நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.
( யோவேல் 2:25)
நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக தேவ வார்த்தையை படிப்பதற்கு, பரிசுத்த ஆவியானவரோடு இனைந்து வார்த்தைக்கு முற்றிலும் உங்களையே கொடுக்கும்போது தரமான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நடைபெற தொடங்குகிறது. இந்த மாற்றங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் உடனடியாக பிரதிபலிக்க வேண்டும், விசேஷமாக உங்கள் பேச்சிலும் உங்கள் கலந்துரையாடலிலும் காணப்படவேண்டும். சூழ்நிலை எப்படி இருந்தாலும் வேத வார்த்தைகளுக்கு இணங்க சரியாகவும், முழுமையாகவும் பேசுவதுமே ஆரோக்கியமான கிறிஸ்தவ முதிர்ச்சி ஆகும். உதாரணமாக நீங்கள் எங்கேயோ போவதற்கான தேவை இருக்கும்போதோ அல்லது ஒரு திட்டத்தை முடிக்க தந்த நேரம் நெருங்கும்போது பீதியடையவோ, அவதிப்படவோ வேண்டாம். பதட்டப்படவோ மற்றும் நேரம் போதாது என்று புகார் செய்யவோ வேண்டாம். உங்களது வார்த்தையினால் உங்களது நேரத்தை குறுகியதாக்க வேண்டாம். எப்பொழுதும் பதட்டப்படாமல் அமைதியைப் பேணுங்கள்.
உங்களுக்குள் வாழும் தேவனே உங்களது நேரத்திற்கு சொந்தக்காரர். நாங்கள் முன்னமே தொடங்கின வசனத்தை மீண்டுமாய் வாசித்து தேவன் என்ன சொன்னார் என்பதை அவதானிப்போம். வீணாக்கப்பட்ட வருடங்களை தேவன் மீட்பார். அது என்னவென்றால் வீணாக்கப்பட்ட மாதத்தையோ, வீணாக்கப்பட்ட நாட்களையோ, வீணாக்கப்பட்ட நிமிடங்களையோ, வீணாக்கப்பட்ட வினாடிகளையோ, வீணாக்கப்பட்ட திறமையையோ, வீணாக்கப்பட்ட தருணங்களையோ அவரால் மீட்க முடியும். அல்லேலூயா!
ஆகவே நேரத்தை பற்றி பீதி அடைய வேண்டாம். நீங்கள் பீதி அடையும் போது நீங்கள் பயத்தில் முடிவு எடுக்கிறீர்கள் மற்றும் பயம் பிசாசினுடைய காரியமாகும். நீங்கள் பதட்டமாக இருக்கும் வரை நீங்கள் அற்புதங்களை பெற்றுக் கொள்ள முடியாது. ஆகவே நேர குறைவுக்காக பதட்டப்படுவதற்கு எதிர்த்து நில்லுங்கள். குதிரைக்காரரை முந்தி ஓடுவதற்கு எலியா எப்படி தேவனின் ஆவியினால் நடத்தப்பட்டான் என்பதை 1 இராஜாக்கள் 18 ஆவது அதிகாரத்தில் 46 ஆவது வசனத்தில் விளக்குகிறது. இன்றைய அதிவேக விமானத்தை விட வேகமாக தேவ ஆவியானவரால் பிலிப்பு இன்னொரு நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டான் (அப்போஸ்தலர் 8:39).