கிறிஸ்து நமக்காக எழுதிய உயில், உயிரடைந்து தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது !
————///——-///——-
“ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள் (1 கொரிந்தியர் 11:26)”.
நாம் ஒவ்வொரு தடவையும் திருவிருந்தில் பங்கு கொள்ளும் பொழுது புதிய உடன்படிக்கையின் உயிலை எழுதியவரின் மரணத்தை நினைவு கூறுகிறோம். கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே புதிய உடன்படிக்கையில் உருவான அந்த உயில், உயிர் அடைந்து செயற்படுகிறது என்பதை அறிவிக்கிறோம்.
அந்த உயில் அவருக்கு சொந்தமானது எல்லாம் உங்களுக்கு தரப்படுகிறது என்பதை அறிவிக்கின்றது. உயில் என்பது மரணிக்கப் போகும் அந்த மனிதனின் கடைசி விருப்பமாக இருக்கிறது.
அந்த மனிதனின் மரணச் சான்றிதழ் அந்த மனிதனின் அத்தனை சொத்துக்களையும் நீங்கள் அனுபவிப்பதற்கு திறவுகோலாக இருக்கிறது. அந்த மனிதன் மரித்தவுடன் அந்த உயில் உயிர் அடைகின்றது.
நாம் திருவிருந்தில் பங்கு கொள்ளும் பொழுது கிறிஸ்து எங்களுக்காக மரணித்ததை நினைவு கூறுகிறோம்.
அவர் எமக்காக மரணித்ததின் மூலம், எங்களுக்காக எழுதிய அந்த உயில் இப்பொழுது உயிர் கொண்டு செயல்பாட்டில் இருக்கிறது. ஆகவே பிசாசு கொண்டுவரும் எந்த தர்க்கத்துக்கும், எதிர்மறையான பேச்சுக்கும் இங்கே இடமில்லை. பிசாசினால் இதை எதிர்க்கவே முடியாது. அல்லேலூயா !
ஒவ்வொரு தடவையும் நீங்கள் திருவிருந்தில் பங்கு கொள்ளும் பொழுது நீங்கள் இயேசு கிறிஸ்துவின் மகிமை உள்ள வெற்றி பெற்ற அந்த மகத்தான வாழ்க்கையே அறிவிக்கின்றீர்கள் .
இந்தக் கணமே நிஜமாக இருக்கிற புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்கள் எல்லாம் நீங்கள் பெற்றுக் கொண்டு விட்டீர்கள் என்பதை தெரியப்படுத்துகின்றீர்கள்.
நீங்கள் ஆளுமை உள்ளவர்களாய் மகிமையிலே நடை போடுகிறீர்கள். ஏனென்றால் உங்களை மேற்கொள்ள இந்த உலகத்தில் எந்த வல்லமையினாலும் முடியாது.
எந்த நோயும், வியாதியும் உங்களுடைய சரீரத்திலே வெற்றிபெற முடியாது.
நீங்கள் வாழ வேண்டும் என்பதற்காகவே அவருடைய பரிசுத்த ரத்தம் உங்களுக்காக சிந்தப்பட்டது.
இப்பொழுது அவர் உயிரோடு இருப்பதால் நீங்களும் உயிரோடு இருக்கின்றீர்கள்.
இந்த திருவிருந்து என்பது நித்தியமாக முக்கியத்துவம் வாய்ந்தது; அது புதிய உடன்படிக்கையில் அவருடைய உயில் இப்பொழுதே செயல்படுகிறது என்பதை அறிவிக்கின்றது.
அறிக்கை
———————
பரிசுத்த தகப்பனே, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எனக்காக சிந்தப்பட்டதட்காகவும் அதன்மூலம் தேவனுடைய ஜீவனை உடையவனாய் வாழும் வாழ்வை தந்ததற்காகவும் உமக்கு நன்றி சொல்லுகிறேன். நான் உம்மோடு ஒருமித்து இருப்பதை கொண்டாடுகிறேன். எந்த வியாதியும் வருத்தமும் நோய்களும் என் சரீரத்தில் தங்கியிருக்க முடியாதென்பதற்காக உமக்கு நன்றி சொல்லுகிறேன். புதிய உடன்படிக்கையில் உள்ள எல்லா ஆசீர்வாதங்களும் என்னுடைய வாழ்க்கையிலே வெளிப்படுகின்றது. அது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் முத்திரையிடப்பட்டு உத்தரவாதம் தருகின்றது. அல்லேலூயா !
மேலதிக வாசிப்பு: கொலோசெயர் 1: 13 – 14;
1 யோவான் 5: 11-12
Thanks 🙏
Pas. Mahen