I கொரிந்தியர் 15:57 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். (I கொரிந்தியர் 15:57.)

கிறிஸ்தவத்தில் நாம் உறுதியாக முன்னேறுகிறோம். நாங்கள் பின்வாங்குவதில்லை.. நாங்கள் பிரச்சனைகளை அல்லது கஷ்டங்களின் மத்தியிலும் தைரியமாகவும் துணிவாகவும் இருக்கின்றோம். நாங்கள் விசுவாசம் நிறைந்த  அறிக்கைகளை தொடர்ந்து பேசுகிறோம். நாம் வாழ்க்கை பற்றி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றோம். என்ன வந்தாலும் நாம் ஜெயம்கொண்டவர்களாக அதிக நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.  சிலர் இப்படி சொல்வார்கள் வாழ்க்கை எதை கொண்டு வரும் என்று தெரியாதென்றும்,  நாங்க்கள் நாளைக்கு என்ன நடக்கும் என்பதை ஒருபோதும் சொல்ல முடியாது என்றும் அறிக்கைபண்ணுவார்கள். ஆனால் அது எங்களுடைய அறிக்கை இல்லை.  நாங்கள் அப்படி பேசுவதில்லை. நாளைக்கு என்ன நடக்கும் என்று எங்களுக்கு தெரியும். நாளைக்கு நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்றும், நாங்கள் ஆனந்த சத்தத்தோடு நடனமாடி களிப்படைவோம்.  ஏனென்றால் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று வேத வார்த்தையில் எழுதியிருக்கிறது.  

(ரோமர் 8:28) “….அதிசீக்கிரத்தில் நீங்கும் இந்த லேசான  நம்முடைய உபத்திரவம். மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை அது உண்டாக்குகிறது” ( 2 கொரிந்தியர் 4:17) 

“நாங்கள் எல்லாவற்றிலும் எல்லா இடங்களிலும் வெற்றி அடைகிறோம்” ( 2 கொரிந்தியர் 2:14)  அல்லேலூயா  நாங்கள் எந்த வார்த்தையினால் பிழைக்கிறோமோ / வாழ்கிறோமோ அந்த வசனம் சொல்கிறது நாங்கள் எப்பொழுதும் வெற்றியாளர்கள். 

( வெற்றி சிறக்கப்பண்ணுகிறவர்கள்) மழையோ வெயிலோ என்ன வந்தாலும் நாங்கள் இலகுவாக செயல்பட்டு வெற்றிபெறுகிறோம். “கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?“என்று ரோமர் 8:36 வசனத்தின் ஒரு பகுதி சொல்கிறது. “உபத்திரவமுமோ, வியாகூலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமுமோ, நாசமோ, பட்டயமோ?” இவை எல்லாவற்றையும் (அனுபவித்து) அறிந்து, பரிசீலித்த பின்பு இந்த வசனத்தை எழுதிய ஆவியானவர் நாம் முற்றிலும் ஜெயம் கொண்டவர்களாய் இருக்கிறோம் என்பதை நிட்சயித்திருக்கிறார்.

மீண்டும் ஏசாயா 54: 16- 17 இல் வசன எழுத்தாளர் எழுதியிருக்கிறார் “இதோ கரி நெருப்பை ஊற்றி தன் கிரியைக்கான ஆயுதங்களை உண்டுபண்ணுகிற கொல்லனையும்  நான் சிருஷ்டித்தேன். உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காமலே போகும். உனக்கு எதிராய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய். இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்திரமும், என்னால் உண்டான அவர்களுடைய நீதியும் ஆக இருக்கிறது” என்று கர்த்தர் சொல்லுகிறார். என்ன ஆச்சரியமான வார்த்தை. இந்த வார்த்தை ஒருவருக்குதுணிகரமாக வாழ்க்கையை எதிர்னோக்குவதற்கு, நம்பிக்கையை தரவில்லையென்றால், வேறொன்றும் நம்பிக்கையை தரமாட்டாது.

நீ தோற்றுப்  போகாதவன். உங்களது வாழ்வு தேவ மகிமைக்கே.  நீங்கள் கிறிஸ்துவின் வெற்றியில் வாழும் வரையில்  உங்களை ஒன்றும் தோற்கடிக்கவோ கீழ் படுத்தவோ முடியாது. இங்கு  நாம் போராடுவதிற்காகவோ,  மேற்கொள்வதற்கோ எதுவுமில்லை. ஏனென்றால் நீங்கள் ஏற்கனவே கிறிஸ்துவுக்குள் வெற்றி பெற்றுவிட்டீர்கள். இதற்கு எதிர்மாறாக நினைப்பதற்கு உங்களது வாழ்க்கையின் எந்த சந்தர்ப்பத்தையும் அனுமதிக்க வேண்டாம்.