அனுதினமும் சந்தோஷம்
“இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை கேளுங்கள் அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாய் இருக்கும் படி பெற்றுக் கொள்வீர்கள் (யோவான் 16:24 )
நமது ஆரம்ப வேத வசனம் பிதாவின் இருதயத்தையும் நமக்கான அவருடைய வாஞ்சையையும் வெளிப்படுத்துகிறது. உங்கள் சந்தோஷம் எப்போதும் நிறைவாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஏனென்றால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் முக்கியமானது. மன மகிழ்ச்சியான மற்றும் சந்தோஷமான இருதயம் சரீரத்திற்கும், ஆத்துமாவுக்கும் சுகத்தை கொண்டு வருகிறது என்று நீதிமொழிகள் 17 ஆம் அதிகாரம் 22 ஆம் வசனம் கூறுகிறது, இது TPT வேத மொழிபெயர்ப்பில் உள்ளது.
நீங்கள் எந்த சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும் பரவாயில்லை. அங்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள். என்றென்றும் சந்தோஷமாய் இருங்கள். இங்கு அழகான பகுதி என்னவென்றால் நம் சந்தோசம் பரிசுத்த ஆவியினால் உண்டாகிறது, இது சூழ்நிலைகளை சார்ந்தது அல்ல. தேவனுடைய ராஜ்ஜியம் புசிப்பும், குடிப்பும் அல்ல அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷமாக இருக்கிறது என்று ரோமர் 14:17 ஆம் வசனம் கூறுகிறது. ஆபத்துக்கள் மற்றும் துன்புறுத்துப்பவர்களுக்கு மத்தியிலும் நாம் சந்தோஷத்தால் நிறைந்திருக்கிறோம். என் சகோதரரே நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும் போது அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் என்று யாக்கோபு 1:2-3 வது வசனங்கள் கூறுகிறது. அதாவது உங்கள் வாழ்க்கையில் மனமுறிவுக்கு இடமில்லை.
மற்றவர்கள் உங்களை தொடர்பு கொள்ளும்போது அவர்கள் சொல்ல முடியாத சந்தோஷம் மற்றும் நிறைவான மகிமையை அனுபவிக்கிறார்கள். இஸ்ரவேல் ஜனங்களை பற்றி வேதம் இப்படியாக சொல்லுகிறது அவர்கள் பெரிய பலிகளை செலுத்தி எருசலேமின் மதில்களை திரும்பக் கட்டி மகிழ்ந்த பின் அவர்களுடைய சந்தோஷம் தூரத்தில் கேட்கப்பட்டது. அன்னாளிலே மிகுதியான பலிகளை செலுத்தி தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதானால் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஸ்திரீகளும் பிள்ளைகளும் கூட களிகூர்ந்தார்கள் எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது என்று நெகேமியா 12:43 ஆம் வசனம் கூறுகிறது. மகிழ்ச்சிக்கு வெழிபாடுகள் உள்ளன என்பதை இது உங்களுக்கு தெரிவிக்கிறது. சிரிப்பு, துதி, பாடல்கள் பாடுவது, நன்றி செலுத்துதல் என்பவை மகிழ்ச்சியின் வெளிப்பாடுகள். எனவே பயங்கரமான காரியங்கள் இன்று உலகில் நடந்தாலும் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியால் நிறைந்திருங்கள். இருளுக்கு உங்கள் வாழ்வில் இடம் அளிக்காதீர்கள். மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் உங்களுக்குள் இருந்து உருவாக்கி வெளியிடுங்கள்.
நாம் இந்த அறிக்கை சேர்ந்து சொல்வோம்.
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதே என்னுடைய பலன் என்பதால் நான் எப்போதும் துதியல் திளைக்கிறேன். சொல்ல முடியாத மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறேன். மகிமையால் நிறைந்திருக்கிறேன். என் மகிழ்ச்சி சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்டது. இது என் உள்ளான மனிதரிடமிருந்து சூழ்நிலைகளை கடந்து வருகிறது. என் மகிழ்ச்சி நிரந்தரமானது, அது என்னை வல்லமையோடும் ஜீவனோடும் வைத்திருக்கிறது. தேவனுக்கே மகிமை!
மேலும் தியானிக்க ஏசாயா 12 :3; 1 பேதுரு 1:7-8 (14/03/2024)