(ரோமர் 5: 17)  “அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே”.  

தேவநீதி என்பது தேவசுபாவமாக இருக்கிறது;  அது தேவனிடமிருந்து இலவசமாக கிடைக்கிறது;  ஆனால் உண்மையாக பார்த்தால் அது தேவனை அறியாதவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படுகிறது. கிறிஸ்தவன் தேவ நீதியை பெற்றவன் அல்ல மாறாக தேவநீதியோடு பிறந்திருக்கிறான்.

      ரோமர் 5:17 இல், அப்போஸ்தலன் பவுல், பொதுவாக சட்டரீதியாக இங்கே விளக்குகிறார்;  ”ஆபிரகாம் விசுவாசித்தான்” அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது ஆனபடியினால் விசுவாசிகளான எங்களுக்கும் அப்படியே எண்ணப்படுகிறது; தேவநீதி இலவசமாக நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அது மாத்திரமே இறைவனால் இலவசமாக கொடுக்கப்பட்டது அல்ல.

        உதாரணமாக ரோமர் 6:23  ‘பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்`

        நித்தியஜீவன் பாவிகளுக்கு கொடுக்கப்பட்டது; கிறிஸ்தவர்களுக்கு அல்ல. நித்திய ஜீவனை பெற்ற பாவி கிறிஸ்தவனாக மாறுகிறான்.

கிறிஸ்தவன் என்பவன் நித்திய ஜீவனை இலவசமாய் பெற்றவன் அல்ல மாறாக நித்தியஜீவனை ஏற்கனவே உடையவன்;. பைபிள் சொல்லுகிறது விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவனை உடையவன்.

          ஒரு மனிதன் விசுவாசிக்கும் போது( உடனே) நித்திய ஜீவன் அவனுக்குள் ஆரம்பமாகிறது. ஆனபடியினால் நித்திய ஜீவன் அவனுக்கு கொடுக்கும் கொடையாக இராமல் நித்திய ஜீவனுக்குள்ளாய் பிறக்கிறான்.

கிறிஸ்துவை பெற்றுக் கொள்ளும் போதே நித்திய ஜீவனோடு தோன்றுகிறான்.

நீங்கள் உங்கள் தாயிடம் இருந்து பிறக்கும் போது, முதலில் நீங்கள். ஜீவனை பெற்ற பின்பு மனிதனாக பிறக்க வில்லை; நீங்கள் தோன்றும் போதே ஜீவனோடு வந்தீர்கள்; அது மனித ஜீவனே; இல்லாவிடில் நீங்கள் உயிரோடு பிறந்திருந்திருக்க மாட்டீர்கள்.

நினைத்துப் பாருங்கள் ஒருவர் இவ்வாறு சொன்னால் `

“இப்பொழுது குழந்தை பிறந்துள்ளது அதற்கு மனித ஜீவனை இலவசமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று” அது எவ்வளவு தவறானது.

         அதுபோலவே சட்டரீதியாக முழு உலகிற்கும் தேவநீதி இலவசமாய் கொடுக்கப்பட்டு உள்ளது; இந்த இலவச பரிசை நாம் பெற்றுக்கொள்ளும் போது, அது தேவனுக்கு முன்பாக எங்களை குற்ற உணர்வு, பயம், தாழ்வுமனப்பான்மை, கண்டனம் இல்லாதவர்களாய் நிற்க வைக்கிறது.

நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும்போதே அவன் தேவனால் பிறக்கிறான், அந்த ஜீவன் அவனுக்குள் கிரியை செய்கிறது.

        ஆபிரகாமுக்கு தேவநீதி இலவசமாக கொடுக்கப்பட்டது. அவன் தேவனை விசுவாசித்த படியினால் தேவ நீதி அவனுக்கு தரப்பட்டது.

ஆனால் மறுபடியும் பிறந்த மனிதன் பிறக்கும் போதே அவன் தேவநீதியோடு பிறக்கிறான். ஆதலினால் அவன் பிறந்த பின்பு நீதியை பெறுகிறவன் அல்ல. அவன் மறுபடியும் பிறக்கும் போதே நித்திய ஜீவனோடும் தேவ சுபாவத்தோடும் பிறக்கிறான்.

ஜெபம்

       அன்பின் பிதாவே என் சிந்தையிலே தேவ நீதியை குறித்து  உணர்த்துவதற்கும், அது என்னை பூமியில் உள்ள பிரச்சனைகள் அழிவுகள் மற்றும் எதிர்மறையான காரியங்களுக்கு மேலாக உயர்த்தி வைத்து இருப்பதற்காக உமக்கு நன்றி சொல்லுவேன்.

என் செயல்களில் எல்லாம் உம்முடைய நீதியை வெளிப்படுத்துகிறேன்; இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே. ஆமென்.