நான் தேவ வார்த்தையிலும், தேவ வார்த்தை என்னிலும் நிலைத்திருக்கின்றது. ஆகையினால் என்னுடைய எண்ணங்கள், நோக்கங்கள், என்னுடைய திட்டங்கள், என் இருதயத்தின் விருப்பங்கள் எல்லாம் தேவனுடைய விருப்புக்கு ஏற்றதாக அமைந்திருக்கின்றது. நான் நல்ல சுகமாகவும், தெளிவாகவும் இருக்கின்றேன். நான் தெய்வீக சுகத்திலே வாழ்கின்றேன். வியாதிகளும், நோய்களும், மரணமும் எனக்கு அப்பாற்பட்டு மிகவும் தூரத்தில் இருக்கின்றன. தேவனுடைய வார்த்தையானது என்னுடைய சரீரத்தில் உள்ள ஒவ்வொரு எலும்புகளிலும், ஒவ்வொரு துளி ரத்தத்திலும், என்னுடைய ஒவ்வொரு…