று காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.
17. அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை.
18. துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால்,
19. அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.  (நீதிமொழி 6:16-19 )

சிலருக்கு பொய் சொல்லும் பழக்கத்திற்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் மறுபடியும் பிறந்திருப்பதால் உங்களுக்கு பழைய சுபாவம் அகன்று இப்பொழுது புதிய, தேவ சுபாவம்  இருக்கின்றது. நீங்கள் பாவத்துக்கோ சாத்தானுக்கோ அடிமைகளாய் இல்லை. 

ரோமர் 6:14. “நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது”.

ஏனென்றால், நீங்கள் மரணத்திலிருந்தும் பாவப்பிரமாணத்தில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளீர்கள். சாதாரண மக்களை, இரட்சிக்கப்படாதவர்களை ஆளுகை செய்யும் பாவம் உங்கள் வாழ்க்கையில் செயலிளக்க செய்யப்பட்டுள்ளது.

 

ஆகவே எந்த கெட்ட பழக்கத்திற்கும் நீங்கள் “இல்லை” என்று சொல்ல முடியும். அது நீங்கள் சொன்னபடியே ஆகும். உங்களுக்கு தேவையானது ஒன்றே. அது என்னவென்றால் நீங்கள் வார்த்தையின்படி நடப்பேன் என்று எடுக்கும் தீர்மானமே. வார்த்தை சொல்லுகிறது, “பொய்யை தூரப்போடுங்கள் என்று” ஆகையால், நீங்கள் சொல்லவேண்டியது என்னவென்றால். “எந்த சூழ்நிலையாக  இருந்தாலும் சரி, நான் உண்மையை மட்டுமே பேசுவேன்” என்று.

 

நீங்கள் செய்யும் எந்த கெட்ட காரியங்களிலிருந்து உங்களால் உங்களை விடுவிக்க முடியும். நீங்கள் மனம் வைத்தால் எதையும் உங்களால் செய்யமுடியும்.

ரோமர் 6:14 “நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது”.

பாவம் இனி உங்களை அடிமைத்தனத்தில் வைத்திருக்க முடியாது. நீங்கள் விரும்பாததை உங்களைக்கொண்டு செய்யும் வல்லமை பாவத்திற்கு இல்லை. ஏனென்றால் நீங்கள் புதிய சிருஷ்டியாக இருக்கிறீர்கள். அல்லேலுயா! 

 

 எபேசியர் 4:24 இல் வேதம் சொல்கிறது, “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருப்பது மாத்திரமல்ல, நீங்கள் புதிய மனிதனை தரித்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வித்தியாசமானவர்கள் அதாவது தேவ சுபாவத்தை உடையவர்கள். தேவ சுபாவம் உடையவர்களாக நடந்து கொண்டு சத்தியத்தையே எப்பொழுதும் பேசுங்கள்.

ஜெபம் 

விலையேறப்பெற்ற எங்கள் பிதாவே; கிறிஸ்துவுக்குள் தந்த இந்த புதிய ஜீவனுக்காக (வாழ்வு) உமக்கு நன்றி.  இப்பொழுதே மெய்யான நீதியிலும், மெய்யான பரிசுத்தத்திலும் உருவாக்கப்பட்ட புதிய மனிதனை நான் தரித்துக்கொண்டிருக்கிறேன். நான் மாம்சத்தின் செயல்பாடுகளை களைந்து போட்டு உமது சத்திய வார்த்தைக்குள்ளும், அதன்படியும் வாழ்கிறேன். இந்த ஆவிக்குள்ளான விடுதலைக்குள் என்னை உட்படுத்தியத்தற்காக உமக்கு நன்றி. நான் இந்த புதிய வாழ்வுக்குள் மகிமையிலும், கிறிஸ்துவின் சுபாவத்திலும் நடைபோடுகிறேன்.  

இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே. ஆமேன்!

மேலதிக வேத வாசிப்பு: 

சகரியா 8:16; கொலேசெயர் 3:8-10; எபேசியர் 4:25