சவுல் என்பவன் இன்னும் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்;
இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான்.
(அப்போஸ்தலர் 9:1-2 )
அப்போஸ்தலர் காலத்தில் ஜெப ஆலயம் ஏற்கனவே வழி (மார்க்கம்) என்று அழைக்கப் பட்டதை மேலுள்ள கோடிட்ட வசனத்திலிருந்து பார்க்கிறோம். இயேசு யோவான் 14:6 “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று சொன்ன பின்பு தேவாலயம் வழி என்று அழைக்கப்பட்டது.
இது மிகவும் சுவாரஸ்யமானது. இது அவருடன் எங்களை பிரிக்க முடியாத ஒற்றுமையை காட்டுகிறது. அவர் இருப்பது போல, நாம் இந்த உலகத்தில் இருக்கிறோம். இன்று நாங்களே ஜனங்களை பிதாவினிடத்திற்கு அழைத்துச் செல்லும் வழியாகவும் அவருடைய பிரசன்னத்திற்கு வழிகாட்டியாகவும் இருக்கிறோம். அல்லேலூயா!
திருச்சபையின் துன்புறுத்தலை அப்போஸ்தலர் பவுல் அப்போஸ்தலர் நடபடிகள் 22:4 இல் சொல்லியிருக்கிறார் “நான் இந்த வழியை பின்பற்றியவர்களாகிய புருஷர்களையும், ஸ்திரீகளையும் கைதுசெய்து சிறைச்சாலைகளில் ஒப்புவித்து மரண பரியந்தம் துன்பப்படுத்தினேன். மீண்டும் அப்போஸ்தலர் 24:14 இல் சொல்லியிருக்கிறார் “உன்னிடத்தில் ஒன்றை ஒத்துக் கொள்கிறேன். அது என்னவென்றால் இவர்கள் மத பேதம் என்று சொல்லுகின்ற வழியின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு வழிபாடு செய்து…” அவர்கள் முன்னால் தேவாலயத்தை வழி என்று அழைத்தார்கள். தேவன் தன்னைப்பற்றி விவரிக்கும்போது “நானே வழி என்று சொன்னார். ( யோவான் 14 6) ஒரு புதிய மற்றும் ஜீவனுள்ள வழி இயேசுவினால் வெளிப்படுத்தப்பட்டது. அத்துடன் நாங்கள் அவரின் நற்செய்தியை சுமந்து இருக்கிறாதினால் நாங்களும் வழியாய் (ஜனங்களுக்கு மார்க்கமாய்) இருக்கிறோம். இது மத சிந்தை உடையவர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததும், அதிகமானதாயும் (too much) இருக்கும்.
ஆனால் தேவனுடைய வார்த்தை இதனையே காண்பிக்கிறது. நாங்களே ஜனங்களை பிதாவினிடத்திற்கு அழைத்துச்செல்லும் வழியாக இருக்கிறோம். நாங்கள் ஜனங்களுக்கு தேவனுடைய பிரசன்னத்தை காண்பிப்பவர்கள், மாத்திரமல்ல அவர்களை அபிஷேகித்து அந்த தேவ பிரசன்னத்துக்குள் அழைத்துச் செல்பவர்களாகவும் இருக்கிறோம். தேவனுக்கே மகிமை!
ஒபதியா 1:21 சொல்கிறது “ஏசாவின் பர்வதத்தை நியாயந்தீர்ப்பதற்காக இரட்சகர்கள் சீயோன்பர்வதத்தில் வந்தேறுவார்கள்; அப்பொழுது ராஜ்யம் கர்த்தருடையதாய் இருக்கும்”. கவனியுங்கள், ஒரு மீட்பர் சீயோன் மலையில் இருந்து வருவார், என்று சொல்லவில்லை. பதிலாக இது பல “மீட்பர்கள்” என்று சொல்கிறது. அதன் கருத்து சீயோனிலிருந்து பல மீட்பர்கள் என்றும் மற்றும் நாங்களே அந்த தேவாலயமும் சீயோன் மலையில் இருந்து வருகிற இரட்சகர்களாகும். நாங்களே தேவ ஒழுங்குகளை கொண்டுள்ளவர்களாகவும், சுமப்பவர்களாகவும் அவற்றை பகிர்ந்தளிக்கிறவர்களாகவும் இருக்கிறோம். என்றென்றும் தேவனுக்கே துதி உண்டாவதாக.