இயேசு கிறிஸ்து தமது நோக்கத்தையும் திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்றி விட்டார் !
—————///———///———

“உங்கள்பொருட்டு தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட உத்தியோகத்தின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன். புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.” (கொலோசெயர் 1:26,27)”.

இயேசு கிறிஸ்து தன்னுடைய நோக்கத்தையும், திட்டத்தையும் பரிபூரணமாக நிறைவேற்றி விட்டார் என்று வேதத்தில் மூன்று இடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது –
யோவான் 17:4 ம் வசனத்தில் பிதாவிடம் அவர் பேசும் பொழுது “ …நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்”.

இரண்டாவதாக – யோவான் 19:30 இல் “ எல்லாம் முடிந்தது” என்றார்.

மூன்றாவதாக – எபிரேயர் 10:12-13 “ இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார். ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்”.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்றும் (இப்பொழுதும்) உன்னதங்களிலே உட்கார்ந்து கொண்டு அவருடைய சத்துருக்களை பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்.
அவர் தன்னுடைய நோக்கங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றவில்லையாயின் அவர் உட்கார்ந்து இருக்கமாட்டார்.
ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால் பெரும்பாலான ஜனங்களுக்கு அவர் எதனை நிறைவேற்ற பூமிக்கு வந்தார் என்று அறியாது இருக்கிறார்கள்.

நீங்கள் எபேசியர் 3ம் அதிகாரம் 3 இலிருந்து 5ம் வசனம் வரை வாசிக்கும்பொழுது முன்பு இரகசியமாய் இருந்த அவருடைய திட்டங்களையும், நோக்கங்களையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அவரை குறித்து சொல்லப்பட்ட பல தீர்க்கதரிசனங்களை குறிப்பாக அவர் எப்பொழுது பூமியில் அவதரிப்பார் என்பதனையும் அவர் அத்தனை தீர்க்கதரிசனங்களையும் அவர் நிறைவேற்றுவார் என்றும் பல தீர்க்கதரிசிகள் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனாலும் அந்த தீர்க்கதரிசிகளுக்கு அவருடைய உண்மையான நோக்கம் ஒரு புரியாத புதிரான இரகசியமாக இருந்தது.

இந்த இரகசியம்தான் என்ன? அது மேலே குறிப்பிட்ட ஆதார வசனத்தில் இருக்கிறது. கிறிஸ்து உங்களுக்குள்ளே தமது மகிமையின் நம்பிக்கையாக வாசம்பண்ணுகிறார் என்பதே அந்த இரகசியம். இந்த இரகசியமே காலம் காலமாய் தலைமுறை தலைமுறையாய் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆயினும் இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியரங்கமாக்கப்பட்டு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக!
ஆகையினால் உங்கள் வாழ்வு மகிமை பொருந்தியதாக நிட்சயமாக இருக்கும் என்று உங்களுக்கு உறுதியும், உத்தரவாதமும் தரப்பட்டிருக்கிறது. ஏனென்றால் கிறிஸ்து உங்களுக்குள்ளேயே வாசம்பண்ணிக்கொண்டிருக்கிறார்.
இதுவே உங்கள் சுகவாழ்விற்கும், செழிப்பிற்கும், ஜீவனுள்ள வெற்றிகரமான வாழ்விற்கும் உங்கள் நம்பிக்கையாக இருக்கிறது.
நீங்கள் எந்த சிறையிருப்பில் இருந்தும், வறுமையிலிருந்தும், குறைவிலிருந்தும் நீங்கள் இப்பொழுதே வெளியேற முடியும். ஏனென்றால் உங்கள் சார்பாக இயேசு கிறிஸ்து இதனை செய்து முடித்தார்.
உங்களுக்கு தேவையானது ஒன்றே. எல்லா நேரமும் அவருடைய பிரசன்னமும், மகிமையும் உங்களுக்குள்ளே இருக்கிறது என்கிற சிந்தை உடையவர்களாக இருங்கள்.
ஆமேன்!

அறிக்கை
——————
தேவனுடைய மகிமையானது என்னுடைய பொருளாதாரம், என்னுடைய சுகம், வியாபாரம், குடும்பம் மற்றும் என்னுடைய ஊழியங்களில் இப்பொழுதே பிரகாசித்துக்கொண்டிருக்கிறது. கிறிஸ்து எனக்குள்ளே இருக்கிறார் என்பதே என்னுடைய சுகத்திற்கும், செழிப்பிற்கும், ஜீவனுள்ள வெற்றிகரமான வாழ்விற்கும் நம்பிக்கையாக இருக்கிறது. பிசாசையும், அதன் சேனைகளையும் ஆளுகைக்கு உட்படுத்தி அதிகாரம் செய்யும் வல்லமையை, நம்பிக்கையை தந்திருக்கிறது. அல்லேலூயா!

மேலதிக வாசிப்பு;
ரோமர் 8:10-11;
எபேசியர் 3:3-6;
யோவான் 10:10

Thanks 🙏
Pas. Mahen