(யோசுவா 1:8). இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய். |
கிறிஸ்தவன் தேவனுடைய வார்த்தையை தியானிப்பது என்பது அவன் விரும்பினால் மாத்திரம் செய்வது அல்ல, மாறாக விடாது தொடர்ச்சியாக தியானிப்பது மிகவும் அவசியமானது.
தேவன் மேலே சொன்ன வசனத்தில் தியானத்தின் அவசியத்தையும் மற்றும் அது உங்கள் வாழ்வில் வேண்டியவைகளை எல்லாம் உருவாக்கும் என்பதை கோடிட்டுக் காட்டுகிறார்; அவையாவன எக்காலமும் செழிப்பும் மற்றும் நிலையான வெற்றியுமே.
கவலைக்கிடமாக, சில கிறிஸ்தவர்கள் தேவனுடைய வசனத்தை தியானிப்பதற்கு பதிலாக தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையே தியானிக்கிறார்கள். தேவனுடைய வார்த்தையை தியானிப்பது தம் வாழ்வில் நோக்கும் பிரச்சினைகளுக்கு மேலாக தம்மை உயர்த்த வல்லது என்பதை உணராமல் இருக்கிறார்கள். நீங்களோ பிரச்சினைகளை அல்லது சூழ்நிலையை சிந்தியாமல் எப்பொழுதும் தேவனுடைய வார்த்தையையே தியானியுங்கள்.
நீங்கள் காணும் சவால்களும் சூழ்நிலைகளும் நிஜம் அல்ல; அவைகளெல்லாம் மாறுகின்றதும் மாற்றப்படக்கூடியவகைகளுமே.
2 கொரிந்தியர்4:18 ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.
தேவனுடைய வார்த்தையானது “காணப்படாத” ஆனால் அதுவே நிஜமாக இருக்கிறது; அது மாத்திரமே வாழ்க்கையிலே நம்பக்கூடிய நிச்சயமான அஸ்திவாரமாக இருக்கிறது. உங்கள் கவனத்தை அதன்மீது மாத்திரமே வையுங்கள். சூழ்நிலைகள் உங்களை இயக்குவதையும், நகர்த்துவதையும் மறுதலியுங்கள்.
உங்கள் வாழ்வில் வார்த்தை மாத்திரமே வியாபித்திருக்கவும், உங்கள் சூழ்நிலைக்கு மேலாக உயர்த்துவதையும் மற்றும் மகிமையின் மேல் மகிமையை நோக்கி வழிநடத்தும் என்பதை (மனக்கண்கள்) காணுங்கள்.
அமைதியாக இருக்கும் வேளையில் வார்த்தையை சிந்தித்து கொண்டிருங்கள். சிந்திக்கும் வார்த்தையை உதட்டுக்குள் உச்சரியுங்கள். அடுத்து உச்சரிக்கும் வார்த்தையை உரத்து சத்தமிட்டு கர்ச்சியுங்க்கள். இவைகளே தியானத்தின் படிமுறைகள்.
தியானிக்கும் போது தூங்கி விடாதீர்கள். உங்கள் அறையில் உலாவிக்கொண்டு தியானியுங்கள். மற்றும் உங்கள் வாழ்விற்கு தேவன் வைத்திருக்கும் பூரண திட்டத்திற்கு அமைய உருவாக்கவல்ல சேர்ந்தியங்கும் வார்த்தைகளையே உங்களுக்குள் பேசிக் கொண்டு இருங்கள்.
உலகமானது எதிர்மறையான பேச்சுக்களாலும் சக்திகளாலும் நிறைந்திருக்கிறது ஆனால் அதற்கு எதிராக நீங்கள் உங்களுக்குள் இருக்கும் ஜீவா வல்லமையை அனுப்ப வேண்டும், அவைகள் உங்களது விசுவாசத்தினால் நிறைந்த வாயின் அறிக்கைகளே. நீங்களே கனிகள் நிறைந்த பெருக்கமும் வெற்றியும் உள்ள வாழ்க்கையை உங்கள் வார்த்தைகளினால் உருவாக்க வேண்டும். வேறு யாரும் அல்ல நீங்களே உங்களுக்கு இவைகளை செய்ய வேண்டும். உங்கள் வாழ்வின் வெற்றிக்கு தியானமே தேவன் தந்த செய்முறை படிமுறையாக இருக்கிறது இதனை தொடர்ச்சியாக செய்யுங்கள்.
அறிக்கை
என்னுடைய எதிர்காலம் கிறிஸ்துவுக்குள் பாதுகாப்பாக இருக்கிறது. எல்லாமே ஒன்றிணைந்து என்னுடைய நன்மைக்காகவே வேலை செய்கின்றது. ஏனெனில் நான் தேவனில் அன்பு கூருவதினாலும் அவரது தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டும் இருக்கிறேன். கிறிஸ்து எனக்குள் இருப்பதே எனக்கு மிகவும் மேன்மையான அனுகூலமாய் இருக்கிறது.
மேலதிக வாசிப்பு .
எசாயா 55:10,11 அப்போஸ்தலர் 20:32 1 தீமெத்தெயு 4:15