தேவ நீதிக்குள் இருந்து கொண்டு ஆளுகை செய்வது !
—————///———///——-

“அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள்; இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.” (ரோமர் 5:17).

மறுபடியும் பிறந்த ஒவ்வொரு தேவனுடைய மகனும் (மகளும்) இப்பொழுதே இந்த வாழ்க்கையில் ராஜாவாக இருக்கின்றான்.
அவன் தேவ நீதிக்குள் வாழ்ந்துகொண்டு ஆளுகை செய்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறான். இலவசமாய் கிறிஸ்துவிடம் இருந்து பெற்றுக்கொண்ட நீதியானது உங்களை தேவனுக்கு முன்பாக தைரியமாக, குற்ற மனச்சாட்சி அற்றவர்களாக, அவரோடு உறவு கொண்டாடுவதற்கு உங்களைத் தகுதிப்படுத்தி இருக்கின்றது.

கிறிஸ்துவின் அதே நீதி உங்கள் ஆவியிலே ஊற்றப்பட்டிருக்கின்றது. இதனாலேயே உங்கள் விசுவாசத்திலிருந்து தைரியமும் நம்பிக்கையும் புறப்பட்டு வருகிறது.
இதனாலேதான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தைரியமாக எங்களுக்கு வேண்டியவைகளை கட்டளையிட்டு உருவாக்கிக் கொள்கின்றோம்.
எங்களிடம் உள்ள நீதி நாங்கள் செய்த கிரியைகளினால், நன்மைகளினாலே உண்டானது அல்ல; இயேசு கிறிஸ்து எங்களுக்காக செய்து முடித்த கிரியையினால் உண்டாயிருக்கிறது.
தேவன் தம்முடைய நீதியை காண்பிக்கும் பொருட்டாக எங்களுக்கு இலவசமாய் தம்முடைய நீதியை தந்திருக்கின்றார்.

(ரோமர் 3:25-26) “ தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்”. அல்லேலூயா!

இந்த தேவ நீதி எங்களை கீழ்ப்படுத்தி-ஆளுகை செய்யும் ராஜாக்களாக உருவாக்கியிருக்கின்றது. நாங்கள் பாதிக்கப்பட்ட பரிதாபத்திற்கு உரியவர்கள் அல்ல, மாறாக கிறிஸ்து இயேசுவுக்குள் வெற்றி வீரர்களாக இருக்கிறோம். இதனை யோவான் நன்கு அறிந்து இருந்தபடியினால் இப்படி எழுதி இருக்கின்றார்.

1யோவான் 4:4 இல் “ பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
தேவன் தம்முடைய நீதியின் சுபாவத்தை உங்களுக்குள் வைத்திருக்கின்றார். ஆகையினால் தான் நீங்களும் அவரைப் போலவே இருக்கின்றீர்கள்.
நீங்கள் தேவனால் பெற்றுக்கொண்ட அந்த அந்த சுபாவமே உங்களை அவரைப்போலவே சிந்திக்கவும், பார்க்கவும், பேசவும் வைத்திருக்கிறது.

நீங்கள் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நிலைக்கு உயர்த்தப்பட்டு இருக்கின்றீர்கள்.
எங்கள் ஆதார வசனத்தில் கூறியதுபோல, “…. கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே”.
நீங்கள் சாத்தானையும் உலகத்தின் காரணிகளையும் அடக்கி ஆளும் படிக்கு போதுமான கிருபையை இப்பொழுதே பெற்றிருக்கிறீர்கள்.
வேதம் சொல்லுகிறது, தேவன் உங்களை ராஜாவும், ராஜரீக ஆசாரியனுமாக மாற்றி இந்த பூமியிலே ஆளுகை செய்யும்படிக்கு வைத்திருக்கின்றார். ராஜாக்கள் அரச கட்டளைகளை அனுப்புவதன் மூலம் ஆளுகை செய்கின்றார்கள். பிரசங்கி 8:4 சொல்லுகின்றது; “ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு; நீர் என்ன செய்கிறீர் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்?” . ஆகையினால்தான் வேதம் சொல்லுகிறது நீங்கள் கட்டளையிட்டு உருவாக்கிக் கொள்கிறீர்கள்.

ஜெபம்
————
பரிசுத்தமும் நீதியும் உள்ள எங்கள் பிதாவே!
உம்முடைய நீதியை இலவசமாக எனக்கு தந்ததற்காக உமக்கு கோடான கோடி நன்றிகள். அந்த நீதி உமக்கு முன்பாக தைரியமாகவும், குற்றமற்றவனாகவும், கண்டிக்கப்பட முடியாதவனாய், தாழ்வு மனப்பான்மை இல்லாதவனாய் என்னை நிறுத்தியிருக்கிறது. இந்த நீதிக்குள் நான் ஆளுகை செய்து உம்முடைய நாமத்திற்கு மகிமையை கொண்டு வருகின்றேன். நான் வெற்றி மேல் வெற்றி பெற்று, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே உம்முடைய மகிமையை வெளிப்படுத்துகின்றேன்; இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே!

மேலதிக வாசிப்பு:
ரோமர் 5:17;
ரோமர் 5:20-21; வெளிப்படுத்தல் 5:20

Thanks 🙏
Pas. Mahen

One thought on “RIGHTEOUSNESS GIVES YOU DOMINION”
  1. This is the perfect website for everyone who hopes to understand this topic. You realize so much its almost hard to argue with you (not that I actually would want toÖHaHa). You certainly put a new spin on a subject thats been discussed for decades. Great stuff, just great!

Comments are closed.