எபிரேயர் 10:38. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.

எப்பொழுது வேதம்  உங்களைப் பார்த்து “நீங்கள் முற்றிலும் ஜெயம் கொண்டீர்கள்” என்று சொல்கிறதோ, அப்பொழுதே அது உறுதியான வெற்றியையும், உங்கள் வாழ்நாள் முழுவதும் வெற்றியாளர்கள் என்பதையும், நீங்கள் முற்றிலுமாய் தோற்கடிக்கப்பட முடியாதவர்கழுமாய் இருக்கிறீர்கள்.

உங்களை எதுவும் காயப்படுத்தவோ பாதிக்கவோ முடியாது;  இதைத்தான் இயேசு கிறிஸ்து மாற்கு 16:18 “சாவுக்கேதுவான எதையும் நீங்கள் குடித்தாலும் அது உங்களை சேதப்படுத்தாது” என்று சொன்னார்.

நீங்கள் விஷமூட்டப்பட முடியாதவர்கள், ஏனெனில் உங்களுக்குள் உள்ள ஜீவன் தெய்வீகமானது. ஆயினும் கிறிஸ்தவன் தேவனுடைய வார்த்தையை உள்வாங்காமல் விசுவாசத்தை எப்படி செயல்படுத்துவது என்று கற்றுக்கொள்ளாமல் இருந்தால் அவன் இலகுவாக உலகத்தின் நெருக்கடிகளினால் அழிக்கப்படுகிறான்.

இயேசு கிறிஸ்து மாற்கு 16:18  சொன்ன வசனத்தின் வெளிச்சத்தில்;  ஒரு கிறிஸ்தவன் அழிவுக்கேதுவான உணவை உட்கொள்ளாமல், சாதாரண உணவை உட்கொண்டு விட்டே “வயிற்றுக் கோளாறு” என்று சொல்வானாகில் அது எவ்வளவு தவறானது என்று பாருங்கள். ஒருவர் “எனக்கு பூச்சி கடித்ததினால் உண்டான பக்கவிளைவை பாருங்கள்” என்று சொன்னால் அவர் தனது விசுவாசத்தை எப்படி பயன்படுத்துவது என்று  கற்றுக்கொள்ளவில்லை; கிறிஸ்துவுக்குள் உள்ள வெற்றியின் வாழ்வை குறித்து அறியாமல் இருக்கிறார்கள்.

                அப்போஸ்தலர் 28 இல்  ஒரு விஷ சர்ப்பம் பவுலை தீண்டியது.  ஆனாலும் அவன் வலியினால் துவண்டு விழவில்லை. மாறாக எந்த வலியும் பாதிப்பும் இல்லாமல் இயல்பாகவே நெருப்பில் அந்த சர்ப்பத்தை தட்டிப் போட்டு விட்டான். மேலும் வேதம் சொல்லுகிறது அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவன் விஷம் ஏறி விழுந்துவிடுவான் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. முடிவில் அவர்கள் அவன் ஒரு தேவன் என்ற முடிவுக்கு வந்தார்கள். மெய்யாகவே இதனையே வார்த்தை உங்களைப் பற்றி சொல்ல வில்லையா?

       சங்கீதம் 82:6. நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.

மறுபடியும் பிறந்த நீங்கள் தெய்வீகத்தன்மை உள்ளவர்களாய் இருக்கிறீர்கள். உங்களுடைய ஜீவன்

( உயிர்) உங்கள் ரத்தத்தில் தங்கியிருக்கவில்லை. அதனாலேயே நீங்கள் இரத்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட முடியாதவர்கள். இப்பொழுது நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறீர்கள். தேவனுடைய வார்த்தை உங்கள் சரீரத்தின் உயிராக இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் உங்கள் சரீரத்தை பெலப்படுத்துகிறார். ஏனெனில் உங்கள் சரீரம் தேவன் வாழும் பலிபீடமாய் இருக்கிறது.

ரோமர் 8:11. அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.

மேற்சொன்ன வசனத்தின்படி பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வந்து நிரந்தரமாய் வாசம்பண்ணின நாளிலிருந்தே இந்த நிலை உங்களுக்கு உண்டாயிருக்கிறது. அவர், உங்கள் சரிரத்தை புதுப்பித்து எந்த வருத்தமோ வியாதியோ பலவீனமோ தாக்காதபடிக்கு காக்கின்றார். இந்த  நிஜத்தில் (சத்தியதில்) உங்கள் விசுவாசத்தை பலப்படுத்திக் கொள்ளுங்கள். கிறிஸ்துவுக்குள் வெற்றிகரமான வாழ்க்கையை வாழுங்கள்.

அறிக்கை

என்னுடைய விசுவாசம் பெலனுள்ளதாயும்,  எந்த சூழ்நிலையையும் மேற் கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. தேவனுடைய வார்த்தையை தியானிப்பதாலும், அறிக்கை செய்வதாலும் என்னுடைய சுற்றம் சூழ்நிலைகளை ஆளுகை செய்து வெற்றிகரமாக வாழ்கிறேன்.

                 மேலதிக வாசிப்பு                                 .