(யோவான் 14:10). நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.  

ஆவியானவர் தேவனுடைய காரியங்களை நடப்பிக்கிறார். அவர் திருத்துவ தெய்வத்தின் வல்லமையாக இருக்கிறார். ஆதியிலே பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாக இருந்தபோது,  பரம பிதா வார்த்தையை அனுப்பினார்; ஆவியானவர் காரியங்களை நடப்பித்தார், ஒழுங்கின்மையும் குழப்பமாயும் இருந்தவைகளை ஒழுங்காகவும் நேர்த்தியும் ஆக்கினார்.

வேதம் சொல்லுகிறது, யோபு  26:13  “தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்”

பரலோகத்தின் மகிமையும் அழகும் ஆவியானவருடைய கிரியையாக இருக்கிறது.

அதே ஆவியானவர் இன்றுவரையிலும்  கிரியை நடத்துகிறார். எப்படியெனில் எங்களுக்குள் இருந்தும், எங்களுக்கூடாகவும் காரியம் நடப்பிக்கிறார்.   

இயேசு கிறிஸ்து பூமியிலே இருந்த வேளையிலே அவர் சொன்னார்:

(யோவான் 14:10)என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்”.

இங்கே அவர் ஆவியானவரை குறிப்பிடுகிறார்.

இயேசு பிணியாளர்களை குணமாக்கிய போதும், மரித்தோரை உயிரோடு எழுப்பிய போதும், குஷ்ட ரோகிகளை சுத்தமாக்கிய போதும், 5000 புருஷர்களை ஒரு சிறுவனின் மதிய உணவிலிருந்து போஷித்தபோதும் (இங்கே பெண்கள் குழந்தைகள் சேர்க்கப்படவில்லை) கானான் வீட்டு கல்யாணத்திலே தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியதும், இவையாவும் பரிசுத்த ஆவியானவர் இயேசுவுக்கூடாக நடப்பித்த அற்புதங்கள் ஆகும்.

இயேசு கிறிஸ்து செய்த ஒவ்வொரு அற்புதங்களையும் தனக்குள் வாசம் பண்ணும் பிதாவானவருக்கே சமர்ப்பிக்கிறார்; அவரே பரிசுத்த ஆவியானவர்.

அதே பிதா,  பரிசுத்த ஆவியானவர் இன்றும் நமக்குள்ளே வாசம் பண்ணுகிறார்.  அவருடைய வல்லமை எப்படி இயேசுவிடம் கிரியை நடப்பித்ததோ அப்படியே இப்போதும் உங்களுக்குள்ளே நடப்பிக்கிறார். இதை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

பிலமோன் 1:6 “உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல் செய்கிறேன் ”

பரமபிதா உங்களுக்குள் இருக்கிறார்; இந்த நிஜத்தை ஏற்றுக்கொண்டு இதன்படியே உறுதியாக இருங்கள்.

எப்பொழுது நீங்கள் அவர் ஒருவரே உங்களுக்குள் காரியங்களை நடத்துகிறார் என்று அறிந்து கொள்வீர்களானால் உங்கள் வாழ்வில் எதை குறித்தும் போராட வேண்டிய அவசியமில்லை.

யோவான் 14:12 “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்”

உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் பெரிய கிரியைகளுக்கு வல்லமையாக இருக்கிறார்.  அவர் ஒருவரே உங்கள் அற்புதங்கள் நிறைந்த வாழ்விற்கும், தினமும் இயற்கைக்கு அப்பாற்பட்ட கிரியைகளுக்கும் போதுமானவராக இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் எங்களுக்குள் வாழ்வதால் எவ்வளவு மேன்மையாக நாம் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறோம். இதன் பொருள் என்னவென்றால் நாம் ஒரு போதும் பின்தங்கியவர்களாக இருக்கப்போவதில்லை மாறாக நாம் நித்தியமாய் வெற்றி பெற்றவர்களாக இருக்கிறோம்.

அறிக்கை

அன்பின் பரமபிதாவே, பரிசுத்த ஆவியானவர் எனக்குள் வாழ்ந்து கிரியைகளை எனக்குள்ளும், எனக்கூடாகவும் நடப்பிப்பதனால் உமக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர் என்னில் உள்ள ஒவ்வொரு உள்ளான பகுதியிலும் என் சரீரத்தில் உள்ள ஒவ்வொரு எலும்புகளிலும், மற்றும் என் இரத்தத்தில் உள்ள ஒவ்வொரு (துளி) கலங்களிலும் வாசம் பண்ணுகிறார். அவர் எனக்கூடாக நடக்கிறார், என் கண்களுக்கூடாக காண்கிறார், என்னக்கூடாக பேசுகிறார்,  எனக்கூடாக அன்பு கூருகிறார்.

அவர் என்னை தோற்கடிக்கப்பட முடியாதவனாய் உருவாக்கியிருக்கிறார்.

தேவன் ஆசீர்வதிக்கப்பட்டவர்!