ன் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 5:24)

 

ரணத்தின் சாபம் இந்த உலகிலே எல்லாவற்றின் மீதும் ஆளுகை செய்கிறது, அதனால்தான் உலகத்தில் உள்ள அத்தனை பொருட்களும் மங்கி அழிந்து போகிறது. னால் நீங்களோ மறுபடியும் பிறக்கும்பொழுது (Born again) மரண உலகத்தில் இருந்து விடுபட்டு நித்திய ஜீவன் என்ற உலகத்திற்கு மாற்றப்பட்டு விட்டீர்கள். 

 

இந்த காரணத்தினாலேயேதான் நீங்கள் வியாதிகளை முழுமனதோடும் மூர்க்கத்தோடும் எதிர்க்கவேண்டும். ஏனென்றால் வியாதி என்பது மரணத்தின்ரா அயுதமாயிருக்கிறது. இந்த வியாதிதான் படிப்படியாக மரணத்தை நோக்கி இழுத்து சொல்கிறது. வியாதி உங்கள் சரீரத்தை தாக்குமேயானால் எக்காரணத்தைக்கொண்டும் அதை ஏற்றுக்கொள்ளாதீரகள். வார்த்தையைக்கொண்டு, வார்த்தையின்படி எதிர்த்து நில்லுங்கள். உங்களுடைய பாதைகளிலே (வழியிலே) மரணம் இல்லை, இருள் இல்லை. ஆனபடியினால் இருள் சம்பத்தப்பட்ட எதற்கும் இடம்கொடாதிருங்கள். வேதம் சொல்கிறது; யாக்கோபு 4:7 இல் “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போய்விடுவான்” என்று எழுதியிருக்கிறது.

 

மேலே குறிப்பிட்ட அடிப்படை வசனமானது இயேசு கிறிஸ்துவின் வாயின் வார்த்தையாக இருக்கிறது. பின்பு அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டபோது புதிய உடன்படிக்கையின்படி திருச்சபை ஆரம்பமானது. இதே சத்தியத்தை அப்போஸ்தலர் பவுல் மறுபடியும் எதிரொலிக்கிறார். ரோமர் 8:1 இல்  “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை”. என்று எழுதியிருக்கிறது. 

 

தேவ வார்த்தையின்படி மாமிசத்தின்படி நடவாமல் வார்த்தியின்படி நடப்பவர்களுக்கு மரணமோ அல்லது ஆக்கினைத்தீர்ப்போ ஏன் இல்லை? அதற்கான பதில் அடுத்த வசனத்தில் உள்ளது. ரோமர் 8:2இன்படி “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே”. 

தேவனுக்கே மகிமை உண்டாவதாக!

இந்த உலகமானது பாவம் மரணம் என்கின்ற ஆளுகைக்குள் அகப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்களோ பாவம் மரணம் என்கின்ற ஆளுகைக்குள் (Law) உட்பட்டவர்கள் அல்ல. நீங்கள் ஜீவனுள்ள ஆவியின் பிரமாணத்திற்குட்பட்டு (அன்பின் பிரமாணம்) நித்திய ஜீவன் என்ற உலகத்தில், நித்திய ஜீவனாலே ஆளுகை செய்யப்படுகிறீர்கள். இந்த சத்தியத்தை இரவும் பகலும் தியானித்து உங்கள் ஆத்துமாவிலும், உங்கள் சரீரத்திலும் வெளிப்படுத்துங்கள். 

 

அறிக்கை

யேசு கிறிஸ்துவின் ஜீவனுள்ள ஆவியின் பிரமாணம் என்னை பாவம் மரணம் என்கின்ற பிரமாணத்தில் இருந்து விடுதலை ஆக்கிற்றே. நான் இப்பொழுது வாழ்வதோ ஜீவனுள்ள ஆவியின் பிரமாணத்தில். ஏனென்றால் நான் நித்திய ஜீவன் என்கின்ற உலகத்தில் என்றும் வாசம் பண்ணுகிறேன். என்னுடைய பாதையில் எந்த இருளோ அல்லது எந்த மரணமோ வருவதில்லை. நித்திய ஜீவன் என்னுடைய ஆவி, ஆத்மா, சரீரத்தில் வேலை செய்கிறது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே. ஆமேன்!

 

மேலதிக வாசிப்பு.

யோவான் 5:24; 1 யோவான் 5:11-13