தேவன் அன்பாகவே இருக்கிறார்.

பிதாவாகிய தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை மனுஷருடைய பாவங்களுக்காக மரிப்பதற்குக் கொடுத்தார், அப்படி செய்ததின் மூலம் அவர் மனிதகுலத்தின் மீது கொண்ட அன்பினை வெளிப்படுத்தி அவரே உலகத்தின் இரட்சகராக இருக்கிறார்.
பைபிள் சொல்கிறது ” ….தேவன் அன்பாகவே இருக்கிறார்.
தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. (1 யோவான் அதிகாரம் 4 வசனம் 8-10)

இந்த சர்வலோக மனுக்குலத்தை படைத்த தந்தையாகிய தேவனின் மகிழ்ச்சி நம்மில் வசிப்பதும், நம்முடன் கூட்டுறவு கொள்வதும் ஆகும். ஆகையினால்தான் அவரது குமாரன் மூலம் மனுக்குலத்துக்கு இரட்சிப்பின் வழி உண்டாக்கப்பட்டது. எல்லா மனிதர்களிடமும் தேவன் எதிர்பார்ப்பதெல்லாம் இயேசு கிறிஸ்துவை தேவகுமாரன் என்று ஏற்றுக்கொள்வதும், அவரால் மட்டுமே இரட்சிப்பு உண்டு என்று விசுவாசிப்பதுமாகும். (1 யோவான் அதிகாரம் 4 வசனம் 15-16)

ரோமர் அதிகாரம் 10 வசனம் 9 கூறுகிறது, “… கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.”
அப்போஸ்தலர் அதிகாரம் 2 வசனம் 21 இல் “கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்”

ஆகவே நீங்கள் இப்போது கிறிஸ்து இயேசுவில் ஒரு புதிய வாழ்க்கையைப் பெற பின்வரும் இரட்சிப்பின் ஜெபத்தை ஜெபிக்கலாம்.

அன்புள்ள பரம தகப்பனே
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நான் உங்களிடம் வருகிறேன். கர்த்தராகிய இயேசுவை நான் என் வாயினால் அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று என் இருதயத்தில் விசுவாசிக்கிறேன், நான் என் வாழ்வின் ஆண்டவராக இருக்க இயேசுவை என் இதயத்தில் வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்த்துகள்! நீங்கள் மேலே உள்ள சிறிய ஜெபத்தினை ஜெபித்திருந்தால்; நீங்கள் இப்போது தேவனின் குழந்தையாக இப்பொழுதே பிறந்து விட்டீர்கள். வேத வார்த்தை சொன்னபடி நீங்கள் இப்பொழுது செய்த இந்த ஜெபத்தின்படி நீங்கள் இரட்சிக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது தேவனுடைய பிள்ளையாக ஒரு புது சிருஷ்ட்டியாக பிறந்திருக்கிறீர்கள்.
இயேசுவை நீங்கள் முழுமையாக நான் ஏற்றுக்கொண்டதினால் உங்கள் ஆவிக்குள் நித்திய ஜீவனைப் இப்பொழுதே பெற்றுக்கொண்டுள்ளீர்கள். அல்லேலூயா!”

I யோவான் 4 அதிகாரம் 4ம் வசனம் சொல்கிறது. பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.

ஒரு கிறிஸ்தவராக நீங்கள் எவ்வாறு வளரலாம் என்பது பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறவும் வேதத்தை மேலும் கற்றுக்கொள்ளவும் எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்.

One thought on “God is Love (1 John 4:16)”
  1. This is the perfect website for everyone who hopes to understand this topic. You realize so much its almost hard to argue with you (not that I actually would want toÖHaHa). You certainly put a new spin on a subject thats been discussed for decades. Great stuff, just great!

Comments are closed.