“மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டது போல நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு அவருடைய மரணத்திற்கு உள்ளாக்கும் ஞானஸ்தானத்தினாலே கிறிஸ்துவுடனே கூட அடக்கம் பண்ணப்பட்டோம் (ரோமர் 6:4)
கிறிஸ்தவர்கள் உண்மையில் மீட்கப்பட்டவர்கள்
அல்ல என்பதை பலர் உணரவில்லை. கிறிஸ்தவம் மீட்பை பற்றியது அல்லது பாவத்திலிருந்து இரட்சிப்பை பெறுவது மட்டும் என்றால் இயேசு மரித்தோரிலிருந்து எழுந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. சிலுவையில் அவரது மரணம் போதுமானதாக இருந்திருக்கும். அது நம்முடைய எல்லா பாவங்களுக்கும் கிரயம் செலுத்தி முழுமையான கிருபாதார பலியை உத்தரவாதம் செய்தது. ஆனால் மீட்பு கிறிஸ்தவம் அல்ல. மீட்பு என்பது விலை கொடுத்து ஒருவரை காப்பாற்றி மீட்பதை குறிக்கிறது. ஆகவே இயேசு மரித்த போது மனுஷனுடைய மீட்பிற்காக தம் சொந்த ஜீவனை விலையாக கொடுத்தார். அவர் அனைத்து மனித குலத்திற்காகவும் அதை செய்தார். கிறிஸ்தவர்களுக்கு அல்ல,
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் விளைவாக / கனியாக வந்தவனே கிறிஸ்தவன். அவரது மரணத்தின் விளைவால் அல்ல. இதை கவனித்து பாருங்கள் .
இது உங்களை தெளிவுப்படுத்தும்….
இயேசு சிலுவையில் தொங்கியபோது தேவனுடைய சிந்தையில் ஒவ்வொரு மனுஷனும் அவரில் அவரோடு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தனர். ஏனென்றால் இயேசு நமக்கு ஈடாக / பிரதிநிதியாக இருந்தார். “முடிந்தது “ என்று இயேசு சத்தமிட்டு தன் ஆவியை விட்ட போது நாம் எல்லோரும் அவருக்குள் மரித்தோம்.. அவர் உயிர்த்தெழுந்து , கல்லறையில் இருந்து வெளியே வந்த போது நாமும் அவருக்குள் இருந்தோம். அல்லேலூயா!
இது பெரிய காரியம். இப்படி நடக்கப்போவதை சாத்தான் எதிர்பார்க்கவில்லை. தேவதூதர்கள் இன்னும் ஆச்சரியப்பட்டு அதை புரிந்து கொள்ள விரும்பினார்கள். கிறிஸ்தவம் இயேசுவின் உயிர்த்தெழுதலை அடிப்படையாகக் கொண்டது. அவருடைய மரணத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல. இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நமக்கு மீட்புக்கு அப்பாற்பட்ட ஒன்றை கொடுத்தது. அது நம்மை ஒரு புதிய வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றது. நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார் என்று எபேசியர் 2 ம் அதிகாரம் 5 ஆம் வசனம் கூறுகிறது. “கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கை விட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்” கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை விசுவாசிப்பதினாலும் அவரது தெய்வீக கர்த்தத்துவத்தை அறிக்கை பண்ணுவதால் நாம் மறுபடியும் ஒரு கிறிஸ்தவனாக புதிதாக பிறந்தோம் . வாயினால் அறிக்கை பண்ணுவதால் இரட்சிப்பு வருகிறது என்று ரோமர் 10ம் அதிகாரம் 9 ம் வசனம் கூறுகிறது.
ஆகவே உயிர்த்து எழுப்பப்பட்ட கிறிஸ்துவோடு தன்னை அடையாளம் கண்டு கொள்பவரே கிறிஸ்தவர். இவ்வாறு கிறிஸ்து மரித்தோரிலிருந்து ஒரு புதிய ஜீவனோடு உயிர்த்து எழுப்பப்பட்டது போல கிறிஸ்தவர்களுக்கும் கடந்த காலம் என்பது இல்லை.
2 கொரிந்தியர் 5 ம ஆம் அதிகாரம் 17 ஆம் வசனத்தில் வேதம் கூறுகிறது “இப்படியிருக்க ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான்” அவன் இதுவரை இல்லாத ஒரு புதிய உயிரினம் என்பது இதன் அர்த்தம். ஆகவே மறுபடியும் பிறந்த நீங்கள் மீட்கப்பட்டவர் அல்ல. நீங்கள் கிறிஸ்துவின் மீட்பு பணியின் விளைவாக வந்த பலன். மீட்பு அவரது மரணத்துடன் நிறைவு பெற்றது. ஆனால் கிறிஸ்தவம் உயிர்த்தெழுதலில் இருந்து வந்தது, ஆரம்பம் ஆகிறது .அல்லேலூயா!
அறிக்கை
பிதாவின் மகிமையால் கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டது போல நானும் அதில் நடப்பதற்காக ஒரு புதிய வாழ்க்கைக்கு எழுப்பப்பட்டிருக்கிறேன். நான் ஒரு புதிய சிருஷ்டி. கிறிஸ்துவுடன் ஒன்றாக எழுப்பப்பட்டு அவருடன் வெற்றி, அதிகாரம் மற்றும் ஆளுகையின் இடத்தில் என்றென்றும் அமர்ந்திருக்கிறேன் என்ற உணர்வோடு இருக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஆமென்
மேலும் தியானிக்க: 2 கொரிந்தியர் 5:17; கலாத்தியர் 2:20; ரோமர் 10:9-10