லுக்கா 21:25. சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.
26. வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.

 

ன்று மனிதர்கள் மத்தியில் என்றுமில்லாத அளவுக்கு  கொடுமை, வன்முறை, பயங்கரவாதம், மற்றும் சக மனிதனை, மனிதாபிமானமற்றமுறையில்  நடாத்திவரும் தன்மை மிகவும் அதிகரித்து வருகின்றன. புள்ளி விபரங்கள் தெளிவாக காண்பிக்கின்றன, இந்த உலகத்தில் கொடுமைகள் அதிகரிப்பது மாத்திரம் அல்ல  வர வர நிலைமகள் மோசம் அடைவதுடன், முன்என்றுமில்லாத அளவுக்கு மனிதர்கள் மத்தியில் மனச்சுமையும் (tension) அதிகரித்து காணப்படுகிறது.

 

இது நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும், இதைத்தான் ஆரம்பத்தில் வாசித்த வசனத்தில் இயேசு கிறிஸ்து குறிப்பிட்டு சொல்கிறார். இந்த எண்ணற்ற பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து உலகத் தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனர். 

துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான மக்கள் இந்த பிரச்சனைகளுக்கான பதில்களை அல்லது தீர்வுகளை இந்த உலக தலைவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள், ஆனால் இவைகளுக்கான தீர்வு  நிட்சயமாக இவர்களால் வழங்க முடியாது. 

ஆனால் எங்களிடமோ இந்த எல்லா பிரச்சனைகளுக்குமான பதில் இருக்கிறது. அது என்னவென்றால், கிறிஸ்துவும் அவருடைய மகிமையான  நற்செய்தியும்தான். இந்த நற்செய்திதான் எல்லாவற்றிற்கும் பதிலாக அமைகிறது. 

இயேசு சொன்னார், “ ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், 

அப்போது முடிவு வரும். ”(மத்தேயு 24:14).  

 

இந்த நற்செய்தியை எல்லோரும்  நம்புவார்கள் என்று இயேசு சொல்லவில்லை; ஆனால் முழு உலகிற்கும் இந்த நற்செய்தியை அறிவிப்பதுதான் எங்கள் கடைமை. நாங்கள் அறிந்தவற்றை ஜனங்களுக்கு பகிர்ந்தளிக்கும் விடையத்தில் தேவனுக்கு  பொறுப்பு (accountable)​ கூறவேண்டும்.

ஆகையால், துரிதமாக ஆவியானவரின் வல்லமையோடு சுவிசேஷத்தை உலகம் முழுவதும் பிரசங்கிக்க வேண்டும். 

உலகில் இருள் சூழ்ந்த இடங்கள் கொடுமையான காரியங்களால் நிரம்பியுள்ளன, ஆனால் இந்த இருண்ட உலகிற்கு நாங்கள் வெளிச்சமாக இருக்கிறோம். எனவே நாங்கள் இந்த உலகிற்கு கிறிஸ்துவின் நற்செய்தியின் ஒளியை சுமந்து செல்கிறோம். ஆகையால் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியினால் உங்கள் உலகத்தை ஒளிரச் செய்யுங்கள்.

 

மத்தேயு 5:16 ல் இயேசு சொன்னார், “இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது..” மாற்கு 16:15 ல் அவர் மேலும் வலியுறுத்தினார், “… பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.” 

மேலே குறிப்பிட்ட இயேசு கிறிஸ்துவின் கட்டளையை பொறுப்போடும் மிகுந்த கவனத்தோடும் நிறைவேற்றுங்கள்

 

உங்கள் கனவுகள் உங்களைப்பற்றிய தனிப்பட்ட விருப்புகளைத் தாண்டி, கிறிஸ்துவின் நற்செய்தி ஜனங்களை சென்றடையவேண்டும் என்ற மேலான சிந்தையுடையதாக இருக்கட்டும். உங்கள் நேரம், வளங்கள் மற்றும் ஆற்றலைப் பயன்படுத்தி, பூமியின் கடைசிமுனை வரை சுவிசேஷசத்தை மிகவும் துரிதமாக  பிரசங்கியுங்கள்!