(யோவான் 8:32). சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். |
மாற்கு 7:25-30 வரைக்கும் இங்கே ஒரு சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீ தன்னுடைய பிசாசு பிடித்த மகளை குணமாக்கும்படி இயேசுவிடம் வருகிறாள். அவர்களின் சம்பாசணையின் நிறைவாக இயேசு “நீ போகலாம் பிசாசு உன் மகளை விட்டு நீங்கி போயிற்று” என்றார். அவள் வீட்டிற்கு சென்ற போது அங்கே அவளின் மகள் மெய்யாகவே குணமானாள் என்று காண்கிறாள். எப்பொழுது ஆண்டவர் அந்த ஸ்திரீக்கு “நீ உன் வீட்டுக்குப் போகலாம் பிசாசு உன் மகளை விட்டு நீங்கி போயிற்று” என்று சொன்னபோது, அவர் தான் சொன்னது நிறைவேறியதா என்று ஆராயவில்லை. ஏனென்றால் அவர் என்ன சொன்னாரோ அதுவே சத்தியம்.
இப்பொழுது மாம்சத்தில் பிசாசினால் தோன்றும் எல்லா வெளிப்பாடுகளும் பொய்யே. எப்பொழுது நான் ( பாஸ்டர் கிறிஸ் ) ஆவியால் உந்தப்பட்டு “பிசாசே இப்பொழுதே வெளியேறு” என்று சொன்னது சத்தியமாகின்றது. இது சத்தியத்தை புரிந்து கொள்வதின் அவசியத்தை எங்களுக்கு காண்பிகின்றது. உன் வாயினால் தேவனுடைய வார்த்தையை உச்சரிக்கும் பொழுது தேவனே அந்த வார்த்தையை பேசுகிறார்; எந்த பிசாசோ, வல்லமையோ இதை தடுத்து நிறுத்த முடியாது.
“நான் வெளியேறமாட்டேன்” என்று பிசாசு சொன்னதால் பிசாசு இப்பொழுதும் வெளியேறவில்லை என்று சிலர் நினைக்கலாம்; இல்லை, நாங்கள் தேவ வார்த்தையை ஆவிக்கூடாக பேசி சத்தியத்தை நிலை நிறுத்துக்கிறோம்; அதனால் பிசாசை, சூழ்நிலைகளை நாம் நிர்மூலமாக்குகிறோம்.
மேலும் சத்தியம், தேவனுடைய இராஜ்யத்தில் இருக்கிறது அது மாம்சத்தின் வெளிப்பாட்டிலேயோ அல்லது உணர்வில் ( ஐம்புலன்களில்) தோன்றும் விருப்பு வெறுப்புக்களுக்கு சம்பந்தப்பட்டது அல்ல. மேலும் சத்தியம் உண்மையிலிருந்து (fact) வேறுபட்டது. சில வேளை உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாதிருப்பது உண்மையாக (fact) இருக்கலாம். ஆனாலும் நீங்கள் பணம் இல்லாத ஏழை என்பது சத்தியமல்ல. ஆகையால் “நான் பணம் இல்லத ஏழை” என்றோ, அல்லது “எனக்கு காய்ச்சல் உண்டு” என்று சொல்லும் பொழுது நீங்கள் சத்தியத்தை பேசவில்லை. புதிய சிருஷ்டிப்பின் நிஜத்தோடு ஒத்துவராத உங்கள் அனுபவங்கள் எல்லாம் சத்தியம் அல்ல, அவை பொய்யான நிழல்களே. உதாரணமாக யாராவது “எனக்கு வருத்தம் இல்லை என்று சொல்ல விருப்பமில்லை” ஆனாலும் “நான் சுகத்தை உணரவில்லை” என்று சொன்னால் அது தவறு. விசுவாசம் இப்படியாக பேசாது.
வேதம் என்ன சொல்லுகிறது “சீயோனில் வாசம் பண்ணுகிறவர்கள் நான் வியாதியாய் இருக்கிறேன்” என்று சொல்வது இல்லை. (ஏசாயா 33:24)
“நான் வியாதியாய் இருக்கிறேன் என்று சொல்லும்பொழுது நீங்கள் பொய் பேசுகிறீர்கள்; புதிய சிருஷ்டிப்பு வியாதிப்பட முடியாதது என்பதே சத்தியமாய் இருக்கிறது. சத்தியமான தேவனுடைய வார்த்தை உங்கள் சுகம், பொருளாதாரம், குடும்பம், வேலை, வியாபாரம் மற்றும் வாழ்வின் எல்லா காரியங்களைக் குறித்து என்ன சொல்லுகிறது என்று கண்டுபிடியுங்கள். அதே சத்தியத்தை தைரியமாக தேவ வார்த்தையோடு உடன்பட்டு அறிக்கையிடுங்கள்.
பரிசுத்த ஆவியானவர் வேதவார்த்தையின் சத்தியத்தை எங்கள் ஆவிக்குள் வெளிப்படுத்துகிறார். அவருடைய அழைப்பை அறிந்து கொள்ளுவதற்காகவும், பரிசுத்தவான்களின் சுதந்திரத்தில் உள்ள மகிமையான ஐஸ்வர்யத்தை காண்பதற்காகவும் பிரகாசமுள்ள மனக்கண்களை தந்திருக்கிறார். தேவன் என்னைப் பற்றி என்ன சொன்னாரோ நான் அதுவாகவே இருக்கிறேன், மற்றும் நான் எதை உடையவன் என்று தேவன் சொல்லி இருக்கிறாரோ அதையே நான் பெற்றும் இருக்கிறேன், ஏனெனில் தேவனுடைய வார்த்தையே சத்தியம் ( நிஜம்). கர்த்தர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
அறிக்கை
யேவான் 17:17; யோனா 2:8; சங்கீதம் 119:142
மேலதிக வாசிப்பு .