ரோமர் 12:21. நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.
நன்மையானது தீமையை விட பலமும் மேலானதும், மிகவும் வல்லமை வாய்ந்ததுமாகும். தீமையானது நன்மைக்கு மேலாக ஒரு போதும் நீடித்த அதிகாரம் செலுத்த முடியாது. இந்த உலகம் கொடுமை நிறைந்ததும் கற்பனை பண்ண முடியாத அளவுக்கு பகை நிறைந்தது என்று சிலர் சொல்வார்கள்.
ஆனால் அன்பு பகையை, வெறுப்பை விட மேன்மையும், பலமும், வாய்ந்தது. இது ஒளியையும் இருளையும் போன்றது. இருள் ஒரு போதும் ஒளியை மேலோங்க, மேற்கொள்ள முடியாது. ஒளி பிரகாசிக்கும் போது இருள் மறைந்து போகிறது.
பெரும்பாலானோர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் ஒளியை பிரகாசிப்பதட்கு பதிலாக இருளை பற்றி அதிகமாக (கதைத்துக் ) பேசிக்கொண்டு கொண்டிருக்கிறார்கள். ஒளியே இருளிற்கு தீர்வாகும். அன்பு மாத்திரமே வெறுப்புக்கு தீர்வாகும். நன்மையே தீமைக்கு தீர்வாகும்.
நாங்கள் எல்லோரும் முன்னெப்போதையும் விட தீமைக்கு மேலான நன்மையின் வல்லமையை நம்ப வேண்டும். எவராக இருந்தாலும், எங்கே இருந்தாலும் அதிக தீமை செய்தால் நீங்கள் பதிலாக அதிக நன்மை செய்யுங்கள். நன்மை செய்வது உங்களை வெற்றியாளர்கள் ஆக்கும். தீமை செய்பவன் ஒருவரும் ஒருபோதும் வெற்றி வீரனாக ஆவது இல்லை. உதாரணமாக மக்கள் (யாராவது) ஆயுதத்தை எடுத்து மற்றவர்களை தாக்கும் போது அவர்களின் இயலாமைக்கும், பலவீனத்துக்கும் அது சாட்சி. உண்மையான பலமும் நிஜமான வல்லமை என்பது நீங்கள் எவ்வளவு அன்பை மனுஷர்கள் மீது வெளிப்படுத்தி அவர்களில் நல்ல மாற்றத்தை ஏற்றப்படுத்துவதே. இந்த அன்பினால் நீங்கள் மற்றவர்களை கட்டி எழுப்ப முடியுமோ அதுவே அவர்களை பலப்படுத்தும்.
தேவனின் அன்பு உங்களது வாழ்க்கையை வழி நடத்துவதாக .
நல்லவர்கள் தீமையை வெல்லுவதற்கு ஒன்றும் செய்யாமல் இருந்தால் போதும் என்று பொதுவாக சொல்லுவார்கள், ஆனால் உங்களது நல்ல செய்கைகளால் உங்களை சுற்றியிருக்கும் இருளின் வேலையை விலக்கி விடுங்கள். ஏனென்றால் நீங்களே இந்த உலகத்துக்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள்( மத்தேயு 5:14).
மத்தேயு 5:16 சொல்கிறது” மனுஷன் உங்கள் நற்கிரியைகளை கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்க கடவது”. இருளும் தீமையும் இன்றைய உலகில் பரவலாக இருந்தாலும் நீங்கள் வெளிச்சமாய் இருந்து பிரகாசியுங்கள். அல்லேலூயா!
அறிக்கை: நான் கிறிஸ்துவின் தூதுவராக இருக்கிறேன், என்னுடைய உலகில் தேவன் அன்பை நான் பரப்புகிறேன். அவருடைய அன்பு எனக்குள் நிறைந்திருக்கிறது; அது என் வார்த்தைகளில் உண்டு, அந்த அன்பு என் செயல்களில் உள்ளது, ஏனென்றால் தேவன் எனக்குள் வாசம் செய்கிறார் , நான் அவருக்குள் வாழ்கிறேன்.
மேலதிக வாசிப்பு: நீதிமொழி 1:10-15; 1 யோவான் 4:8; 1 யோவான் 4:18-21