

 அவர் பேசும் வார்த்தை உங்கள் ஆவியிலே பெற்றுக்கொள்ளாவிட்டால் உங்களுக்கு அதனால் எந்த பிரயோசனமோ, அர்த்தமோ இல்லை. உண்மையில் அந்த வார்த்தை உங்கள் ஆவிக்குள் வரவேண்டும். அவர் பேசும் வார்த்தை உங்கள் mindக்குள் (மனதிற்குள்) வருமேயானால் அதை மறந்துவிட வாய்ப்புண்டு, ஆனால் அந்த வார்த்தை உங்கள் ஆவிக்குள் வருமேயானால் நீங்கள் என்றும் நினைவில் வைத்திருப்பீர்கள். 

 

மேலும் தேவன் உங்களுடன் பேசுபொழுது உங்கள் ஆவியில் வெளிச்சமும் தேவனே உங்களோடு பேசுகிறார் என்ற சாட்சியும், நிட்சயமும் உங்களுக்கு உண்டாகிறது. இதுவே இயேசு கிறிஸ்து மேலேயுள்ள ஆரம்ப வசனத்தில்  “எனது ஆடுகள் என் சத்தத்தைக் கேட்கும்” என்று சொன்னதின் அர்த்தம். 

 

உங்கள் ஆவியை நிட்சயமான வழி நடத்தலுக்கும், தேவனுடைய வார்த்தைக்கும், அடையாளங்களை அறிந்து கொள்வதற்கும் பயிற்சிவியுங்கள். உங்கள் ஆவியை அடிக்கடி அன்னிய பாஷையில் பேசுவதின் மூலம் விழிப்புடனும் தயார் நிலையிலும் வைத்திருங்கள்.  

 அத்தோடு தேவனுடைய வார்த்தையில் கற்று தேறுவது மிகவும் முக்கியமானது ஏனென்றால் அவர் தேவ வார்த்தையை மீறி (வெளியே)  எதையும் பேசுவதில்லை. தேவனுக்கே துதி உண்டாவதாக.

 

 ஜெபம்

 அன்பின் தகப்பனே உம்முடைய  சத்தத்தை கேட்பதற்கும் அறிந்து கொள்வதற்குமான ஞானத்தை எனக்கு தந்ததற்காக உமக்கு  நன்றி சொல்கிறேன். நீர் உம்முடைய வார்த்தையை பேசும்பொழுது அது எனக்கு ஆலோசனையையும், வழிகாட்டுதலையும், நெறிப்படுத்தலையும் தெரிவிப்பதினால் அதற்கேற்ற ஆசீர்வாதங்களையும் இயேசுவின் நாமத்தினாலே பெற்றுக்கொள்கிறேன். ஆமென்.