பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய் எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள் “ (எபேசியர் 6:16).
கிறித்துவத்தில் நமது விசுவாசம் மிக முக்கிய வாழ்க்கை முறை.
வேதத்தில் விசுவாசமென்னும் கேடகத்தைப் பொல்லாங்கனுக்கு எதிராக பிடிக்க கூறும் போது நம்முடைய விசுவாசமே கேடகம் என்பது இதன் பொருள்.
உங்கள் விசுவாசத்துடன், பொல்லாங்கனின் அக்கினியாஸ்திரங்கள் அனைத்தையும் பயனற்றதாக செய்யவும் , அணைக்கவும் முடியும். உங்களை நோக்கி வரும் பிசாசுகளால் எறியப்பட்ட அக்கினியாஸ்திரங்களை உங்கள் விசுவாசத்தினால் அணைக்க முடியும்.
உதாரணமாக, மனத்தளர்வும், கோபமும், எதிரியின் ஏவுகணைகள். சிலர் தனியாக இருக்கும் சமயத்தில் அவர்களின் மனதை தளர்வடையவும்., கோபமடையவும் செய்து அவர்களை தாக்கலாம். இவை கூட எதிரியின் அக்கினியாஸ்திரங்களே.
அது சிலருக்கு திடீரென்று ஏதோ ஒரு கடினமான பொருள் அவர்கள் பக்கத்தில் போல் அடித்தது உணர்கிறார்கள், ஆனால் அங்கு ஒரு பொருளோ மனிதரோ இல்லை; இதுவும் எதிரியின் அக்கினியாஸ்திரமே. சிலருக்கு திடீரென தங்களது உடலில் எங்காவது கூர்மையான வலியாக வரும். ஆனால் எதிரியிலிருந்து வரும் இந்த அக்கினியாஸ்திரங்களை நம்முடைய விசுவாசத்தின் கேடகத்துடன் மட்டுப்படுத்த முடியும்.
வேதம், 1 யோவான் 4:4 ல், “பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்” என்று கூறுகிறது. தேவனுக்கே நன்றி!
மேலும் 1 யோவான் 5:4 ல் “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” என்று கூறுகிறது. உங்கள் விசுவாசம் தான் உங்களுக்குத் தேவை. இது உங்களை வாழ்க்கையின் எல்லா சூல்நிலையிலும் சாத்தானை முறியடிக்க உதவுகின்றது
நீங்கள் விசுவாசத்தின் கேடகத்திற்காக வேறெங்கும் தேடி சுற்றிப் பார்க்க வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்; பவுல் சுருக்கமாக உங்கள் ஆவியில் விசுவாசம் உள்ளது என்று ரோமர் 12:3 ல் சொல்லியிருக்கிறார்.
வார்த்தையைக் கற்றுக்கொண்டு செயல்படுவதன் மூலம் உங்கள் விசுவாசத்தை வலுவாக வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி நடக்கும் எதையும் பொருட்படுத்தாமல் பயப்படாமல் இருங்கள்; தேவ வார்த்தையை விசுவாசத்துடன் பேசுங்கள். சாத்தானின் தந்திரங்களையும் செயல்திட்டங்களையும் கவிழ்க்க உங்கள் விசுவாசத்தின் கேடகத்தை உபயோகிக்க வேண்டும். தேவ வார்த்தையில் நிலைத்து நின்றால் உங்கள் வெற்றி தேவ வார்த்தையின் உறுதியைப் போல் இருக்கும். அல்லேலூயா!
அறிக்கை
இந்த உலகின் ஆபத்துகளையும் இன்னல்களையும் பொருட்படுத்தாமல் என் விசுவாசம் உயிர்ப்போடு மேலோங்கி நிற்கிறது! விசுவாசம் என்னும் கேடகமும் பாதுகாப்பும் எனக்கு உண்டு. நான் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்ட மற்றும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிற மரமாக இருக்கிறேன். நான் கிறிஸ்து இயேசுவில் எப்போதும் வெற்றி பெற்றவன்! உலகத்தையும் அதன் அமைப்புகளையும் நான் வென்றுவிட்டேன், ஏனென்றால், நான் உன்னதமானவரின் கூடாரத்திலும், பாதுகாப்பிலும் வசிக்கிறேன். மற்றும் ஆவியின் செட்டைகளுடன் எழும்புகிறேன். (soaring on the wings of the Spirit) இயேசுவின் நாமத்தில், ஆமென்.
மேலும் தியானிக்க: எபேசியர் 6:13-17; ரோமர் 4:19-20