நித்திய ஜீவன் : நீங்கள் ஏற்கனவே பெற்றுவிட்டீர்கள்

தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். 
 குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். 
 ( 1 யோவான் 5:11-12)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யோவான் 5 :26 இல் சொல்லியிருக்கிறார், “ஏனெனில் பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார்”.
நாம் மேலே குறிப்பிட்ட வசனத்தின்படி நாங்கள் வாசிக்கிறோம் தேவன் நமக்கு நித்திய ஜீவனை ஏற்கனவே தந்துவிட்டார் என்பதை தெளிவுபடுத்துகிறது.
பலர் நித்திய ஜீவன் என்பது இனிமேல்தான் எமக்கு வரும் என்றும், அது ஒரு வாக்குத்தத்தம் என்றும் நினைக்கிறார்கள், ஆனால் அது அப்படியல்ல. இது உங்களுடைய, இப்பொழுதே உள்ள நிகழ்கால, கிறிஸ்துவுக்குள் உள்ளான சொத்தாகும். நீங்கள் இப்பொழுதே நித்திய ஜீவனை உடையவர்களாக இருக்கிறீர்கள்.
நீங்கள் மறுபடியும் பிறக்கும்பொழுதே நீங்கள் தேவனுடைய ஜீவனையும், சுபாவத்தையும் ஆவியிலே பெற்றுள்ளீர்கள். இது மெய்யாகவே இப்பொழுதே நிஜமாக இருக்கிறது. இந்த நித்திய ஜீவன் தேவனுடைய ஜீவனாயும் அவருடைய, சுபாவமாயும் இருப்பதினால் அது உங்கள் சரீரத்திலேயும் மாற்றத்தை ( நல்ல தாக்கத்தையும்) உருவாக்க வல்லதாக இருக்கிறது. அதையே வேதம் ரோமர் 8:11 இல் கற்றுத்தருகிறது. “அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்”.
 மேலே குறிப்பிட்ட வசனம், எப்போது கிறிஸ்து உங்களுக்குள் நிரந்தரமாக வாசம்பண்ண தொடங்கினாரோ அன்றே உங்கள் வாழ்வின் நிரந்தரமான பரிபூரணமான சுகவாழ்வு நிஜமாகிறது. இந்த வசனம் சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தை உயிர்ப்பிக்கிறதை காண்பிக்கின்றது. திருச்சபைகள் இந்த சத்தியத்தை, இந்த நிஜத்தை கவனித்து இதனையே கற்றுக்கொடுப்பார்களானால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த சத்தியத்தின் சிந்தையே உங்கள் ஒவ்வொரு நாள் காரியங்களிலும் நிரம்பியிருப்பதாக.
1 யோவான் 5:13இல் யோவான் எழுதுகிறார் “13: உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்”.
நித்திய ஜீவன் என்பது இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கும் ஜீவனாக இருக்கிறது. அவர் இந்த ஜீவனை தன்னை விசுவாசிக்கும் எல்லோருக்கும் கொடுக்கிறார்.
பலர் இன்னும் ஏன் தங்களுடைய ஆரோக்கியத்திற்காக போராடுகிறார்கள் என்றால் நித்திய ஜீவனைக்குறித்த அறியாமையும், நித்திய ஜீவனை உடையவர்கள் என்கின்ற சிந்தை இல்லாமல் இருப்பதே. நித்திய ஜீவன் என்பது வியாதிகளுக்கு அப்பாற்பட்டதும், மரணமும் நோய்களுக்கும் மேற்கொள்ள முடியாததுமாயிருக்கிறது. உங்களுடைய சரீரமானது ஜீவனுள்ள தேவன் வாழும் ஜீவனுள்ள பலிபீடமாய் இருக்கிறது. இதனுடைய அர்த்தத்தை அறிவீர்களா?
தேவனுடைய வார்த்தை அறிவிக்கின்றது ரோமர் 8:10 இல் “ மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்”. 
கொலோசேயர் 1:27இல் பவுல் தீர்க்கமாக எழுதுகிறார் “ கிறிஸ்துவானவர் தம்முடைய மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள்ளே வாசம்பண்ணுகிறார்”. தேவனுக்கே மகிமை!
அறிக்கை
கிறிஸ்து எனக்குள்ளே வாசம்பண்ணுகிறார். அவருடைய தேவ வல்லமையானது நான் தேவரகமான, வெற்றிகரமான வாழ்வை வாழவும் அவருக்குள் எனக்கான அழைப்பை நிறைவேற்றவும் என்னைப் பலப்படுத்தியுள்ளது. நான் தேவ மனுஷனாகவும் கிருபையினாலும், தேவத்துவத்தின் மகிமையினாலும் நிரம்பியிருக்கிறேன். அல்லேலூயா!
மேலதிக வாசிப்பு :
யோவான் 17:1-3; 1 யோவான் 5:11-13