“தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்.
(அப்போஸ்தலர் 26-27)”.

1 சாமுவேல் 8 இல் இஸ்ரவேல் ஜனங்கள் அவர்களை ஆளுகை செய்யும்படிக்கு ஒரு இராஜாவை ஏற்படுத்தும்படிக்கு சாமுவேலை வேண்டிக்கொள்கிறார்கள். இதனைக்குறித்து சாமுவேல் விசனமடைந்து அதனை தேவனிடம் தெரிவிக்கின்றான்.
இதனை 1 சாமுவேல் 8:22 இல் “கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்; …..”

தீர்க்கதரிசியான சாமுவேல் தேவன் சொன்ன கட்டளையை விரும்பவில்லையாயினும் தேவன் சொன்னதை அப்படியே ஜனங்களுக்கு தெரிவித்தான். தன்னுடைய சொந்த விருப்ப வெறுப்பை அல்ல. அதன்பின்பு சவுல் இஸ்ரவேல் ஜனங்களின் இராஜாவானான். சாமுவேல் இந்த முடிவு தேவனாலே உண்டானதென்று அறிந்து அதன்படியே சவுலை இராஜாவாக்கினான்.
(1 சாமுவேல் 10:1)

இதுவே சரியான நடைமுறையும் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனின் கடைமையாகும்.
நீங்கள் தேவனையும் அவருடைய வார்த்தையையும் மாத்திரமே பின்பற்றுங்கள்.

உங்கள் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் இடம் கொடாதிருங்கள்.
தேவன் உங்களுக்கு ஒரு வார்த்தையை தருவாரானால் அதற்கு முழுமையாக கீழ்ப்படியுங்கள். ஏனென்றால் அவரே உங்கள் ஆண்டவராக இருக்கிறார்.

உங்கள் ஊழியம் உங்களைப்பற்றியது அல்ல. அது அவரைப்பற்றியது. நீங்கள் அவருடைய விருப்பையும், திட்டங்களையும், நோக்கங்களையும் வெளிப்படுத்தும் அவருடைய குரலாக இருக்கிறீர்கள்.

உங்கள் கருத்துக்களை தங்கி இராமல் தேவனுடைய வார்த்தையானது என்றென்றைக்கும் மாறாத உண்மையாக இருக்கிறது. தேவனுடைய வார்த்தை எதனைச் சொல்கிறதோ நீங்கள் அதனை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
அது உங்களுடைய பாரம்பரியம், பழக்கவழக்கங்களுக்கு (Culture) ஏற்புடையாதாயிராவிட்டாலும் தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றுங்கள்.

நாங்கள் தேவனுடைய ஊழியக்காரராக இருக்கிறோம்.
நாங்கள் எங்களுக்காக அல்ல தேவனுக்காகவே பிரசங்கம் பண்ணுகிறோம்.

1பேதுரு 4:11 “ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்;”…எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
அவரைப்போலவே சிந்தையுள்ளவர்களாக இருக்கும்படி உங்களை பழக்கிகொள்ளுங்கள்.

உங்கள் எண்ணங்களை, கருத்துக்களைப் பேசாமல் அவருடைய வார்த்தையைப் பேச உங்களை பயிற்றுவியுங்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக!

அறிக்கை
——————
தேவனுடைய வார்த்தை என் இருதையத்திலும் என் வாயிலும் இருக்கிறது. நான் அதனை தைரியமாகவும் ஆவியானவரின் வழிநடத்தலோடு தேவனுடைய எண்ணங்களையும், சிந்தைகளையும், திட்டங்களையும் மற்றும் நோக்கங்களையும் அறிவிப்பேன். தேவனுடைய பரிபூரணமான விருப்பம் என் வாழ்க்கையிலும் என்னுடைய போதனையை கேட்பவர்கள் வாழ்விலும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அவருடைய வார்த்தையின் வல்லமை யாவற்றையும் செய்ய வல்லதாக இருக்கிறாது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஆமேன்!

மேலதிக வாசிப்பு
மத்தேயு 24:35;
ஏசாயா 55:10-11; 2 தீமெத்தேயு 3:16-17

Thanks 🙏
Pas. Mahen