கிறிஸ்துவில் எங்கள் அடையாளம் !
————-///———-///——
கர்த்தராகிய தேவனின் வார்த்தையிலிருந்து நாம் மிக முக்கியமாக புரிந்து கொள்ளவேண்டிய வெளிப்பாடுகளில் ஒன்று, கிறிஸ்துவில் நாம் யார் இரடசிக்கப்பட்ட நாங்க எப்படிப்பட்ட மனிதர்களாக மாற்றப்பட்டிருக்கிறம் என்ற அறிவு சரியா இருக்கவேண்டும்.
கிறிஸ்துவுக்குள் நாம் யார் என்ற அடையாளத்தை கண்டுபிடிப்பதின்மூலம் நாம் எம்முடைய வாழ்க்கை முறையை மாற்றி கொள்ளமுடியும். அந்த சரியான வேத அறிவின் மூலம்தான் எமது துன்ப வாழ்க்கையில் இருந்து ஒரு மேன்யான வாழ்க்கையை பெற்று அனுபவிக்க முடியும்.
கிறிஸ்துவுக்குள் எங்களுடைய அடையாளத்தைப் புரிந்து கொள்ளாமல் இருந்தால், கிறிஸ்துவில் எமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைகளுக்கும், சலுகைகளுக்கும் மிகக் குறைவாகவே எம்மால் வாழ முடியும். கிறிஸ்துவுக்குள் உள்ள முழுமையான வாழ்வை எம்மால் வாழ முடியாது.
கிறிஸ்துவுக்குள் எம்மை அடையாளம் காண்பது என்றால் என்ன? ஒருவருடைய உண்மையான அடையாளத்தை கண்டுபிடிப்பதன்மூலம் அவரால் ஒரு நல்ல வாழ்ககை வாழ முடியும். கிறிஸ்த்துவுக்குள் நாம் யார் என்ற அறிவுதான் எம்மை தேவனோடு நாம் எப்படிபட்ட உறவோடு இருக்கிறோம் என்கிற தெளிவை தருகிறது.
நாம் கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்பட்டோம் என்று வேதம் கூறுகிறது (கலாத்தியர் 2:20). அப்படி அறையப்பட்டதோடு மட்டும் எமது வாழ்வு முடியவில்லை;
கல்வாரியில் சிலுவையில் நாம் அவருடன் இறந்தது மட்டுமல்லாமல், அவருடன் உயிர்ப்பிக்கப்பட்டோம் என்பதை பின்வரும் வசனங்களில் காணலாம்.
எபேசியர் 2: 1–9
1. அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.
4. தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,
5. அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.
7. கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.
8. கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
இதில எமது எந்த கிரியைகளும் இல்லவே இல்லை.
முழுக்க முழுக்க தேவனுடைய கிருபையும் ஈவும்தான் எங்களை கிறிஸ்துவோடு உயிர்த்தெழ செய்து உன்னதங்களில் உட்க்கார வைத்துள்ளது.
வேதத்தின் இந்த வசனத்தின்படி, நாம் கிறிஸ்துவுடன் உன்னதத்தில் அதாவது பரலோக அமர்ந்திருக்கிறோம் என்று வாசித்தோம். துரதிர்ஷ்டவசமாக, சில கிறிஸ்தவர்கள் தாங்கள் கிறிஸ்துவுக்குள் எப்படியாக மாற்றப்பட்டுள்ளோம் என்ற அடையாளத்தை அறிவதிலோ, அல்லது அறிந்த அந்த வேத வார்த்தைகளை விசுவாசிப்பதற்கோ முடியாமல் இருக்கிறார்கள்.
அவர்கள் கிறிஸ்துவில் யார் அல்லது அவர்கள் அமர்ந்திருக்கும் இடம் என்ன என்பதை. கிறிஸ்துவுக்குள் தங்களது அடையாளத்தை காண்பதற்குப் பதிலாக, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், தங்களது சொந்த அனுபவங்களையும் வைத்து அவர்கள் தங்களை அடையாளம் காண்கிறார்கள். அவர்கள் ஆவிக்குரிய கண்கள் கொண்டு தங்களை பார்ப்பதை விடுத்தது மாம்ச கண்ணால் காண்பதை வைத்து தங்கள் அடையாளத்தை மதிப்பிடுகிறார்கள். அதுதான் தமது வாழ்க்கை என்றும், அதுவே தமது அடையாளம் என்றும் தங்களை அவர்கள் அழைத்துக்கொள்கிறார்கள்.
கிறிஸ்துவில் நம்முடைய அடையாளத்தை நாம் உண்மையில் புரிந்துகொள்ளும்போது, நாம் தேவன் எப்படி எங்களை அழைக்கிறாரோ அதுபோலவே எங்கள் வாழ்க்கையும் அமைகிறது. அது எமது வாழ்க்கை முறையை மாற்றுகிறது.
2 கொரிந்தியர் 5:17 கூறுகிறது, “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.” அதாவது ஒருவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் அந்த நிமிடத்த்திலேயே அவர் உள்ளான மனிதனில் ஒரு புதிய நபராக பிறக்கிறார். அவர் முன் இருந்த மனிதானாக இனி இருப்பதில்லை. அவர்களுக்குள் ஒரு புதிய வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது!
நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு மரணத்திற்கு நியமிக்கப்பட்டவர்களாக இருந்தோம். ஆனால் ஒருவன் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போதே அவர்கள் தேவனோடு என்றென்றும் வாழக்கூடிய நித்திய வாழ்க்கையை பெற்றுக்கொள்கிறார்கள். இதுதான் இயேசு கிறிஸ்த்துவின் உண்மையான நற்செய்தி.
Thanks 🙏
Aunty Thavam (Hays).
TrMiaReE
pbOtLyFdo
ehCsnErPXFvTI
This is the perfect website for everyone who hopes to understand this topic. You realize so much its almost hard to argue with you (not that I actually would want toÖHaHa). You certainly put a new spin on a subject thats been discussed for decades. Great stuff, just great!