நான் தேவ வார்த்தையிலும், தேவ வார்த்தை என்னிலும் நிலைத்திருக்கின்றது. ஆகையினால் என்னுடைய எண்ணங்கள், நோக்கங்கள், என்னுடைய திட்டங்கள், என் இருதயத்தின் விருப்பங்கள் எல்லாம் தேவனுடைய விருப்புக்கு ஏற்றதாக அமைந்திருக்கின்றது.
நான் நல்ல சுகமாகவும், தெளிவாகவும் இருக்கின்றேன்.
நான் தெய்வீக சுகத்திலே வாழ்கின்றேன்.
வியாதிகளும், நோய்களும், மரணமும் எனக்கு அப்பாற்பட்டு மிகவும் தூரத்தில் இருக்கின்றன.
தேவனுடைய வார்த்தையானது என்னுடைய சரீரத்தில் உள்ள ஒவ்வொரு எலும்புகளிலும், ஒவ்வொரு துளி ரத்தத்திலும், என்னுடைய ஒவ்வொரு இருப்பிலும் வேலை செய்கின்றது.
நித்திய ஜீவன் எனக்குள்ளே வேலை செய்கின்றது என்று நான் அறிக்கை பண்ணுகிறேன்.
என்னுடைய சரீரத்தை நோக்கி பெலத்தை பேசுகின்றேன்.
என்னுடைய உள்ளான மனிதனில் உள்ள தேவ ஆவியானவரின் மகிமை உள்ள மகத்துவமான வல்லமையினால் நான் பலப்படுத்தப்பட்டு இருக்கின்றேன்.
என் சரீரத்தில் உள்ள ஒவ்வொரு அவையவங்களும் சீராக சரியாக வேலை செய்கின்றது.
என்னுடைய சரீரத்தில் உள்ள நரம்பு மண்டலங்கள், எலும்புகள் எல்லாம் தேவனுடைய வார்த்தையின் படி இயங்குகின்றன.
என்னுடைய சரீரத்தின் அவயவங்கள் எல்லாம் அவருக்குள் பரிபூரணமாக இருக்கின்றன.
அன்பின் தகப்பனே கிறிஸ்துவுக்குள் எனக்கு தந்த இந்தப் புதிய ஜீவனுக்காக உமக்கு மிக்க நன்றிகள்.
நான் மரணத்திலிருந்து ஜீவனுக்கும், பாவத்திலிருந்து நீதிக்கும், வியாதியிலிருந்து பரிபூரண சுகத்திற்கும் உட்படுத்தப்பட்டு இருக்கின்றேன்.
என்னுடைய தேவைகள் எல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் நிறைவாக வழங்கப்பட்டுள்ளது. நான் கிறிஸ்துவுக்குள் ஆச்சரியப்படத்தக்க, மகிழ்ச்சி மிக்க வாழ்க்கையை வாழ்கின்றேன்.
நான் கையிட்டுச் செய்யும் வேலைகள் எல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கின்றன.
நன்மையும் கிருபையும் என் வாழ்நாள் முழுவதும் என்னை தொடர்கின்றன. ஏனென்றால் தேவனுடைய கிருபையும் இரக்கமும் என்னை அளவிடமுடியாத நிறைவிலும், செழிப்பிலும், சமாதானத்திலும், சந்தோசத்திலும், பரிபூரண சுகத்திலும் தேவனுடைய வார்த்தையினாலும், ஆவியானவராலும் கொண்டுவந்து சேர்க்கப்பட்டிருக்கிறது .
நான் ஒவ்வொரு நாளும் இந்த சத்தியத்தில், நடக்கும் படிக்கு தீர்மானித்திருக்கிறேன். இயேசு கிறிஸ்துவிற்கு நன்றிகள்.
அல்லேலூயா !
எனக்குள் வாசமா இருக்கும் தேவனுடைய ஜீவனானது என் சரீரத்தில் தோன்றும் கேன்சர் கட்டிகள், தேவையில்லாத வளர்ச்சிகள் எல்லாவற்றையும் அழித்துப் போடுகின்றது.
என்னுடைய பெலமும் சுகமும் முற்றுமுழுதாக மறுசீரமைக்கப்பட்டு புத்துணர்ச்சி பெற்றிருக்கின்றது.
என் சரீரத்தில் தவறாக / பிழையாக செயல்படும் பகுதிகளுக்கு இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அனுமதி மறுக்கிறேன்.
எந்த கேன்சர் கட்டிகளும் என் சரீரத்திலே தோன்ற முடியாது. அன்பின் தகப்பனே உம் முடைய வார்த்தை எனக்குள் கலந்து என்னுடன் ஒன்றி இருக்கின்றது.
உம்முடைய vaர்த்தைகள் என்னுடைய ரத்த ஓட்டத்திலும், சரீரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பாய்ந்து என் சரீரத்தை சீரமைத்து மாற்றத்தைக் கொண்டு வருகின்றது.
தேவனே உம்முடைய வார்த்தை என் மாமிசத்திற்கு ஜீவனாக இருக்கின்றது.
நீர் வார்த்தையை அனுப்பி குணமாக்குகின்றீர். ஆகையினால் நான் சுகமானேன்.
நான் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை நான் பரிபூரணம் பெற்று விட்டேன்.
அல்லேலூயா !
Thanks 🙏
Pas. Mahen