தேவனுடைய கிருபை நிறைந்த வார்த்தை !
——————///———-///—-

“இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாகப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.
(அப்போஸ்த லர் 20:32)

தேவனுடைய வார்த்தையானது வரலாறுகளின், கதைகளின் தொகுப்பு மாத்திரம் அல்ல, தேவனுடைய வார்த்தையானது தேவன் உங்களோடு இப்பொழுதே பேசிக்கொண்டிருக்கிறார். அவர் என்ன சொல்லுகிறாரோ அது எங்களுடைய தற்போதைய வாழ்விற்கு பொருத்தமானதும், இந்த வார்த்தையை கொண்டு எங்கள் வாழ்க்கையை ஊன்றிக்கட்டி எழுப்ப முடியும்.
வேதத்தை நீங்கள் வாசிக்கும்பொழுது “ஆகையால் தேவன் சொல்லுகிறார்” என்று அடிக்கடி இந்த வார்த்தையை காண முடியும். இதன் அர்த்தம் என்ன்வென்றால் தேவனுடைய வார்த்தை இன்று நீங்கள் சந்திக்கும் சூழ்நிலைக்கு ஏற்ற பதிலாக இருக்கிறது. இந்த வார்த்தை உங்கள் சூழ்நிலையை நன்மைக்கேற்றவிதமாக மாற்றுகிறது.

மேலே சொன்ன வார்த்தையின்படி பவுலடிகளார் தேவனுடைய வார்த்தையின் மாற்றும் வல்லமையும், புதிய ஆசீர்வாதமான சூழ்நிலைக்குள்ளும் எடுத்துச்செல்லும் வாகனமாயும் இருக்கிறது. தேவ வார்த்தையானது உங்கள் ஆவியிலே தைரியத்தையும், மேன்மையையும், ஆளுகையையும் உண்டாக்குகிறது.

இயல்பாகவே பயந்த ஒரு மனிதனிடம் தேவ வார்த்தையை கற்றுக்கொடுப்பீர்களானால் அவருடைய பயம் நீங்கி அவருடைய ஆவியிலே வல்லமையும், அன்பும், தெளிந்த புத்தியும் உருவாகும்.
அதுவே தேவனுடைய வார்த்தையின் வல்லமையாக இருக்கிறது. தேவனுடைய எல்லா வார்த்தையுமே வல்லமை பொருந்தியதாக இருந்தாலும் அப்போஸ்தலர் பவுல் எழுதிய தேவனுடைய கிருபை நிறைந்த வார்த்தைகளே எங்கள் ஆவியிலே ஊன்றக்கட்டவும், மாறுதலையும் ஏற்படுத்தக்கூடியது.

தேவனுடைய கிருபை நிறைந்த வார்த்தையானது கிறிஸ்துவைக்குறித்தும், அவர் எங்கள் சார்பாக செய்து முடித்த இரட்சிப்பினால் (அவருடைய மரணம், அடக்கம், மற்றும் உயிர்த்தெழுதல்),
கிறிஸ்துவுக்குள் இன்று நாங்கள் எப்படி இருக்கிறோம்,
எவற்றை பெற்றிருக்கிறோம்,
இன்று எங்கே இருக்கிறோம் என்றும் எங்களுக்கு தெரியப்படுத்துகிறது. இதுவே எங்களைஆவிக்குரியவிதத்திலும், அறிவிலும் சரீரத்திலும், பொருளாதாரத்திலும், உணர்விலேயும் மற்றும் எங்கள் வாழ்வின் எல்லா பகுதிகளிலேயும் செழிப்பை உண்டாக்குகிறது. அல்லேலூயா!

தேவனுடைய வார்த்தையை முற்றுமுழுதாக கற்றுக்கொள்வதற்கு உங்களை அற்பணியுங்கள். எப்பொழுதும் தேவனுடைய வார்த்தையை சிந்தித்து அதனையே தியானித்துக்கொண்டிருங்கள்.
அப்படி தியானிக்கும்பொழுது பரிசுத்த ஆவியானவர் ஆவிக்குரிய இராட்சியத்தின் இரகசியங்களை உங்களுக்கு கற்றுத்தருவார்.
அவர் உங்களுக்குள் இருந்து வெளிப்படுத்தும் கிருபை நிறைந்த வார்த்தையானது நிரம்பி வழியும் செழிப்பை உங்கள் வாழ்வின் எல்லா பகுதியிலும் காண முடியும்.

ஜெபம்
————
அன்பின் தகப்பனே நான் உம்முடைய கிருபை உள்ள வார்த்தைக்கு என்னை ஒப்புக்கொடுப்பதினால் நான் ஊன்றக்கட்டப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, உற்சாகப்படுத்தப்பட்டு, மேன்மையான வாழ்வையும் வெற்றியையும் எப்பொழுதும் பெறுகிறேன். உம்முடைய கிருபை உள்ள வார்த்தையும் ஆவியானவருடைய ஆளுகையினாலும் என்னுடைய வளர்ச்சியானது; ஆவியிலும், சரீரத்திலும், சிந்தையிலும், உணர்விலும் மற்றும் என் பொருளாதரத்திலும் வெளிப்படுகிறது. நிரம்பி வழியும் செழிப்பு என் வாழ்வின் எல்லாப்பகுதியிலும் காணப்படுகிறது. உம்முடைய நாமத்திற்கே துதியும், கனமும், மகிமையும் உண்டாவதாக. ஆமேன்!

மேலதிக வாசிப்பு
1 தீமெத்தெயு 4:15; 1பேதுரு 2:2

Thanks 🙏
Pas. Mahen

One thought on “The Word Of His Grace”
  1. This is the perfect website for everyone who hopes to understand this topic. You realize so much its almost hard to argue with you (not that I actually would want toÖHaHa). You certainly put a new spin on a subject thats been discussed for decades. Great stuff, just great!

Comments are closed.