(யோனா 2:8). பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள். |
நீங்கள் எப்பொழுதாவது யோனவைப் பற்றி வாசித்திருக்கிறீர்களா? அவன் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் “நினிவே பட்டணத்துக்கு சென்று பிரசங்கம் பண்ணு” என்ற கட்டளைக்கு அவன் கீழ்ப்படியாதபடியால் பெரிய மீன் அவனை விழுங்கிக் கொண்டது. ஆயினும் அவன் மீனின் வயிற்றில், நெருக்கடியில் இருக்கும் பொழுதே, தேவன் தன்னை விடுவித்ததாக நன்றி தெரிவித்தான்.
யோனா “தேவனே என்னை விடுவியும்” என்று ஜெபிக்கவில்லை. அல்லது “தேவனே என்னை பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பீர்” என்று ஜெபிக்கவும் இல்லை. மாறாக “நீர் என்னை விடுவித்தீர் அதனால் உமக்கு நன்றி சொல்லுகிறேன்” என்று ஜெபித்தான். இப்படிப்பட்ட பேச்சு விசுவாசத்தினால் மாத்திரமே உண்டாகும். யோனா அத்தியாயம் 2 முழுவதையும் படியுங்கள். மிகவும் அருமையான வேதப்பகுதி. யோனா தேவனுடைய இரக்கங்களை நன்றாக அறிந்து தன்னுடைய மனதில் நிரப்பியிருந்தான். மற்றும் தன்னில் உள்ள ஊக்கமான விசுவாசத்தையும் நம்பியிருந்தான்.
யோனா 2:8 பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்.
இதைத்தான் பலர் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை; விசுவாச வார்த்தையை அறிக்கைபண்ணுவதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் உடலில் உள்ள வலிகளையும், தங்களுடைய சூழ்நிலைகளை பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வியாதிகளின், நோய்களின் அறிகுறிகளினால் அமிழ்ந்து போனதற்கு, பொய்யான மாயையை அவர்கள் பற்றிக்கொண்டதே காரணம். பொய்யான மாயை என்பது கிறிஸ்து இயேசுவுக்குள் புதிதாக சிருஷ்டிக்கப்பட்ட உங்களுக்கு ஏற்புடைய தேவனுடைய வார்த்தைக்கு எதிரானது. பொய்யான மாயை உங்க்களுக்கு சொல்வதை மறுதலியுங்கள். எவர்கள் பொய்யான மாயை கவனிக்கிறார்களோ அவர்கள் தேவனுடைய இரக்கங்களையும், கிருபையையும் விருதாவாக்குகிறார்கள். ஆதலினால் தேவனுடைய வல்லமை அவர்களுக்கு சார்பாக கிரியை செய்வதை தடைபண்ணுகிறார்கள்.
நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து உங்கள் குழந்தை வயிற்றிலிருந்து வெளியே உயிரோடு வர முடியாதன்றோ, உங்கள் உடலில் கட்டியோ, வியாதியோ உங்களால் உணரக்கூடியதாக இருந்தாலும்; அசையாது அந்த சூழ்நிலை எதிர்த்து நில்லுங்கள்; மற்றும் கிறிஸ்துவுக்குள் நீங்கள் யார் என்பதை வெளிப்படையாக அறிவியுங்கள். தேவனுடைய வார்த்தையை உறுதிப்படுத்துங்கள்.
யாத்திராகமம் 23:26. கர்ப்பம் விழுகிறதும் மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை; உன் ஆயுசுநாட்களைப் பூரணப்படுத்துவேன்.
இந்த வார்த்தையை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். இதுவே தினமும் உங்கள் வாயின் அறிக்கையாய் இருக்கட்டும். “நான் சுகமாக இருக்கிறேன்” என்றும் உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்து உடலிலுள்ள ஒவ்வொரு நோய்களையும், வியாதிகளையும் முற்றிலுமாக வந்த அடையாளம் தெரியாமல் அழித்து போடுகிறார் என்றும் அறிக்கை பண்ணுங்கள். நீங்கள் எதை சரீரத்தினாலே காண்கிறீர்களோ, உணருகிறீர்களோ அவை தேவ வார்த்தைக்கு எதிராக இருப்பின் அவைகள் உங்கள் வாழ்க்கையை வழி நடத்துவதை அனுமதியாதிருங்கள். உங்கள் சிந்தையும் கவனமும் தேவனுடைய வார்த்தையின் மேலேயே இருக்கட்டும். உங்கள் உடலிலும், உலகத்திலும் உள்ள பிரச்சனைகளை காட்டிலும் நீங்கள் பெரியவர்களாக இருக்கிறீர்கள். உங்களுக்கு எதிராக வேலை செய்கிற யாவற்றையும் நீங்கள் ஏற்கனவே வெற்றி பெற்று உள்ளீர்கள்.
1 யோவான் 4:4. பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். அல்லேலுயா!
அறிக்கை
தேவன் என் கன்மலையாய் இருக்கிறார். அவருக்குள் நான் என்றென்றும் பாதுகாப்பாக இருக்கிறேன். அவரே எனக்கு எல்லாமுமாய் இருக்கிறார். மற்றும் அவருக்குள் முடியாத காரியங்கள் ஒன்றுமே இல்லை என்பதை நான் நம்புகிறேன். எல்லா சந்ததிகள் மீதும் அவருடைய ஆளுகை தொடர்வதாக. அவருடைய வார்த்தையில் உள்ள எனது விசுவாசம் அசைக்கப்பட முடியாதது. ஏனெனில் அவருடைய வார்த்தை ஒரு போதும் தோற்றுப் போவது இல்லை. அல்லேலுயா.
மேலதிக வாசிப்பு .
ரோமர் 4:20-21; எபேசியர் 3:20-21