(யோவான் 14:17). உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

இயேசு கிறிஸ்து மகிமையிலே பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பு அவருடைய சீஷர்களுக்கு பரிசுத்த ஆவியானவரைக் குறித்து கற்பித்தார். பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள்ளே வாசம் பண்ண போவதை அவர் சொல்லி இருந்தார், அப்போஸ்தலர் 1:8. “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்”

பெந்தகோஸ்தே நாளிலிருந்து பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள்ளே வந்து வாசம்பண்ணினார்; அவர் வந்ததன் நோக்கமே அவர்களுக்குள் வாசம் பண்ணுவதற்கே.

பழைய ஏற்பாட்டில் சாலமோன் தேவனுக்கு ஒரு ஆலயத்தை கட்டினான்,  ஆலயத்தில் பிரதிஷ்டை பண்ணும் போது தேவ பிரசன்னம் ஆலயத்தின் மேல் இறங்கியது.

(2 நாளாகமம் 5:13,14). தேவன் மேலிருந்து இறங்கி வந்து ஆலயத்துக்குள் வாசம் பண்ண வேண்டியதாயிருந்தது. ஆனால் அதில் தேவன் திருப்தியாகவில்லை.

அப்போஸ்தலர் 7:48. “ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்”

அவர், நீதிமொழிகள் 8:31 இல் “மனுஷ புத்திரர்களோடு இருப்பதே அவரது சந்தோசம்” என்று சொல்லியிருக்கிறார்.

இதுவே; கிறிஸ்து உங்களுக்குள் இருப்பதே கிறிஸ்தவத்தின் சாராம்சம். இதையே இயேசு கிறிஸ்து உலகிற்கு தந்தார்,  அவராலே இது சாத்தியமானது.

நீங்கள் மறுபடியும் பிறந்தபோது தேவன் உங்களை தனக்கு சொந்தமானதும், அவருடைய பிள்ளைகளும் மற்றும் அவர் வாழும் ஜீவனுள்ள ஆலயமாக மாற்றினார். மறுபடியும் பிறந்த அந்த வேளையிலிருந்து நீங்கள் பரிசுத்தமாக்கப் பட்டவர்களும், அவருடன் ஒன்றாக இரண்டற கலந்தவர்களானீர்கள். உங்களை தன்னுடைய வாசஸ்தலமாக மாற்றும் படிக்கு, உங்கள் சரீரமான பாத்திரத்தை சுத்திகரித்தார்.  உண்மையில், நிஜத்தில் அவர் உங்களுக்குள் வாசம் பண்ணுகிறார்.

மற்றும் அவர் உங்களுக்குள் வாசம் பண்ணுவதால் அவர் உங்களுக்கு ஊடாக பேசுகிறார், உங்களுக்குள் உலாவுகிறார்.  அவர், அவர் தாமே உங்களுக்குள் இருந்தும் உங்களுக்கு ஊடாக தம்மை பகிரங்கமாக வெளிப்படுத்துகிறார்.

இதை சிந்தித்து பாருங்கள்!,  மகிமையின் ஆண்டவர், இந்தப் பிரபஞ்சத்தின் ராஜா உங்களுக்குள் வாசம் பண்ணுகிறார். அவர் உங்களை தம்முடைய பிம்பமாகவும் அவருடைய சாயலாகவும் உருவாக்கி அவரது ஆவியை உங்களுக்குள் நிரப்பி  இதனை சாத்தியமாக்கினார். என்னே ஆசிர்வாதம்! என்னே சிலாக்கியம்!

எப்பொழுதும் ஆவியை கனம் பண்ணுங்கள். உங்கள் வாழ்வில் அவரது பிரசன்னத்தை பாராட்டி கொண்டாடுங்கள். அவருடன் நெருக்கமான உறவு பாராட்டுங்கள். உங்கள் வாழ்வு முடிவில்லாத ஆசீர்வாதங்களும் இயற்கைக்கு அப்பாற்பட்டதாயும் இருக்கும். ஆமென்.

ஜெபம்

அன்பான பரமபிதாவே,

பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்திற்காக உமக்கு  நன்றி சொல்லுகிறேன். நான் தேவனால் நிரம்பியிருக்கிறேன். ஆதலினால் எனக்குள் வருத்தத்திற்கும், வியாதிக்கும், கோபத்திற்கும், எரிச்சலுக்கும் அல்லது இருளின் எந்த காரியங்களுக்கோ ஒரு இடமும் இல்லை. நான் ஒரு போதும் தனித்து விடப்படுவதில்லை, ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் எனக்குள்ளே எக்காலமும் வாசம் பண்ணுகிறார். அவருடைய நிரந்தர பிரசன்னம் எனக்குத் தேவை ஏற்படும்போது பெரும் பலமும் உதவியுமாக  இருக்கிறது. ஆமேன்.