(கொலோசெயர்2:6)  “ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,”

நீங்கள் எப்படி கிறிஸ்து இயேசுவை பெற்றுக் கொண்டீர்கள்?

அது விசுவாசத்தினாலேயே, அந்த விசுவாசம் வார்த்தைக்குள் நடாத்துகிறது.

கொலோசியர்  3:3 சொல்கிறது,  ‘கிறிஸ்து உங்கள் ஜீவனாக  இருக்கிறார்; நீங்கள் அவருக்குள் வாழ்கிறீர்கள், அசைகிறீர்கள், இருக்கிறீர்கள்.

நீங்கள் கிறிஸ்து என்னும் (சுற்றம்) சூழலில் இருக்கிறீர்கள்; ஒவ்வொரு நாளும் இந்த நிஜத்தை சிந்திப்பது முக்கியம்.

உங்கள் தேவைகளுக்காக ஜெபம் பண்ணுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் நடக்கிறோம் என்கின்ற சிந்தை மேலானது; இப்பொழுதே நீங்கள்  கிறிஸ்துவுகுள்ளும் அவர் உங்களுக்குள்ளும் என்ற சிந்தையும்;

அவர் சொன்னபடியே நீங்கள் இருக்கிறீர்கள் என்றும்;

அவர் தந்தபடியே பெற்றுக் கொண்டீர்கள் என்றும்;

அவர் உங்களால் என்ன செய்ய முடியும் என்று சொன்னாரோ அதையே செய்ய முடியும் என்ற சிந்தையில் இருங்கள் .

இந்த வெளிச்சத்தில் உங்களைக் கண்டு அதன்படியே நடவுங்கள்.

ஏசாயா 2:5 “யாக்கோபின் வம்சத்தாரே, கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்.”

நீங்கள் தேவனுடைய வார்த்தையில் நடக்கும்போது தேவனுடைய வெளிச்சத்தில் நடக்கிறீர்கள்.

1யோவான் 1:5-6 “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்”

நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளும் நடந்துகொண்டு அதேவேளை இருளிலும் நடக்க முடியாது.

இருள் வெளிப்படுத்துவது எல்லைகளையும், தடைகளையுமே; அவை யாவும் பொல்லாங்கனால் உண்டாயிருக்கிறது.

ஆனால் இயேசு கிறிஸ்து என்ன சொன்னார்?

யோவான் 8:12  “மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்”.

நீங்கள் கிறிஸ்துவுக்குள் நடக்கும்போது கிறிஸ்துவின் ஜீவனை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கிறீர்கள்; நீங்கள் எக்காலமும் வெற்றி பெறுகிறவர்களும் மற்றும் ஆரோக்கியத்திலும் இருக்கிறீர்கள்.

எப்பொழுதும் கிறிஸ்துவுக்குள் வெற்றி பெருகிறவர்கள் என்ற சிந்தையில் வாழுங்கள்.

தேவன் உங்களை பார்க்கும் போது நீங்கள் விடுதலையும், உதவியும் வேண்டி நிற்பவர்களாக காண்பதில்லை; மாறாக அவர் உங்களை பலவான்களாகவும், பரிசுத்த ஆவியினால் சம்பூரணமாக நிறைந்தவர்களாகவும், வல்லமை பொருந்தியவர்களாகவும் காண்கிறார்; அவர் உங்களை முற்றிலும் ஜெயம் பெற்றவர்களாக காண்கிறார்.

அவர் உங்களை சித்தரிப்பதுடன் உடன்பட்டு “ஆமாம் ஆண்டவரே நீங்கள் அழைத்தபடியே ஆகட்டும் கிறிஸ்து இயேசுவுக்குள் நான் யார் என்ற வெளிச்சத்தில் நடக்கிறேன்” என்று சொல்லுங்கள்.

ஜெபம்

நான் கிறிஸ்துவுடன் ஒருமித்துவிட்ட சிந்தையில் இருக்கிறேன்.

நான்அவருக்குள் வாழ்கிறேன், அசைக்கிறேன், இருக்கிறேன். அவரினால் எப்பொழுதும் வெற்றி பெற்றவறவனும் ஆளுகை செய்பவனாக இருக்கிறேன்.

                 மேலதிக வாசிப்பு                                 .

கொலோசெயர்1:26-27;       கொலோசெயர்3:1-4