கிறிஸ்து எங்களுக்குள் பரிபூரணமாய் நிறைந்து இருக்கிறார் !
—————-///———-///——

“மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள். (கொலோசெயர் 2:10)”.

எப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொண்டீர்களோ அப்பொழுதே தேவனுடைய முழுமையையும் பெற்றுவிட்டீர்கள். உங்களுக்குள் தேவனுடைய நிறைவைத்தவிர வெறொன்றும் இல்லை. இது ஒரு மேன்மையான நிலை. ஆனபடியால்தான் நீங்கள் ஒருபொழுதும் தோற்றுபோவதோ அல்லது எதிரியினால் மேற்கொள்ளப்படவோ முடியாதவர்கள்.
இது ஒரு ஆச்சரியப்படத்தக்கது அல்ல.
நீங்கள் சாதாரண மனிதர்கள் அல்ல.
உங்கள் மனிதத்துவம் தேவனுடைய ஜீவனினாலும் அவருடைய சுபாவத்தினாலும் இப்பொழுது நிரம்பியுள்ளீர்கள்.

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் இருந்த தீர்க்கதரிசிகளோ அல்லது ஆசாரியர்களுக்கோ இல்லாத தன்மை (இல்லாத ஒன்று) எங்களுக்கு இருக்கிறது. அது என்னவென்றால் தேவ ஆவியானவருடைய பரிபூரணத்தை எங்களுக்குள் சுமந்து கொள்ளும் (தாங்கக்கூடிய) வல்லமையை பெற்றிருக்கிறோம்.
நீங்கள் இப்பொழுதே தேவன் வாழும் பலிபீடமாக இருக்கிறீர்கள்.
நீங்கள் அசையும்பொழுது தேவ ஆவியானவரே உங்களுக்குள் அசைகிறார். உங்களுடைய கரங்கள் அவருடைய கரங்களாய் இருக்கிறது. உங்களுடைய விரல்கள் அவருடைய விரல்களாய் இருகிறது.
நீங்கள் அவருக்குள் மூழ்கிப்போய் இருக்கிறீர்கள்.
அவர் உங்களுக்குள் மூழ்கிப்போய் இருக்கிறார். அவர் உங்கள் கண்களுக்கூடாக காண்கிறார், உங்கள் வாயினாலே பேசுகிறார். உங்கள் சரீரத்தினால் அசைவாடுகிறார்.
அவர் மனுசர்களுடைய வாழ்வை உங்களுக்கூடாக மாற்றுகிறார். ஆல்லேலுயா!

வேதம் சொல்கிறது யோவான் 1:16 இல் “அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்”.
நீங்கள் இப்பொழுதே இயேசு கிறிஸ்துவிடமிருந்த தெய்வீகத்தையும்,
சகல பரிபூரணத்தையும் பெற்றுள்ளீர்கள்.
அவரிடம் இருக்கின்ற எல்லா வல்லமை, மகிமை, மேன்மை, பலம் மற்றும்
ஞானம், மற்றும் எவையெல்லாம் இயேசுகிறிஸ்துவை
பிரதிநிதிப்படுத்துகிறதோ அவை யாவையும் நாங்கள் பெற்றுக்கொண்டுவிட்டோம்.
மேலே சொன்ன சத்திய வசனத்தின் படி
வாழ்கிறோம் என்கின்ற சிந்தை நிரம்பியவர்களாய், ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்நாளை களிப்பீர்களானால் மெய்யாகவே தேவ சுபாவத்தை உங்களுக்குள் இருந்து வெளிப்படுத்துவீர்கள்.

இயேசு கிறிஸ்து; யோவான் 5:26 இல் “ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவரா யிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவரா யிருக்கும்படி அருள் செய்திருக்கிறார்”.
இயேசு கிறிஸ்து எப்படி தேவனிடம் இருந்து மேலும் ஜீவனை பெற்றுக்கொள்ள வேண்டியதல்லாமல் இருந்ததோ (தேவனிடம் இருந்து ஏற்கனவே நிறைவான ஜீவனை பெற்றிருந்தார்), அதுபோலவே மேலே குறிப்பிட்ட வசனத்தின்படி (கொலோசெயர் 2:10) நீங்கள் இப்பொழுதே கிறிஸ்துவுக்குள் பரிபூரணமாக்கப்பட்டிருக்கிறீர்கள்.
இதனுடைய அர்த்தம் என்னவென்றால் அவர் எவற்றையெல்லாம் பெற்றிருந்தாரோ நாமும் அவை யாவையும் பெற்றுக்கொண்டுவிட்டோம்.
நீங்கள் கிறிஸ்துவினுடைய ஆற்றலை, ஞானத்தை, அறிவை, மகிமையை மற்றும் அவருடைய தேவ சுபாவத்தில் பங்குள்ளவர்களுமாய் இருக்கிறீர்கள்.

அதனால்தான்
1 யோவான் 4:17 இல் “……அவர் இருக்கிறபிரகாரமாய் இந்த உலகத்திலே இப்பொழுதே இருக்கிறோம்” என்று தைரியமாக சொன்னார்.
தேவனுக்கே மகிமை உண்டாவதாக!

ஜெபம்
————
ஆசீர்வதிக்கப்பட்ட எங்கள் பிதாவே! உம்முடைய பரிபூரணத்தினாலும் உம்முடைய ஞானத்தினாலும், ஆற்றலினாலும், கிருபையினாலும், வல்லமையினாலும், மற்றும் பெலத்தினாலும் எங்களை நிரப்பினீர் என்று அறியும்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. தெய்வீகத்தின் நிறைவை எங்களுக்குள் சுமக்கிறவர்களாய், உலகிற்கு அவற்றை வழங்குகிறவர்களாய் எங்களை உருவாக்கி இந்த மேன்மையை தந்ததற்காக மிக்க நன்றி. என்னுடைய உலகத்தில் உம்முடைய நீதியினால் உண்டான ஆளுகை மற்றும் வல்லமையை நான் வெளிப்படுத்துவேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே!
ஆமேன்.

மேலதிக வாசிப்பு;
கொலோசெயர் 1:19; கொலோசெயர் 2:9-10;
1 கொரிந்தியர் 3:16

Thanks 🙏
Pas. Mahen

Translate »