“ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் (யோவான் 8:36)”.

மேலே இயேசு கிறிஸ்துவினால் சொல்லப்பட்ட வசனமானது கிறிஸ்தவர்களுக்காக கூறப்பட்ட வசனம் அல்ல என்று பலபேர் அறிந்திருக்கவில்லை. கிறிஸ்தவனானவன் முன்பு விடுதலையாக்கப்பட்டவனோ, அல்லது இனிமேல்தான் விடுதலையாகப்போகிறவனோ அல்ல.
கிறிஸ்தவனுக்கு எங்கே இருந்து விடுதலை அல்லது எவரில் இருந்து விடுதலை?

கிறிஸ்தவன் என்பவன் புதிய சிருஷ்டியாக இருக்கிறான். அவன் உயிருதெழுந்த இயேசு கிறிஸ்துவிடம் இருந்து உருவாகி இருக்கிறான். அதனால் அவனுக்குள் உயிர்த்தெழுதலின் ஜீவன் கிரியை செய்கிறது.
அவன் சுதந்திரவாளியாக தேவனுடைய பிரசன்னத்தில், அவருடைய நீதியில் பிறந்திருக்கிறான். அல்லேலூயா!
2 கொரிந்தியர் 5:17 “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, (Behold) (மனக்கண்ணிற்கூடாக பாருங்கள்) எல்லாம் புதிதாயின”.

ஆயினும் வேத வார்த்தையைக்குறித்து அறிவின்மையால் சில கிறிஸ்தவர்கள் இன்னமும் விடுதலை வேண்டும் என்கின்ற சிந்தையிலே (deliverance mentality) சிக்கித்தவித்து, கட்டுக்களிலிருந்து (Bondage) விடுதலையை நோக்கி தொடர்ந்தும் அலைகிறவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் நிஜத்தில் கிறிஸ்தவனுக்கு கட்டுக்களில் இருந்து விடுதலை (deliverance) தேவையில்லை.

இயேசு கிறிஸ்து சிலுவையிலே மரித்து உயிர்த்தெழுந்தபடியால் முழு உலகமும் மீட்க்கப்பட்டுள்ளது.
இதை அறிந்துகொள்ளுங்கள். உலகத்திலே பிறந்த, இனிமேலும் பிறக்கப்பபோகிற யாவருக்காகவும் இயேசு கிறிஸ்து மரித்தார். அவர் மரணத்தை வென்று உயிர்த்தெழும்பொழுது சகல மனிதர்களுக்காகவும் உயிர்த்தெழுந்தார்.

இந்த கிறிஸ்துவின் இரட்சிப்பு எல்லா ஜனங்களுக்குமாக தயார்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த இரட்சிப்பு மனிதனுடைய வாழ்வின் அனுபவமாக மாறவேண்டுமானால்,
ரோமர் 10:9 இன்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை வாயினாலே அறிக்கைபண்ணவேண்டும். அந்த நிமிடமே அவன் பரலோக ஒளியின் இராட்சியத்திற்குள் கொண்டுவரப்பட்டு
மறுபடியும் பிறந்திருக்கிறான்.

அவனுடைய மனித ஜீவனானது அகற்றப்பட்டு அந்த இடத்தில் தேவனுடைய ஜீவனும், அவருடைய சுபாவமும் பெற்றவனாக பிறந்திருக்கிறான்.
இவனே கிறிஸ்தவன்.
இவன் பாவமில்லாமல் புதிதாக பிறந்தவன்.

இவனுக்கு இறந்த காலம் இல்லை. இவன் இப்பொழுதே தேவப்பிரசன்னத்தில் பிறந்திருக்கிறான். நிஜமாகவே வார்த்தையைக்கொண்டு தேவனால் ஈன்றெடுக்கப்பட்டவன்.

யாக்கோபு 1:18 இல், “அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்”.

1பேதுரு 1:23 இல் “அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே”.
இதுவே நிஜம்.
நீங்கள் சாத்தானை விட மேன்மையும் வல்லமையும் உள்ளவர்களாக பிறந்திருக்கிறீர்கள்.
அவன் ஒருபொழுதும் உங்களை கட்டிப்போட முடியாது. ஏனென்றால் நீங்கள் வார்த்தையின் ஜீவனை உடையவர்களாக இருக்கிறீர்கள். ஆனபடியினால் தேவனுடைய வார்த்தைக்குள் வாழுங்கள். தேவனுக்குள் உங்கள் வாழ்வை நன்கு ருசித்து அனுபவியுங்கள்.
அவர் உங்களை எப்படி அழைத்திருக்கிறாரோ அப்படியே இருக்கிறீர்கள். அல்லேலூயா!

ஜெபம்
————
அன்பின் தகப்பனே என்னை மறுபடியும், என்னை சுதந்திரவாளியாக ஆவியிலே ஜெனிப்பித்து எந்தவித தயக்கமோ கட்டுப்பாடுகளோ, பயமோ இல்லாமல் சந்தோஷத்தோடு உமக்கு ஊழியம் செய்ய எம்மை அழைத்ததற்காகவும் நன்றிகள். நான் தைரியமாக அதிகாரத்தோடு சாத்தானும் அவனுடைய சேனைகளையும் கீழ்ப்படுத்தி ஆளுகை செய்கிறேன். கிறிஸ்துவுக்குள் எனக்குத்தந்த வெற்றிக்காகவும், உம்முடைய மகிமை எனக்குள் இருந்து இப்பொழுதே வெளிப்படுவதற்காக உமக்கு நன்றிகள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே. ஆமேன்!

மேலதிக வாசிப்பு
2பேதுரு 1:4;
கொலேசெயர் 1:12-14

Thanks 🙏
Pas. Mahen