(கொலேசர் 2:20. ) நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல, 

அப்போஸ்தலர் பவுல் கொலேசியாவில் உள்ள கிறிஸ்தவர்களுடான உரையாடலின் நிறைவாக மேலே உள்ள வசனத்தற்கூடாக அவரது விளக்கத்தை தந்திருக்கிறார். மறுபடியும் அவரது வசனத்தை கவனித்து பாருங்கள் ; ” நீங்கள் கிறிஸ்துவுடனே உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால் , இன்னும் உலக வழகத்தின்படி  பிழைகிறவர்கள் போல…” இந்த அருமையான வசனம் முத்தாய்ப்பாக சொல்லுகிறது; கிறிஸ்தவன் இந்த உலகத்தில் வாழ்பவனல்ல ; சாதாரண இயற்கை வாழ்வுக்கு உட்பட்டவனும் அல்ல . அல்லேலூயா !

ஆதலினால் நீங்கள் உலகத்தின் வழிபாடுகளுக்கும் அதன் அடிப்படை வழக்கங்களுக்கும் உட்படாதவர்களும், அதனால் பாதிக்கப்படாதவர்களுமாய்  இருக்கிறீர்கள். நீங்கள் வேறு உலகத்தில் இருந்து வந்த படியால் இந்த உலகத்தின் நடைமுறையினாலும் அல்லது அதன் அடிப்படை விதிமுறைகளினாலும்,

சடுதியாக வாழ்விலும் மற்றும் இயற்கையாக ஏற்படும்  தாக்கம் உங்களை பாதிக்க முடியாததும் கூடாததுமாய் இருக்கிறது.

ஏனென்றால் நீங்கள் வேறு உலகத்தில் இருந்து உண்டானவர்கள்; இது வேறுவிதமான சூழலை உடையதாய் இருக்கிறது; அது கிறிஸ்துவே உங்களுக்கு  சுற்றமும் சூழலுமாய் இருக்கிறார்.

பழைய எற்பாட்டில் இஸ்ரவேலின் பிள்ளைகள் எகிப்தை விட்டு வெளியே வனாந்திரத்திற்க்கு ஊடாக பயணித்தபோது; அவர்கள் தங்கள் சொந்த  இதமான காலநிலைக்குள் (சூழல்) பயணித்தார்கள்.

அவர்கள் வனாந்திரத்தில் இருந்தாலும் அவர்கள் பாதிக்கப்படவில்லை; எந்த குறைவும் இல்லாதவர்களாயும், மாசு படாதவர்களும் அந்த  கடுமையானதும், யாரையும் பலவீனப்படுத்தக்கூடிய பாலைவனத்திலே நடந்தார்கள். பகலிலே கடுமையான வெய்யிலிலிருந்து பாதுகாக்க குடை போல மேகமும் , இரவு முழுவதும் பொல்லாத குளிரில் இருந்து பாதுகாக்க அக்கினிஸ்தம்பமும் அவர்களை சூழ்ந்துகொண்டது. அவர்கள் வனாந்தரத்தில் இருந்தாலும் வேறு விதமான நல்ல சூழலில் இருந்தார்கள்.

எப்படி இருக்கிறது இந்த மகிமை? !!!

ஆனால், நீங்களோ மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் ஆனபடியினால் மிகவும் மேலான மகிமையை அடைந்து இருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறீர்கள். கிறிஸ்து ஒரு இடமாகவும்,   கிறிஸ்து உங்களுக்கு சுற்றமும் சூழலுமாய் இருக்கிறார்.

 நீங்கள் மேலான உலகத்தில் இருந்து வந்த படியால் இந்த உலகத்தின் நடைமுறையினாலும் அல்லது அதன் அடிப்படை விதிமுறைகளினாலும், சடுதியாக வாழ்விலும் மற்றும் இயற்கையாக ஏற்படும்  தாக்கம் உங்களை பாதிக்க முடியாததும் கூடாததுமாய் இருக்கிறது.

நீங்கள் மேலான உலகத்தில் இருந்து உண்டானவர்கள்; இது வேறுவிதமான சூழலை உடையதாய் இருக்கிறது; அங்கு  கிறிஸ்துவே உங்களுக்கு சுற்றமும் சூழலுமாய் இருக்கிறார்.

         மறுபடியும் பிறந்த நீங்கள் கிறிஸ்து என்று  அழைக்கப்படும் சூழலில் மறுபடியும் பிறந்த போதே வந்து சேர்ந்தீர்கள். கிறிஸ்துவின் சூழலில் உள்ள வாழ்வு வேறுபட்டது. அங்கே எல்லாமே பரிசுத்தமாயும் பரிபூரணமாயும் உள்ளது. அங்கே தோல்வியோ, பலவீனமோ, வீழ்ச்சியோ, வருத்தங்களோ, வியாதிகளோ, வறுமையோ அல்லது வாழ்வின் வேறெந்த எதிர்மறையான காரியங்களும் இல்லை.

       உங்களில் இருப்பது எல்லாமே மகிமையும், நீதியும், ஜீவனும் மற்றும் அழியாமையும், மகிழ்ச்சியும், சுகமும், செழிப்பும் அதனோடு நிறைவுமே.

கிறிஸ்துவின் அந்த சூழலே பரலோக ராஜ்யமாய் இருக்கிறது.

         எல்லா சூழலுக்கும் மேலாய் முழுமையான ஆளுகை உங்களில் இருக்கிறது.

நீங்கள் ஒருபோதும் எந்த உலகத்தின் நியதிக்கும் உட்பட்டவர்கள் அல்ல. ஏனெனில் உண்மையில் நீங்கள் இந்த உலகத்தில் வாழ்பவர்கள் அல்ல.

         ஆவியானவர் பவுலுக்கு ஊடாக எங்களுக்கு மேலே கொடுத்த வசனத்துக்கூடாக தெரிவிப்பது என்னவென்றால்; நீங்கள் பரலோகத்துக்குள் இருந்து வாசம் பண்ணுகிறீர்கள். ஆதலினால் மேலானவைகளையே நோக்கியிருங்கள் . பரலோகக்காரியங்களே உங்களுக்கு சொந்தமாய் இருக்கிறது,  அங்கே இருந்தே நீங்கள் செயல்படுகிறீர்கள்.

ஜெபம்

      இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அன்பின் பரலோக பிதாவே, என்னை பரலோகத்தின் வாசியாகவும், பரலோகத்தின் நியமங்களின்படி வாழவும் உருவாக்கியதற்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் கிறிஸ்துவின் சுழலுக்குள் வாழ்கிறேன், அங்கே நான் அனுபவிப்பது எல்லாம் மகிமையும், நீதியும், ஜீவனும், அழியாமையும், சந்தோசமும், சுகமும், சமாதானமும், செழிப்பும் மற்றும் நிறைவுமே.

                                      மேலதிக வாசிப்பு                                               .

    பிலிப்பியர் 3:20-21          கொலோசெயர் 3:1-4