குற்றநிவாரணபலியாக

ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். (ஏசாயா 53:10)”.

இயேசுவின் எல்லா அற்புத அடையாளங்களையும் புத்தகங்களாக பதிவு செய்து வெளியிட்டால் முழு உலகமும் கொள்ளாது என்று பைபிளில் எழுதியிருக்கிறது.
அது மெய்யாகவே உண்மையாக இருக்கிறது. அவருடைய முழு வாழ்வும் முடிவில்லாத அற்புதங்களாலும் அதிசங்களாலும் அடையாளங்களினாலும் நிரம்பியதாக இருக்கிறது.

அவர் இந்த உலகத்திற்கு நம்பிக்கையையும், சந்தோசத்தையும், ஜீவனையும் கொடுத்திருக்கிறார்.
வேதம் அப்போஸ்தலர் 10:38 இல் “அவர் நன்மை செய்கிறாவராகவும், பிசாசின் பிடிக்குள் சிக்குண்ட யாவரையும் சுகமளிக்கிறவராகவும் இருந்தார். ஏனெனில் அவருடனே கூட தேவன் இருந்தார்”.

இந்த இயேசு கிறிஸ்து இப்பொழுது பரலோகத்தில் இருந்தாலும் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார் (எபிரேயர் 13:8). அவர் இப்பொழுதும் அன்பாகவும், கிருபை பொருந்தியவராகவும் இரக்கம் நிறைந்தவராகவும், மனதுருக்கம் நிறைந்தவராகவும் மற்றும் பைபிள் நாட்களில் செய்ததுபோல இன்றும் அற்புதங்களையும் செய்கிறார்.
அவர் இப்பொழுதும் தூக்கியெடுக்கிறார், ஆசீர்வதிக்கிறார் மற்றும் வாழ்க்கையை மாற்றியமைக்கிறார், ஆனால் இவை யாவற்றையும் எங்களுக்கூடாகவே செய்கிறார்.

இதையே அவர் மேலே சொன்ன வார்த்தையிலே காண்கிறோம். நாங்கள் அவருடைய வித்தாக (சந்ததி) அவருடைய நாட்களை நீடிப்பவர்களாக இந்த பூமியிலே இருக்கிறோம்.

அவருக்காக அவருடைய நிலையிலே நின்று அவருடைய மகிமையை சுமக்கிறவர்களாகவும் தேவ பிரசன்னத்தை எம்மிலே கொண்டிருப்பவரகளாகவும் இருக்கிறோம். அவர் எங்களுக்கு அவருடைய பரிசுத்த ஆவியை தந்ததினால் எங்களால் அவருடைய கிருபையை, ஞானத்தை, இரட்சிப்பை, நீதியை, அன்பை, சுகத்தை, பரிபூரணத்தை மற்றும் இந்த விழுந்து போன மனித குலத்திற்கும் இருண்டுபோன இந்த உலகத்திற்கும் அழகை அறிமுகம் செய்கிறவர்களாக இருக்கிறோம்.

இந்த இருண்ட உலகத்தில் உள்ள வியாதியஸ்தர்கள், விழுந்து போனவர்கள், ஏழைகள், புறக்கணிக்கப்பட்டவர்கள், கவனிப்பாரற்ரவர்கள், நம்பிக்கையில்லாதவர்கள் மத்தியில் இயேசு கிறிஸ்து எங்களுக்கூடாக வெளிப்பட்டு அந்த நம்பிக்கையில்லாத அவர்களுடைய சூழ் நிலையை தலைகீழாக மாற்றுகிறார்.

இந்த உலகம் வேண்டி நிற்கும் தீர்வு இயேசு கிறிஸ்துவாக இருக்கிறார், அவருடைய அன்பையும், மற்றும் மேலான குணாம்சங்களையும் அவருடைய தேவ சுபாவத்தில் பங்குள்ளவர்களாக இருந்து அவரையே எங்களுக்கூடாக வெளிப்படுத்துகிறோம்.

நீங்கள் தேவப்பிரசன்னத்தை சுமக்கிறர்வர்களாயும், நீங்கள் பரலோகத்தின் தலைமைச் செயலகமாயும் இருக்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் தேவனுடைய வீடாக இருக்கிறீர்கள். அவர் வாழும் அசையும் இயங்கும் பலிபீடமாக இருக்கிறீர்கள். ஆகையால் உங்களைச் சூழ்ந்திருக்கும் உலகில் அவருடைய தெய்வீக பிரசன்னத்தை வெளிப்படுத்துங்கள்.

பைபிள் நாட்களில் எப்படி அவர் வெளிப்பட்டாரோ இப்பொழுதும் அப்படியே எங்களுக்குள் இருந்தும் எங்களுக்கூடாகவே தன்னை வெளிப்படுத்துகிறார் என்கிற சிந்தை உடையவர்களாகவும், கிறிஸ்துவின் சிந்தை உடையவர்களாகவும் இருங்கள். மற்றும் இந்த உலகத்தை அவருடைய தெய்வீக பிரசன்னத்தால் நிரம்பியுள்ள நீங்கள் ஆசீர்வதியுங்கள்.

ஜெபம்
————-

அன்பின் தகப்பனே இந்த மேலான தகமை தேவ சுபாவத்தில் பங்குள்ளவர்களாக மாத்திரமல்ல உம்முடைய தெய்வீக பிரசன்னத்தை சுமந்து இந்த உலகத்திற்கு அதை பகிர்ந்தளிக்கிறாவர்களாகவும் என்னை மாற்றியதற்காக உமக்கு நன்றி. எனக்கூடாக உம்முடைய பல பரிமாணங்களை கொண்ட ஞானத்தையும், கிருபையையும், பரிபூரணத்தையும், இரட்சிப்பையும், நீதியையும், அன்பையும், சுகத்தையும், முழுமையையும் எங்களுக்கூடாக வெளிப்படுத்தி என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறா மாற்றத்தையும் இந்த உலகத்திலே பரிசுத்த ஆவியானவருக்கூடாக நிகழ்த்துவதற்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே மிக்க நன்றி. ஆமேன்!

மேலதிக வாசிப்பு:
மத்தேயு 28:19-20;
மத்தேயு 10:7-8

Thanks 🙏
Pas. Mahen